எழில், செழியன் வாழ்க்கையை சீரழிக்க ராதிகா செய்த சூழ்ச்சி.. கைவிட்ட கோபி.. அதிர்ச்சியில் பாக்கியா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் ஒன்றாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் கோபி இடம் எழில் மற்றும் செழியனின் வாழ்க்கை பற்றி பேச வேண்டும் என்று பாக்யா போக அங்கு ராதிகா சூழ்ச்சி செய்து கோபி பாக்யாவுக்கு உதவி செய்ய முடியாமல் செய்து விடுகிறார்.

அதே நேரத்தில் அமிர்தவோடு தான் நான் வாழுவேன் என்று பாக்யாவிடம் கணேஷ் பிரச்சனையை செய்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் ரூமில் ஜெனி குழந்தையை வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் பாக்கியா குழந்தையை துடைத்து விட வேண்டும் என்று டவலை எடுத்து தர கேட்க, அப்போது செழியன் இரு நான் எடுத்துட்டு வருகிறேன் என்று போகிறார். அதற்கு பாக்கியா, ஜெனி நான் உன்கிட்ட தான் கேட்டேன் என்று கோபமாக சொல்ல, அதற்கு ஜெனி என்ன ஆச்சு செழியன் ஏதோ தப்பு பண்ணி மாட்டிக்கிட்டானா? என்று கேட்கிறார்

அதற்கு ஆமா ஒரே ஆபீஸ் போறான் என்று குத்தலாக பேச, அதற்கு ஜெனி செழியனை தப்பு சொல்லாதீங்க என்று செழியனை விட்டுக் கொடுக்காமல் ஜெனி பேசுகிறார். அதைத்தொடர்ந்து வெளியே வரும் பாக்கியா செழியன் கிட்ட பாத்தியா அவ உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கான்னு பாத்தியா, அவளுக்கு போய் எப்படி துரோகம் பண்ண மனசு வந்துச்சு என்று திட்டுகிறார்.
அந்த நேரத்தில் மாலினி போன் செய்ய செழியனின் கைகள் நடுங்குகிறது. அதை பார்த்து கோபமான பாக்யா மீண்டும் செழியனை திட்டிக்கொண்டு இந்த போன் இருக்கிறது தான் பிரச்சனை என்று சொல்லி போனை பிடுங்கி கொண்டு செல்கிறார். அதைத்தொடர்ந்து ஈஸ்வரி கொசுக்கடியில் தூங்க முடியாமல் தவிக்கிறார். அப்போது கோபி ரூமுக்கு சென்று ராதிகாவை கீழே படுக்க வைப்பதற்காக பிளான் போட்டு நடித்து அதை செயல்படுத்துகிறார்.

அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் கோபி வாக்கிங் போகும் போது பாக்கியா, நம்ம பசங்களோட வாழ்க்கை பற்றி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று பேசுகிறார். அப்போது அங்கு ராதிகா வந்து கோபி பாக்யாவிடம் பேசவிடாமல் செய்கிறார். ஒரு கட்டத்தில் கோபி நீதான் சிங்க பெண்ணாச்சே எல்லாத்தையும் நீயே பார்த்துக்கோ, நீயே எழில் செழியன் பிரச்சனையை பார்த்துக்கொள் என்று சொல்ல அதனால் அங்கிருந்து கோபமாகி பாக்கியா கிளம்பி விடுகிறார்.
அடுத்ததாக கணேஷ் வீட்டிற்கு செல்லும் பாக்கியாவிடம் கணேஷ், அமிர்தா என்ன சொன்னா? வாரேனு சொன்னாளா? கண்டிப்பாக அமிர்தாவை பார்த்து நான் பேசுவேன் என்று கணேஷ் பேசிக்கொண்டே இருக்க, அதற்கு பாக்கியா அது எப்படி முடியும்? அமிர்தா எழிளோடு சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்கா என்று சொல்ல, அதற்கு கணேஷ் கோபப்படுகிறார்.

அப்போது கணேசனுடைய அம்மாவும் அமிர்தாவும் கணேசனும் சேர்ந்து பேசட்டும் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா நான் கண்டிப்பா வீட்டில பேசுறேன். எனக்கு ஒரு மாசம் டைம் வேணும் என்று கேட்கிறார். ஆரம்பத்தில் முடியாது என்று கணேசன் சொல்ல பிறகு அப்பா சொன்ன வார்த்தைக்காக சரி என்று ஒத்துக் கொள்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications