பாக்கியலட்சுமி: ஜெனி அம்மாவால் உடைபட்ட உண்மை.. செழியனுக்கு வந்த பிரச்சனை.. பாக்யா எடுத்த முடிவு
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 17ஆம் தேதிக்கான எபிசோடில் ஜெனியை கூட்டிட்டு போவதற்காக வந்திருந்த அம்மா பாக்யா சொல்லி தான் வந்ததாக ஜெனியிடம் உண்மைகளை சொல்கிறார். அதே நேரத்தில் செழியன் ஆபீஸில் அவருக்கு வேலை இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியை பார்ப்பதற்காக அவருடைய அம்மா பாக்யா வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரிடம் ஈஸ்வரி ஜெனியை நாங்க பார்த்துக்க மாட்டோம் என்று நினைக்கிறீர்களா? வீட்டில் அடுத்தடுத்து பல கஷ்டங்கள் வந்துகிட்டே இருக்கு இந்த நேரத்தில் ஜெனியையும் வீட்டை விட்டு கூட்டிட்டு போகனுமா? அந்த குழந்தை முகத்தை பார்க்கும்போதுதான் மனம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கு.

ஆனால் இப்போ குழந்தையும் வீட்டிலிருந்து போயிட்டா... என்று ஃபீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு ஜெனியின் அம்மா நீங்களே கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ஜெனி இப்போ கர்ப்பமா இருக்குறா. இந்த நேரத்தில் அவளுக்கு அடுத்தடுத்த கஷ்டங்கள் வந்து கொண்டே இருந்தால் அவள் எத்தனை தான் தாங்குவாள். அவள் அவளை கவனித்துக் கொள்வதே கிடையாது என்று சொல்ல, சரி என்று ஈஸ்வரி சொல்லி விடுகிறார்.
பிறகு பாக்கியா ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜெனி நான் இந்த நேரத்தில் வீட்டில் இருந்து போனால் சரியா வராது என்று சொல்ல, அதற்கு பாக்கியா நான் சொன்னா நீ கேட்பதானே நீ கண்டிப்பா இப்போ அம்மா வீட்டுக்கு போ. ஒரு பத்து நாளைக்கு இருந்துட்டு வா எல்லாம் சரியாயிடும் என்று சொல்கிறார். செழியனிடமும் ஜெனி போயிட்டு வரட்டும் என்று சொல்ல செழியனும் சரி என்று சொல்லிவிடுகிறார்.

அடுத்ததாக ஜெனியின் துணிகளை எல்லாம் எடுத்து அடுக்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய அம்மாவிடம் நீ என்னை ஏன் இப்ப கூட்டிட்டு போற என்று கேட்க அதற்கு ஜெனியின் அம்மா பாக்கியா தான் போன் பண்ணி உன்னை கூட்டிட்டு போக சொன்னாங்க என்று உண்மைகளை சொல்லி விடுகிறார். இதனால் கீழே வந்த ஜெனி நான் உங்களுக்கு பிரச்சனையா போயிட்டேனா?
இந்த வீட்டில் எல்லோரும் சந்தோஷமா இருக்கும்போது நானும் இருக்கணும், பிரச்சனை வந்தா மட்டும் தான் வெளியே போகணுமா? என்று எமோஷனலாக பேசுகிறார். இதனால் ஈஸ்வரியும், பாக்யாவும் கண்கலங்குகின்றனர். பிறகு பாக்கியா நீ எங்கும் போக வேண்டாம் இங்கே இரு என்று ஜெனியை கட்டிப்பிடித்து சொல்கிறார்.

இதைத்தொடர்ந்து பாக்யா ரெஸ்டாரண்டுக்கு சென்று ரெஸ்டாரண்டை பார்த்து பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது எழில் அங்கே வர செல்வி அவரிடம் இன்னும் 8 லட்சம் ரூபாய் வேண்டும் என்ற விஷயத்தை சொல்கிறார். அப்போது பழனிசாமியும் அங்கு வருகிறார். அவரும் அடுத்து என்ன செய்யலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பணம் உதவி ஏதாவது செய்ய வேண்டுமா? என்று கேட்க, அதற்கு பாக்யா வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.
இறுதியாக ஜெனி, செழியனுக்கு போன் பண்ணி ஆன்ட்டி இப்படி பிரச்சனையில் இருக்கும்போது நீ என்ன செய்யப் போற என்று கேட்கிறார். அவருக்கு செழியன் ஏதாவது உதவி செய்யணும் என்றுதான் நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஜெனி சேவிங்கில் இருக்கும் பணத்தை எடுத்து கொடுத்துடு என்று சொல்கிறார். அந்த நேரத்தில் செழியனை ஆபிஸ் உள்ளே கூப்பிடு அவர்களிடம் உங்களுக்கு வேலை இல்லை என்று சொல்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.













Click it and Unblock the Notifications