இனியாவை திட்டிய ராதிகா.. கோபி செய்த செயல்.. நிலாவிடம் கோபத்தை காட்டிய ஈஸ்வரி.. எழில் எடுத்த முடிவு
இனியா போனில் சாட் செய்து கொண்டிருந்ததால் ராதிகா திட்டியதற்கு கோபி சப்போர்ட் செய்கிறார்.
சென்னை: ராதிகா படிப்பு விஷயத்தில் இனியாவிடம் கோபப்படுவது சரியான முடிவுதான் என்று கோபி கூற இனியா அதிர்ச்சி அடைகிறார்.
பாக்கியாவிற்கு தொடர்ந்து சமையல் ஆர்டர் கிடைத்ததால் மண்டபத்தில் அமிர்தாவோடு சமையல் செய்து கொண்டிருக்கிறார்.
ஈஸ்வரியை பார்த்து நிலா பாப்பா பாட்டி என்று சொன்னதால் யாருக்கு யார் பாட்டி என்று கோபப்படுகிறார்.
ஈஸ்வரி நிலாவிடம் கோபத்தை காட்டியதால் எழில் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று விடுகிறார்.

ராதிகாவுக்கு சப்போர்ட் செய்த கோபி
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராதிகா இனியாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இவங்க யாரு என்ன திட்டுறாங்க என்று சத்தம் போட, கோபி அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் நமட்டு சிரிப்பு சிரிக்கிறார். பிறகு ராதிகா உங்க அம்மாவாக இருந்தாலும் இதுதான் பண்ணி இருப்பாங்க. இப்போ அவங்க இங்க இல்ல அதனால் நான் தான் இருக்கேன் நான்தான் சொல்லி ஆகணும் என்று திட்டுகிறார். நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று மீண்டும் கேட்க என்னுடைய பிரண்ட் என்று இனியா கூற, எந்த பிரண்ட் ஸ்கூல் பிரண்டா? என்று கேட்க, இல்லை டியூஷன் ஃபிரண்ட் என்று இனியா சொல்ல, இனி படிக்கிற வேலையை மட்டும் பாரு இங்கே மார்க் கம்மின்னு சொல்லி தான் டியூஷனுக்கு அனுப்பி இருக்கு, அங்க உக்காந்து பேசிகிட்டு இருக்க உன்னை அனுப்பல என்று திட்டிவிட்டு, இதெல்லாம் உங்க அப்பா கேட்டிருக்கணும் அவர் கேட்கல என்று சொல்லி கோபி, நான் கேட்டதில் ஏதாவது தப்பு இருக்கா? என்று கேட்க அதற்கு கோபி அதெல்லாம் எந்த தப்பும் கிடையாது. நீ கேட்டது 100% சரி என்று சொல்ல இனியா அதிர்ச்சி அடைகிறார்.

பாக்யாவின் சமையல்
அடுத்ததாக பாக்கியாவும்,அமிர்தாவும் மண்டபத்திற்கு ஆட்டோவில் வந்து இறங்குகின்றனர். பின்பு தொடர்ச்சியாக கல்யாண ஆர்டர்கள் இருப்பதால் அவர்களுடைய அணியோடு சமையலறையில் சமையல் செய்ய தொடங்கிவிட்டனர். இன்று இரவு ஆயிரம் பேருக்கு சமையல் செய்யனும், நாளை காலை 300 பேருக்கு பண்ணனும். அடுத்த கல்யாணத்துக்கு அடுத்ததாக சமைக்கணும் என்று சொல்ல அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று அமிர்தா கூற, இப்போ இப்படித்தான் சொல்லுவ இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு தான் தெரியும் என்று செல்வி நக்கல் அடிக்கிறார். பின்பு அனைவரும் சமையல் செய்து கொண்டிருக்கின்றனர். அங்கே வரும் கல்யாண வீட்டினர் எல்லா சமையலும் முடிந்து விடுமா என்று கேட்க இப்போ முடிந்துவிடும் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.

சரண் சொன்ன பதில்
அடுத்து டியூஷன் வரும் இனியா, சரனிடம் உனக்கு எப்படி என்னுடைய நம்பர் கிடைத்தது என்று கேட்க? சரண் இனியாவின் நம்பரை கண்டுபிடித்த விஷயத்தை சொல்கிறார். பிறகு நேற்று இரவு பேசிக்கொண்டிருக்கும்போது எதற்காக குட் நைட் கூட சொல்லாமல் வைத்து விட்டாய் என்று சரண் கேட்க? அதற்கு ஒரு லேடி வீட்டில் இருக்காங்க அவங்க திட்டிட்டாங்க என்று சொல்ல, பிறகு கோபி ராதிகாவே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட விஷயத்தை இனியா கூற, இது எல்லாம் இப்போ சகஜம் தான் என்று கூற, அப்போ எங்க அப்பா திருமணம் செய்தது சாதாரணம்தானா? என்று இனியா மீண்டும் கேட்கிறார்.

அதற்குள் 8 நாள் ஆகி விட்டது
அடுத்து மண்டபத்தில் சமையல் செய்து கொண்டிருந்த ராதிகாவிடம் செல்வி முதலில் எட்டு நாள் தொடர்ந்து சமையல் செய்ய போறோம் என்று சொன்னபோது மலைப்பாக இருந்தது. இப்போ எட்டு நாள் எப்படி போச்சுனே தெரியல என்று சொல்லி, கடைசி நாள் சமையல் செய்து முடித்து அதை பரமாறிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் வீட்டில் எழில், நிலா பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு ஈஸ்வரி மற்றும் செழியன் என இருவரும் உட்கார்ந்திருக்கின்றனர்

ஜெனி கொடுத்த பதிலடி
எழிலுக்கு திடீரென போன் வந்ததால் எழுந்து வெளியே செல்கிறார். அப்போது ஜெனி பாப்பாவிடம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து ஈஸ்வரி கோபமாக இருக்க இது யார் சொல்லு என ஜெனி கேட்க, நிலா பாப்பா பாட்டி என்று சொல்ல, அவர் கோபம் அடைகிறார். யாருக்கு யார் பாட்டி யாரோ பெத்த பிள்ளைக்கு எல்லாம் நான் பாட்டியா என்று கோபப்படுகிறார். அதற்குப் பிறகு இது செழியன் பெரியப்பா என்று ஜெனி சொல்ல நிலா பாப்பாவும் பெரியப்பா என்று சொல்ல, செழியனும் கோபப்படுகிறார். இதைக் கேட்ட எழில் போனை வைத்துவிட்டு வந்து நிலா பாப்பாவை தூக்கிக்கொண்டு நான் மேலே செல்கிறேன் என்று சென்று விடுகிறார். பிறகு ஜெனி குழந்தைகிட்ட போய் வெறுப்பை காட்டுறீங்களே என்று ஈஸ்வரியை திட்டுவதற்க்காக செழியனை திட்டிக்கொண்டு எழுந்து சென்று விடுகிறார். பிறகு செழியன் இவ இப்படித்தான் எந்த சென்சும் கிடையாது என்று சொல்ல ஈஸ்வரி, எல்லாம் அவ மாமியார் கிட்ட இருந்து கத்துகிறது என்று கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications