பாக்யாவுக்கு மாலினி வைத்த ஆப்பு.. சூழ்நிலையை பயன்படுத்திய கோபி.. அதிர்ச்சியில் ஜெனி
Subscribe to Oneindia Tamil
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 6ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் மாலினி வீட்டிற்கு வந்து தனக்கும் செழியனுக்கும் தப்பான உறவு இருந்தது, தன்னை செழியன் ஏமாற்றி விட்டான் தனக்கு திருமணம் ஆனதே என்னிடம் முதலில் சொல்லவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டு வைக்கிறார்.
அதே நேரத்தில் மாலினி காட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஹாலில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் மாலினி வீட்டிற்கு வேகமாக வர அதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது பாக்கியா நீ எதற்காக இங்கே வந்திருக்கா என்று திட்டுகிறார். அதற்கு மாலினி ஏன் நான் வந்ததால் நீங்க பயப்படுறீங்களா என்று கேட்க, நான் ஏன் பயப்படனும் என்று பாக்கியா கேட்கிறார்.
கூடவே ராமமூர்த்தியும் திட்டுகிறார். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத மாலினி செழியனை கத்தி கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். அப்போது பாக்யா எதுக்கு இப்ப நடு வீட்டில் கத்துற முதலில் இங்கிருந்து போ என்று வெளியே துறத்துவதில் குறியாக இருக்க, மாலினி அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.
அப்போது செழியன் கீழே வருகிறார். செழியனை பார்த்ததும் தன்னைச் செழியன் ஏமாற்றி விட்டான் அவனுக்கு எனக்கும் தனிப்பட்ட ரீதியில் பழக்கம் இருக்கு என்று சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சி ஆகின்றனர். அதோடு கோபத்தில் ஈஸ்வரி எங்க பேரனை பத்தி எங்களுக்கு தெரியும். அப்படி எல்லாம் பண்ண மாட்டான்.
எங்க வந்து என்ன பேசிக்கிட்டு இருக்க. உனக்கு வேலை முடிஞ்சுட்டா போய்கிட்டே இரு. அதை விட்டுட்டு எங்க குடும்பத்துக்குள் குழப்பம் பண்ண மீண்டும் மீண்டும் வராத என்று திட்டுகிறார். அதற்கு மாலினி செழியனுக்கு முதலில் திருமணம் ஆனது எனக்கு தெரியவே செய்யாது. என்னிடம் திருமணம் ஆகவில்லை என்று சொல்லி தான் பழகினாரு.
மனசாட்சிப்படி நீங்க ரெட் கார்ட் கொடுக்கல.. போர் கொடி தூக்கிய விசித்திரா.. மாற்றப்பட்ட போட்டியாளர்கள்
ஜெனிக்கு குழந்தை பிறக்கும் போது தான் எனக்கு திருமணம் ஆனது தெரியும். ஆனாலும் எனக்கு ஜெனியை பிடிக்கவே இல்லை ஜெனியை டைவர்ஸ் பண்ணிட்டு உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். இருந்தாலும் இதை நாங்கள் நம்ப மாட்டோம் செழியன் அப்படிப்பட்ட பையன் கிடையாது என்று கோபி சொல்கிறார்.
அதற்கு ஒருவேளை செழியன் இப்படி செஞ்சிருந்தா நீங்க என்ன பண்ணுவீங்க? என்று கேட்க அதற்கு கோபி பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார். அதோடு எனக்கு ஒரு நியாயம் கிடைத்தே ஆகணும் என்று சொல்லி செழியனோடு தான் எடுத்த போட்டோ மற்றும் வீடியோக்களை காட்டுகிறார். அதை பார்த்த மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது.
ஜெனி மயக்கம் போட்டு விழ போக எல்லோரும் பிடித்துக் கொள்கின்றனர். அதோடு இந்த விஷயம் ஏற்கனவே பாக்கியாவிற்கு தெரியும் என்று சொல்ல, இதை கேட்டு மேலும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். செழியன் தப்பு பண்ணவில்லை என்று கதறிக் கொண்டிருக்கிறார். ஆனால் கண்ணீரோடு ஜெனி அதிர்ச்சியில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications