பாக்கியலட்சுமி: பட்டும் திருந்தாத குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாக்யா..ராதிகா எடுத்த நல்ல முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 21ஆம் தேதிக்கான எபிசோடில் கோபிக்கு ஜெயிலில் ஜாமீன் கிடைத்து விடுகிறது. அதே நேரத்தில் பாக்யாவிடம் மற்ற குடும்பத்தினரும் கேள்வி கேட்க, அதற்கு பாக்யா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபிக்கு ஜாமீன் கொடுக்கப்படுகிறது. அப்போது செழியனிடம் என்ன ஒரு நாள் ஃபுல்லா உங்க அம்மா ஸ்டேஷனில் உட்கார வச்சுட்டா அவளை சும்மா விடமாட்டேன் அவளை அந்த சந்தோசத்தை அனுபவிக்க விடமாட்டேன் என்று வன்மத்தோடு பேச அதற்கு செழியன் நீங்க பண்ணதும் தப்பு தானப்பா என்று சொல்ல, உடனே உங்க அம்மாவை சொன்னதை நம்பிகிட்டு என்கிட்ட கேள்வி கேக்குறியா என்று கோபப்படுகிறார்.

அப்போது கோபியின் நண்பரும் இப்போதைக்கு எதுவும் பாக்யா கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருக்காத என்று அட்வைஸ் பண்ண, நீ ஜாமீன் எடுத்ததற்கு நன்றி ஆனா இந்த விஷயத்தில தலையிடாதே என்று சொல்லிவிட்டு கோபமாக கிளம்புகிறார். மறுபக்கத்தில் இனியா ரூமில் இருந்து வேகமாக வந்து ஈஸ்வரியை கூப்பிட்டு டிவியை போட்டு காட்டுகிறார்.
அதில் பாக்யா நியூஸில் பேசியது வருகிறது. பத்திரிக்கையாளர்கள் ராதிகாவிற்கும் இதில் சம்பந்தம் இருக்கு என்றபடி பேசுகிறார்கள். பிறகு அக்கம் பக்கம் விசாரித்ததிலும் அடிக்கடி இந்த வீட்டில் போலீஸ் வரும் என்றும் தெரிவித்துள்ளனர். அதோடு ராதிகா, ஈஸ்வரி மீது ஏற்கனவே கொடுத்த கம்ப்ளைன்ட் பற்றியும் அதில் சொல்கின்றனர்.
இதைக்கேட்டு டென்ஷனான ஈஸ்வரி டிவியை ஆஃப் பண்ணி விடுகிறார். அதோடு இதற்கு தான் சொன்னேன் எதுவும் பேசாதன்னு கேட்டியா என்று ஈஸ்வரி திட்ட அதற்கு பாக்கியா என் ரெஸ்டாரன்ட் பிரச்சினையை மட்டும் தான் நான் பேசினேன். அதுக்கு இவங்க கண்ணுக்கு காது மூக்கு வச்சு பேசுனா நான் பொறுப்பேற்றுக்க முடியாது என்று சொல்லி விடுகிறார்.
அதற்கு ஈஸ்வரி நீ உன்னை பத்தி மட்டும் யோசிக்காத பாக்கியா நாளைக்கு இனியாவோட கல்யாணத்துல பிரச்சனை வரும் என்று சொல்ல, மத்தவங்களை பற்றி யோசித்து யோசித்து கஷ்டப்பட்டதெல்லாம் போதும் இனிமே நான் எனக்காக வாழப் போறேன் எனக்காக யோசிக்க போறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப அப்போது செழியன் வருகிறார்.

செழியனிடம் ஈஸ்வரி கோபி எப்படி இருக்கான் என்று கேட்க, அப்பாவே ரிலீஸ் பண்ணிட்டாங்க என்று செழியன் சொன்னதும் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். அதோடு இனிமே எந்த பிரச்சனையும் இல்லையே என்று ஈஸ்வரி கேட்க அப்படி எல்லாம் சொல்ல முடியாது பாட்டி ஜாமீன் மட்டும் தான் கொடுத்திருக்காங்க இதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு
என்று சொல்ல ஈஸ்வரி என்னவென்று கேட்டதும் பாக்கியாவை பார்க்கிறார்.
அம்மா கேஸை வாபஸ் வாங்கணும் என்று சொல்ல இனியா, ஈஸ்வரி, செழியன் எல்லோரும் பாக்கியாவிடன் ஒரு வாட்டி மன்னிச்சிடுங்க என்று கேட்க பாக்யா ரொம்ப சூப்பர் இவ்வளவு நாளா அவர் என்ன கஷ்டப்படுத்தும் போது உங்க யாருக்கும் எந்த வருத்தமும் வரல, ஆனா இப்ப நான் ஒரு அடி அவரை திருப்பி அடிக்கும்போது உங்க எல்லாருக்கும் வருத்தமா இருக்கா? உங்க அப்பா பண்ணுவது சரியா? தப்பா? என்று ஒரே வார்த்தையில் சொல்லும்படி பாக்யா கேட்க இனியாவும் செழியனும் தப்புதாமா.. ஆனா என்று சொல்ல வருகின்றனர். அதற்கு பாக்கியா ஆனால் எல்லாம் தேவையில்லை தப்பு தானே என்று சொல்லி விடுகிறார்.
அதோடு அந்த வானமே இடிஞ்சு விழுந்தாலும் அவர் மேல கொடுத்த கேஸை நான் வாபஸ் வாங்க மாட்டேன் என்று சொல்கிறார். மறுபக்கத்தில் ராதிகா டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது அதில் பாக்யா பிரச்சனைக்கு காரணம் ராதிகாவும் அவருடைய அம்மாவும் என்று சொல்ல ராதிகா அதிர்ச்சி ஆகிறார்.
உடனே ராதிகாவின் அம்மா நான் இப்போ போய் பாக்கியா கிட்ட இதை பத்தி பேச போறேன் என்று கிளம்ப அந்த நேரம் பார்த்து கோபியும் வருகிறார். கோபியை பார்த்ததும் இருங்க மாப்பிள்ளை நான் போய் உங்களுக்கு ஆரத்தி எடுத்துட்டு வரேன் என்று சொன்னதும் ராதிகா இவரு என்ன சுதந்திர போராட்டத்துக்கு போயிட்டு வராரா?

இவருக்கு ஆரத்தி மட்டும் தான் குறை. பண்றது எல்லாம் அயோக்கியத்தனம் என்று திட்டுகிறார். அதோடு உங்களால் நான் வெளியேவே தலை காட்ட முடியாத நிலைமை. அக்கம் பக்கம் இருக்கிறவங்க என்ன பத்தி என்ன எல்லாம் சொல்லுறாங்க தெரியுமா? நான்தான் உங்களை தப்பா கேட்டு இருந்து பிரிச்சுட்டேன்னு சொல்றாங்க.
நான் என்னுடைய பழைய வாழ்க்கையை மறந்து தானே உங்களோடு வாழ்ந்துட்டு இருந்தேன். ஆனால் நீங்க என்னை மேலும் மேலும் கஷ்டப்படுத்துறீங்க. உங்க மூஞ்சில முழிக்கவே பிடிக்கவில்லை என்று கோபப்பட்டு திட்டி விட்டு ரூமிற்க்குள் சென்று விடுகிறார். உடனே கோபி கோபமாக வீட்டில் இருந்து கிளம்பி பாக்யா வீட்டுக்கு வருகிறார்.
கமலா நானும் வருகிறேன் என்று சொல்ல, கோபி வர வேண்டாம் இதை நானே பேசுகிறேன் என்று சொல்லிவிடுகிறார். பிறகு பாக்யா வீட்டு வாசலில் வந்து கோபி கத்திக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications