பாக்கியலட்சுமி: ஈஸ்வரிக்கு நறுக்குனு பதிலடி கொடுத்த செல்வி.. ராதிகாவிடம் பாக்யா சொன்ன வார்த்தை
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 30ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை பாக்கியா, ராதிகாவிடம் சொல்லி இருக்கிறார். ராதிகா ஹாஸ்பிடலுக்கு வந்த இடத்தில் சில பிரச்சனைகள் நடந்தது. அது பற்றி பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஈஸ்வரி மற்றும் இனியாவை செழியன் வீட்டிற்கு கூப்பிட அதற்கு ஈஸ்வரி, என் பிள்ளை இங்க இப்படி இருக்கிறான் நான் வீட்டுக்கு போய் நிம்மதியா இருக்க முடியுமா? நான் வரல என்று சொல்ல, இனியா நானும் வரல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.

மறுபக்கத்தில் கோபியை தேடி ராதிகா அழைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகாவின் அம்மா ஃபோன் பண்ணி கோபி பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா என்று கேட்க நான் அதை பார்த்துக்கிறேன் நீ மயூவை கூட்டிட்டு வந்துரு என்று சொல்கிறார்.
அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த ஈஸ்வரிக்கு பாக்கியா சாப்பாடு செய்து கொடுக்கிறார். ஆனால் சாப்பிடாமல் ஈஸ்வரி யோசித்துக் கொண்டே, இப்போ நடக்கிறது எல்லாம் பார்க்கும் போது ஏதோ காரணத்தோட தான் நடக்கிறது என்று எனக்கு தெரியுது என்று ஃபீல் பண்ணி பேசிக் கொண்டு இருக்கிறார். அதை பார்த்து செல்வி கடுப்பாகிறார்.

பிறகு ஈஸ்வரி போனதும் பாக்கியாவிடம் பாருக்கா அவங்க பிள்ளைக்கு உடம்பு சரியில்லனதும் அவர் பண்ணுன எல்லா வேலையும் அந்த அம்மா மறந்துட்டாங்க என்று சொல்கிறார். உனக்கு துரோகம் பண்ணுன பிறகு நீ எப்படிக்கா அவர் உயிரை காப்பாற்றுன என்று பாக்யாவிடம் செல்வி கேட்கிறார். அதற்கு பாக்கியா அவருக்கு உடம்பு சரி இல்லைன்னு தெரிஞ்சிருந்தா நீ போயிருக்க மாட்டியா? என்று கேட்கிறார்.
அதற்கு செல்வி, நான் போய் இருப்பேன். ஆனா இதை போய் போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னேன் நெனச்சுக்கயே என்று இழுக்கிறார். அதற்கு பாக்கியா நான் அவருக்கு உதவி செஞ்சேன் அவ்வளவு தான். ஆனா அவர் மேல கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க மாட்டேன் என்று சொல்கிறார். அடுத்ததாக பாக்கியா ராதிகா வீட்டிற்கு போய் பார்க்கிறார்.
அங்கு யாரும் இல்லாததால் மீண்டும் ஹாஸ்பிடலுக்கு வந்து விடுகிறார். எழிலிடம் ராதிகாவிற்கு இது பற்றி சொல்ல வேண்டும் ஆனால் அவர் போன் ரீச் ஆகல. அவங்க வீட்டிலும் யாரும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டத்தில் ராதிகா சோர்வாக வீட்டிற்கு வந்து இருக்கிறார்.
அவருடைய அம்மாவும் மயூவும் வெளியே கடைக்கு போய் இருக்கிறார்கள். அவர்களுக்கு ராதிகா ஃபோன் செய்து கோபி இன்னும் கிடைக்கல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா ராதிகாவிற்கு போன் பண்ணி நீங்க ஹாஸ்பிடலுக்கு வாங்க என்று கூப்பிடுகிறார்.
ராதிகா என்ன விஷயம் என்று கேட்க பாக்கியா விஷயத்தை சொல்லாமல் நீங்கள் ஹாஸ்பிடலுக்கு வாங்க சொல்றேன் என்று சொல்கிறார். பிறகு ராதிகா ஹாஸ்பிடல் வந்ததும் கோபியை ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கிறேன் என்று சொல்கிறார். பாக்யா பேசிக் கொண்டிருக்கும்போது ராதிகா டக்கென்று ஹாஸ்பிடல் செல்கிறார்.
அங்கு ஈஸ்வரி ராதிகாவை பார்த்து இவ எதற்கு இங்கே வந்தா? இவளை கல்யாணம் பண்ணின பிறகு தான் என் பிள்ளைக்கு ரெண்டு தடவை ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு என்று கோபப்படுகிறார். அப்போது அங்கு வரும் நர்ஸ் ஈஸ்வரி கோபமாக திட்டுவதற்கு திட்டுகிறார்.
பிறகு பாக்கியா ராதிகாவை தனியாக கூட்டிட்டு சென்று கோபிக்கு கார் ஓட்டிட்டு இருக்கும்போது ஹார்ட் அட்டாக் வந்துருச்சு. எல்லாருக்கும் போன் ட்ரை பண்ணி இருக்காரு, யாரும் எடுக்காததால் எனக்கு போன் பண்ணுனாரு. நான் அவரை ஹாஸ்பிடலில் கொண்டு சேர்த்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு ராதிகா அழுது கொண்டு இருக்க பாக்கியா அவருக்கு ஆறுதல் சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications