பாக்கியலட்சுமி: ராமமூர்த்தி உடலை பார்த்து எழில் கேட்ட கேள்வி! அதிர்ச்சியில் ஈஸ்வரி.. கோபியின் மனமாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் மூன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராமமூர்த்தி இறந்து போய்விட்டார் என்பதை தெரிந்து கொண்ட எழில் பாக்யாவின் வீட்டிற்கு வந்திருக்கிறார். அதே நேரத்தில் பழனிச்சாமியிடம் கோபி மனம் மாறி இருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடிலும் ராமமூர்த்தியின் உடலை பார்த்து எல்லோரும் அழுது கொண்டுதான் இருக்கிறார்கள். மறுபக்கத்தில் எழில் நிலா உடன் ஹோட்டலில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் செழியன் போன் செய்ய, என்ன இந்த நேரத்தில் போன் செய்திருக்க என்று எழில் கேட்க.. தாத்தா தவறிட்டாரு டா... நம்ம விட்டுட்டு போயிட்டாரு என்று சொன்னதும் எழில் அதிர்ச்சியில் இருக்க, அமிர்தா ஃபோனை வாங்கி பேசுகிறார்.

அமிர்தாவும் அதிர்ச்சியில் இருக்கிறார். பிறகு அங்கிருந்து எழில் அமிர்தா மற்றும் நிலாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வருகின்றனர். அந்த நேரத்தில் வீட்டில் எல்லாரும் அழுது கொண்டிருக்க எழிலை பார்த்ததும் கோபி தாத்தா நம்மை விட்டுட்டு போயிட்டாரு டா.. என்று கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்க, செல்வி தம்பி இனி வாடா எழிலுன்னு உங்களை யார் தம்பி கூப்பிடுவாங்க என்று அழுது கொண்டு இருக்கிறார்.
எழில் தாத்தாவின் உடலை பார்த்து அவருடைய நெஞ்சில் சாய்ந்து அழுது கொண்டிருக்கிறார். அதுவரைக்கும் யாரிடமும் எதுவும் பேசாமல் உடைந்து போய் இருந்த ஈஸ்வரி எழில் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுவதை பார்த்து ஈஸ்வரி எழிலை கட்டிப்பிடித்து அழுது நீ சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சாரு. நீ நிறைய சாதிக்கனும்னு நெனச்சாருடா என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து பழனிச்சாமி வீட்டிற்கு வருகிறார். பழனிச்சாமி கோபியை பார்த்ததும் நீங்கதான் இந்த வீட்டில் தூணாக இருக்க வேண்டும் இந்த நேரத்தில் நீங்களும் இப்படி அழுது கொண்டு இருக்காதீங்க.. ஐயா ரொம்ப நல்லவரு இனி நீங்க தான் இந்த குடும்பத்துக்கு ஆறுதலா இருக்கணும் என்று சொல்ல கோபி இதுவரைக்கும் பழனிசாமி மீது கோபம் இருந்தாலும் இன்று எதுவும் சொல்லாமல் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் எழில் அழுது கொண்டிருப்பதை பார்க்க முடியாமல் பாக்கியா ரூமை விட்டு வெளியே வந்து அழுது கொண்டிருக்க செல்வி அய்யாவுக்கு பிறந்தநாள் சந்தோஷமா கொண்டாடுணும் ஆனா இப்படி ஆகும்னு தெரியலையே என்று அழுது கொண்டிருக்கிறார். பிறகு ராமமூர்த்தி உடலை பார்த்து பழனிச்சாமியும் அழுது கொண்டிருக்கிறார். அதோடு ஈஸ்வரி உட்பட எல்லோருக்கும் பழனிச்சாமி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பிறகு ஈஸ்வரியை எல்லோரும் ஹாலில் கூட்டிக்கொண்டு வந்து இருக்க வைக்க ஈஸ்வரி திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார். ஜெனியின் அப்பா, அம்மா பழனிச்சாமி குடும்பத்தினர் எல்லோரும் இதை பார்த்து பதறி போய் இருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications