பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தா கேரக்டர் இறந்த பிறகு நடந்தது இதுதான்! கதையே மாறிப்போச்சு! மயூ பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கேரக்டர் இறப்பது போன்று காட்சிகள் வைத்திருக்கின்றனர். இது பற்றி இந்த சீரியலில் மயூ கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ஷெரின் தாரா பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. காரணம் இந்த சீரியலில் தூண் மாதிரி இருந்த ராமமூர்த்தி கேரக்டர் இறந்து போவது போல காட்டி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டனர். அதிலும் ராமமூர்த்தியின் பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த நாளே அவர் இறந்து போவது போல காட்சிகள் வைத்திருக்கின்றனர்.

television baakiyalakshmi serial vijay tv

ராமமூர்த்தி பிறந்த நாளில் ஈஸ்வரியிடம் நான் செத்தாகூட கோபி வந்து கொள்ளி வைக்க கூடாது. என்னுடைய மகள் பாக்கியா எனக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டும் என்று சொல்லும் போது நமக்கு இவர்களுடைய கேரக்டரை முடிக்க போகிறார்களா என்ற சந்தேகம் வந்தது. அது போலவே திடீரென்று ஒரு ப்ரோமோ வெளியிட்டு ராமமூர்த்தியின் இறுதி தருணங்கள் என்று ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தனர்.

television baakiyalakshmi serial vijay tv

அதற்குப் பிறகு இந்த வாரம் முழுக்க ராமமூர்த்தியின் இறுதி சடங்குகள் அதில் நடக்கும் பிரச்சினைகள் தான் இருந்து வருகிறது. நேற்று கோபி ராதிகாவோடு பாக்யா வீட்டிற்கு வந்து அழுது கொண்டிருந்தார். இன்று எழில் அமிர்தாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். இனி நாளைக்கு ராமமூர்த்தியின் இறுதி சடங்கை பாக்கியா தான் செய்வார் என்று ஈஸ்வரி சண்டை போடுவார். அதற்குப் பிறகு அடுத்த நாள் தான் ராமமூர்த்தியின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

television baakiyalakshmi serial vijay tv

இத்தனை வருடங்களாக சீரியலில் கம்பீரமான கேரக்டரில் பார்த்து வந்த ராமமூர்த்தி தாத்தா இப்போது இறந்து போய் இருப்பதை பார்த்து வீட்டில் இருக்கும் பல பெண்கள் கூட ஏதோ அவர்கள் வீட்டிலேயே துக்கம் நடந்தது போல பீல் பண்ணி வருகிறார்கள். சீரியலில் காட்சிகள் தத்துரூபமாக இருக்க வேண்டும் என்று நொடிக்கு ஒரு முறை ராமமூர்த்தியின் முகத்திற்கு குளோசப் வைத்து விடுகிறார்கள். இது பார்க்கும் ரசிகர்களை மேலும் கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

television baakiyalakshmi serial vijay tv

இந்த நிலையில் இந்த சீரியல் பற்றி இந்த சீரியலில் மயூ கேரக்டரில் நடிக்கும் ஷெரின் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி தாத்தா இறந்து போவது போன்ற காட்சிகள் சூட் செய்தாங்க. அதை பார்க்கும்போது நிஜத்திலேயே எனக்கு அழுகை வந்துவிட்டது. அப்படியே நிஜத்தில் ஒருவர் இறந்துவிட்டால் எப்படி இருக்குமோ அதுபோலவே அங்கு எல்லா சடங்குகளும் செய்தார்கள்.

நான் சின்ன பொண்ணு என்பதால் என்னை கடைசியில் நடைபெறும் சடங்குக்கு மட்டும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். வீட்டில் வைத்து நடக்கும் எல்லா சடங்குகளுக்கும் நானும் அங்கேதான் இருந்தேன். எனக்கு அதை பார்க்கும்போதே ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்த காட்சிகளில் பாதி தான் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருக்கிறது இன்னும் சில காட்சிகள் பார்க்கும் ரசிகர்களையும் கலங்க வைத்து விடும் அளவிற்கு தான் தத்துரூபமாக எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் எல்லோருமே என் மீது ரொம்பவும் பாசமாக இருப்பார்கள். அதிலும் ராமமூர்த்தி தாத்தாவை சொல்லவே வேண்டாம். அவர் சீரியலில் எப்படி இருக்கிறாரோ அதுபோலவே நிஜமாக தாத்தாவாகத்தான் என்றும் நடந்து கொள்வார். அதுபோல எனக்கு அம்மாவாக நடிக்கும் ரேஷ்மாவும் அப்படித்தான். முதல் நான் சூட்டிங் போகும்போது அவர் சூட்டிங்க்கு வந்ததும் நீதான் எனக்கு பொண்ணா வர போறியா என்று கேட்டார்.

television baakiyalakshmi serial vijay tv

அப்போ இருந்து இப்ப வரைக்கும் எனக்கு ஒரு அம்மா போலத்தான் அவங்களும் நடந்துக்கிறாங்க. அவங்க சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் அவ்வளவு கலகலப்பாக இருக்கும். அதுபோல இதற்கு முன்பு எழில் கேரக்டரில் நடித்த விஜே விஷால் அண்ணாவும் அப்படித்தான். அவரும் முதல் நான் சூட்டிங் போன போதே என்னிடம் வந்து பேசிவிட்டார். அதற்கு பிறகு நான் சில காட்சிகள் நன்றாக செய்து விட்டால் பலர் என்னை பாராட்டுவாங்க.

சூட்டிங் ஸ்பாட்டில் சாக்லேட் எல்லாம் வாங்கி தருவாங்க. இதற்கு முன்பு நான் கோர்ட்டில் என் அம்மாவுக்கு எதிராக ஈஸ்வரி பாட்டிக்கு ஆதரவாக சாட்சி சொல்லுவேன். அந்த காட்சி நடித்து முடித்ததும் ரொம்பவே பயப்பட்டேன்.. எப்படி வந்தது என்று தெரியவில்லையே என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அந்த காட்சியில் நடித்ததற்காக எல்லோரும் என்னை பாராட்டினாங்க. அதுபோல பாக்கியலட்சுமி சீரியலில் இனி கதையே வேறு விதமாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று அந்த பேட்டியில் ஷெரின் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+