பாக்கியலட்சுமி: கடைசியில் பாக்யாவுக்கு கிடைத்த உதவி.. என்ட்ரி கொடுத்த நபர்.. அதிர்ச்சியில் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 23ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரண்டில் மக்கள் பிரச்சனை செய்த போது பாக்கியாவிற்கு உதவி செய்ய அவருடைய பழைய மேனேஜர் வந்திருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத கோபி அதிர்ச்சியில் இருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வந்த கஸ்டமர்ஸ் பாக்கியா பணம் தரவில்லை என்றால் ரெஸ்டாரண்டை அடித்து நொறுக்குவோம் என்று சண்டை போடுகின்றனர். போலீஸிடம் எழில் மற்றும் பாக்கியா அவர்களை சமாதானம் செய்ங்க சார் என்று வேண்டுகோள் வைக்க அவர்கள் சமாதானம் செய்தும் கஸ்டமர்ஸ் கேட்கவில்லை.

அந்த நேரத்தில் பாக்கியா பேங்க் மேனேஜருக்கு கால் பண்ண அவர் போனை எடுக்காமல் இருக்கிறார். இதனால் பாக்யா அதிர்ச்சியில் இருக்கிறார். ஆனால் தொடர்ந்து அவருக்கு போன் செய்து கொண்டே இருக்க இறுதியில் அவர் போனை எடுத்து விடுகிறார். அவரிடம் நீங்க சாயங்காலம் பணம் தரேன்னு சொன்னீங்களே சார் அதை இப்ப கொடுத்தா நல்லா இருக்கும் கஸ்டமர்ஸ் கடையில் வந்து பிரச்சனை பண்ணுறாங்க என்று சொல்ல, பத்து நிமிஷம் பொறுத்துக்கோங்க நான் பணத்தை கொடுத்து அனுப்புறேன் என்று சொல்கிறார்.

அதுபோல பாக்கியா கஸ்டமர்களிடம் பத்து நிமிடம் பொறுத்துக்கோங்க என்று சொல்ல கஸ்டமர்ஸ் கோவத்தில் காத்திருக்கின்றனர். ஆனால் பத்து நிமிடம் கடந்த பிறகும் பணம் வராததால் மீண்டும் அவர்கள் பிரச்சினை பண்ணுகின்றனர். அந்த நேரத்தில் மேனேஜர் வந்து பணத்தை கொடுக்கிறார்.
அதற்கு பிறகு எல்லா பணத்தையும் கஸ்டமர்களிடம் கொடுத்து அவர்களை அங்கிருந்து அனுப்புகிறார். பிறகு பழனிச்சாமி பாக்கியாவை வந்து சந்திக்கிறார். அப்போது பாக்கியாவிடம் மேடம் நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களா? நீங்க கடன் யார் யாரிடமும் கேட்கிறீங்க என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டேங்கிறீங்க.

நான் பணம் தரேன்னு சொன்னா கூட நீங்க வாங்கிக்க மாட்டிக்கீங்க, என்னை அடுத்தவங்களா நினைக்கிறீங்களா? என்று கேட்க நான் உங்களை அடுத்தவங்களா நினைக்கல என்பதால்தான் உங்களிடம் பணம் கேட்கல. நெருங்கியவர்களிடம் பணம் வாங்கினால் அது சரியா இருக்காது என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து கோபிக்கு ரெஸ்டாரண்டில் வேலை பார்க்கும் நபர் போன் செய்து பாக்கியா பணத்தை கொடுத்து பிரச்சினையை சரி செஞ்சுட்டாங்க என்று சொல்ல கோபி அதிர்ச்சியில் இருக்கிறார். அப்போது செழியன் கோபியை வந்து சந்திக்க அவரிடம் தான் வேலைக்கு ரெடி செய்த நபர் நாளைக்கு உன்னிடம் பேசுவான் என்று சொல்லிச் சொல்லி அனுப்பி வைக்கிறார்.
பிறகு கோபியின் நண்பரிடம் நான் பாக்கியா வளர்ச்சியை தடுக்கறதுக்காக தான் பிளான் போட்டேன் செழியனுக்கு வேலை வாங்கி தாரேன் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல அதற்கு அவர் திட்டுகிறார். பாக்கியாவை பழி வாங்குவதற்காக உன்னுடைய சொந்த மகனையே நீ பலிகடா ஆக்குற என்று திட்டிக் கொண்டிருக்க அதற்கு கோபி நான் பாக்கியாவை பலி வாங்கியே ஆகுவேன் என்று சபதம் போடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications