பாக்கியலட்சுமி: பட்டும் திருந்தாத பாக்யாவுக்கு செம கேள்வி கேட்ட ஈஸ்வரி.. செல்வி கண்டுபிடித்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 30ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியா மீண்டும் பெரிய ஆர்டர் எடுக்க முயற்சி செய்கிறார். அதே நேரத்தில் கோபி மீது தனக்கு இருக்கும் சந்தேகத்தை பற்றி செல்வி பாக்யாவிடம் சொல்லி இருக்கிறார். இதனால் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரியும் செல்வியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செல்வி எனக்கு கோபி சார் மீது சந்தேகம் அவர்தான் நீ பிரச்சனையில் சிக்கனும் என்று இப்படி பண்ணி இருப்பாருன்னு தோணுது என்று சொல்ல, அதற்கு பாக்கியா பட்டும் திருந்தாமல் எனக்கு கெட்டது நடக்கணும்னு அவர் நினைக்கிறவர்தான், ஆனால் இந்த அளவிற்கு செய்யற மோசமான ஆளு கிடையாது என்று சப்போர்ட் செய்கிறார்.

அதற்கு செல்வி எனக்கு கோபி சார் மீது மட்டுமல்ல அந்த செஃப் மீதும் சந்தேகம் இருக்கு. அன்னைக்கு அவ்வளவு பிரச்சனை நடக்கும்போதும் அவர் ஒதுங்கி நின்னு பார்த்துட்டு அப்புறம் சொல்லாம கொள்ளாம ஓடி போயிட்டாரு என்று சொல்ல, அதற்கு பாக்கியா ஏன் பயந்து கூட பேசாம போயிருக்கலாமே என்று அந்த செஃப்க்கு சப்போர்ட் செய்கிறார்.
மறுபக்கத்தில் எழில் புரொடியூசர் வந்து சந்தித்து பட பூஜை பற்றி பேசிவிட்டு போகிறார். அவர் போனதும் கோபி அங்கு வருகிறார். அவரைப் பார்த்து ப்ரொடியூசர் நீ செய்த உதவியை ஏன் உன்னுடைய மகனுக்கு தெரிய வேண்டாம் என்று நினைக்கிறே என்று கேட்க, அதற்கு கோபி அவனுக்கு தெரிய வேண்டிய நேரத்தில் கண்டிப்பா நான் சொல்வேன் என்று வில்லத்தனமாக சிரிக்கிறார்.

இதனால் கோபி பெரிய திட்டம் போடுகிறார் என்று தெரிகிறது. அதை தொடர்ந்து ஜெனி பாக்கியாவிற்கு போன் போட அவர் வீட்டிற்குள் வருகிறார். அப்போது செல்வி செஃப்பை பார்த்தியா அக்கா என்று கேட்க, ஆமா அவர் ரொம்ப பயந்துட்டு இருக்காரு நாளிலிருந்து வேலைக்கு வந்துருவாரு என்று சொல்கிறார்.
அதோடு தான் ஆயுத பூஜைக்கு ஸ்வீட் ஆர்டர் எடுக்க போவதாக சொல்ல ஈஸ்வரி இப்பதானே இவ்ளோ பெரிய பிரச்சனை நடந்திருக்கு. அடுத்ததா மறுபடியும் பெரிய ஆர்டர் எடுக்கணுமா என்று கேட்கிறார். அதற்கு பாக்யா இந்த நேரத்தில் தான் கண்டிப்பா நாம ஆர்டர் எடுக்கணும் ஆனால் அதற்கும் நீங்கதான வந்து விளக்கேத்தனும், ஈஸ்வரி ரெஸ்டாரன்ட்க்கு இருக்கிற கெட்ட பெயர் போகணும் என்று சொல்கிறார்.

அதற்கு ஈஸ்வரி உனக்கு அறிவில்லையா நான் ஒரு தடவை பண்ணனுன செயலால் இப்ப வரைக்கும் கஷ்டப்படுற. மீண்டும் மீண்டும் என்னால் வந்து உனக்கு தொந்தரவு இருக்க முடியாது என்று திட்டுகிறார். மறுபக்கத்தில் இனியா டான்ஸ் மாஸ்டரிடம் டான்ஸ் கற்றுக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு ஸ்டெப் ஸ்பீடாக வரவில்லை என்று அவர் திட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு இனியா டான்ஸ் ஆடுவதை பார்த்து கோபி சந்தோஷப்படுகிறார். மறுபக்கத்தில் எழில் தன் உடைய படத்திற்கான பூஜை விரைவில் நடக்கப் போகிறது என்று பாக்யாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications