இனி ராதிகாவும் ஒரே வீட்டில்... செழியனால் வரப்போகும் பிரச்சனை.. இனி பாக்கியலட்சுமி கதை இதுதான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனி ராதிகாவும் கோபியின் வீட்டிற்கே வந்து தங்கி விடப் போகிறாராம்.
ஏற்கனவே நேற்றைய எபிசோடில் குடித்துவிட்டு கோபியும் பாக்யாவின் வீட்டிற்கு வந்து இருக்கிறார்.
இந்த நிலையில் இனி பாக்கியா எடுக்கப் போகும் முடிவினால் கதை வேகமாக நகர இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. ஏற்கனவே பாக்கியாவை பழி வாங்குவதற்காக கேண்டினில் அடுத்தடுத்து டாஸ்க் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை எல்லாம் தனக்கு சாதகமாக மாற்றி பாக்யா ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு அதில் வெற்றி பெற்று ராதிகா முகத்தில் கரியை பூசிக்கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் கோபி ராதிகா கேட்கும் கேள்விகளால் கடுப்பாகி இப்போது அடிக்கடி குடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு தெருவில் விழுந்து கிடக்க, பாக்யாவும் எழிலும்தான் கூட்டிக்கொண்டு வீட்டில் கொண்டு விட்டனர். அதனால் கடுப்பான ராதிகா வீட்டை விட்டு பேக்கோடு கிளம்ப, நடுத்தெருவில் காலில் விழுந்து ராதிகாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்த கோபி சாமி முன்பு சத்தியம் செய்து கொடுத்து இருந்தார்.
ஆனாலும் நேற்றைய எபிசோட்டில் மீண்டும் குடித்துவிட்டு வண்டி ஓட்ட முடியாமல் தவிக்க அந்தப் பக்கமாக வரும் செழியன் கோபியை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வர என்னை ராதிகா வீட்டில் விட்டு விடாதே என்று கோபி கெஞ்சிதால் பாக்யாவின் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே கோபி மீண்டும் தன்னோடு வந்து விடுவான் என்று ஈஸ்வரி உறுதியாக கூறிக் கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது குடித்துவிட்டு வந்த கோபியை வீட்டிற்குள் சேர்த்து விடுகிறார். அதே நேரத்தில் ராதிகா கோபியிடம் நடந்து கொள்ளும் விதத்தை பற்றி தன்னுடைய அம்மாவிடம் கூறி அழுததால் அவரும் ராதிகா வீட்டிற்க்கே வந்து இருக்கிறார். இந்த நிலையில் இனி கோபி அவருடைய அம்மா அப்பாவை பார்க்க அந்த வீட்டுக்கு போனா நீயும் போக வேண்டும். நீ முறைப்படி தாலி கட்டிய மனைவிதான் என்று ஏற்கனவே அட்வைஸ் பண்ணி இருக்கும் நிலையில் தற்போது கோபி குடித்துவிட்டு பாக்கியாவின் வீட்டிற்கு வந்திருப்பதால் அதைத் தொடர்ந்து ராதிகாவும் பாக்யாவின் வீட்டிற்கு வர இருக்கிறாராம்.

இந்த நிலையில் செழியன் ஏற்கனவே புதியதாக ஒரு கிளைண்ட்டை நேற்றைய எபிசோட்டில் மீட் பண்ணி இருக்கிறார். முதல் நாளே அவரிடம் மொத்த குடும்ப விஷயத்தை பற்றியும் தன்னுடைய காதல் கதையை பற்றியும் கூறி இருக்கிறார். இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் தப்பான உறவு ஏற்பட இருப்பதாகவும், அதனால் இனி பிரச்சனை ஏற்பட இருப்பதாகவும் அதே நேரத்தில் எழிலில் மனைவியான அமிர்தா இந்த சீரியலில் இனி வில்லியாக மாற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியல் ஹிந்தியில் இருந்து எடுக்கப்பட்ட நிலையில், ஹிந்தியில் கதை அப்படி தான் போய்க்கொண்டிருக்கிறதாம். அதனால் தமிழிலும் அதுதான் வர வாய்ப்பு இருக்கிறதா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications