பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த இரண்டு நடிகைகள்.. ஜீ தமிழ் சீரியலில் அறிமுகம்.. அங்கேயும் இப்படியா?

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவும் செல்வி கேரக்டரில் நடிக்கும் கம்பம் மீனாவும் ஜீ தமிழில் சீதாராமன் சிரியலில் நடிக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் புதியதாக சீதாராமன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த இரண்டு நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக தற்போது நடித்து வரும் ரேஷ்மாவும் அவருக்கு எதிராக பாக்யாவின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக இருக்கும் செல்வி கேரக்டரில் நடிக்கும் கம்பம் மீனாவும் சீதாராமன் சீரியலில் ஒன்றாக நடிக்கிறார்கள்.

ஒரே சீரியல் நடிகைகள்

ஒரே சீரியல் நடிகைகள்

ஜீ தமிழில் நேற்று பிப்ரவரி 21ஆம் தேதி திங்கட்கிழமையிலிருந்து சீதாராமன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக ரேஷ்மா பசுபுலெட்டி நடிக்கிறார். அதே நேரத்தில் கதாநாயகியின் உறவினராக கம்பம் மீனா நடிக்கிறார். இவர்கள் இருவரும் பாக்கியலட்சுமி சீரியலில் எதிரும் புதிருமாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் பாக்யாவின் தோழியாக ராதிகா இருக்கும்போது செல்வி ராதிகா உடன் நட்பாக இருந்த நிலையில் தற்போது கோபியை திருமணம் செய்திருக்கும் ராதிகாவை மொக்க பண்ணிக் கொண்டிருக்கும் ஒரு கேரக்டராக செல்வி கேரக்டரில் கம்பம் மீனா நடித்து வருகிறார்.

அழகான மணப்பெண் தேவை

அழகான மணப்பெண் தேவை

இந்த நிலையில் சீதாராமன் சீரியலில் பிரம்மாண்டமான ஒரு வில்லி கேரக்டரில் ரேஷ்மா பசுபுலெட்டி அறிமுகமாகிறார். தன்னுடைய மகனுக்கு உலகத்திலேயே அழகான ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கும் நிலையில் சீதா கேரக்டரில் நடிக்கும் பிரியங்கா நல்கரியின் அக்காவை நேற்று எபிசோடில் கதாநாயகன் சந்தித்திருக்கிறார். இந்த நிலையில் கதாநாயகன் சீதாவின் அக்காவை பார்த்ததும் பிடித்துப் போய்விடுகிறது.

என்ன மாதிரி இருக்கும்

என்ன மாதிரி இருக்கும்

தன்னுடைய மகனுக்கு பிடித்துவிட்ட ஒரே காரணத்தினாலும் அந்தப் பெண் அழகாக இருப்பதாலும் ராமின் அம்மாவாக நடிக்கும் ரேஷ்மா அந்த பெண்ணிற்கு திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்து, இனி பிரியங்கா நல்கரி அதாவது சீதாவின் வீட்டில் சென்று சம்பந்தம் பேசி முடிவு செய்ய இருக்கிறார்கள். சீதாவின் உறவினராக அவருடைய வீட்டில் இருக்கும் கம்பம் மீனா மற்றும் ரேஷ்மா இடையே இனி எப்படி ஒரு பயணம் இருக்க போக இருக்கிறது. அல்லது இந்த சீரியலிலும் இவர்கள் இருவரும் எதிரும் புதிருமாகத்தான் இருக்கப் போகிறார்களா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இது எல்லாம் ஆசையா

இது எல்லாம் ஆசையா

அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் முதல் நாளே ரேஷ்மா வில்லத்தனத்தின் உச்சத்தில் மிரட்டுகிறார். அதுவும் தன்னுடைய மகனுக்கு பார்த்து வைத்த பெண்ணை ரேஷ்மா அதாவது அந்த சீரியலில் மகாலட்சுமியின் எதிரி ஒருவர் கடத்தி வைத்துக் கொண்டு உன்னுடைய வருங்கால மருமகளை நான் கடத்தி வைத்திருக்கிறேன் என்று மிரட்டுகிறார். பின்பு அவரை மகாலட்சுமி துப்பாக்கி முனையில் மிரட்டி அனுப்புகிறார். அவருடைய பிடியில் இருந்த அந்தப் பெண்ணை காப்பாற்றி விட்டு இனி இந்த பெண் எனக்கு வேண்டாம் நீங்கள் வரதட்சணையாக தர சொன்ன பணத்தை நான் உங்களுக்கு தருகிறேன் நீங்கள் வேறு மாப்பிள்ளை பார்த்து உங்கள் பொண்ணுக்கு திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பொன்னின் நெத்தியில் அடிபட்டு இருக்கிறது. அதனால் அவளுடைய அழகு குறை ஏற்பட்டுவிட்டது. எனக்கு மருமகளாக வரவேண்டிய மருமகள் அழகாக இருக்க வேண்டும். அழகில் குறையாக இருக்கக் கூடாது என்றெல்லாம் வசனம் பேசியிருக்கிறார். இனி போக போக இந்த சீரியல் இந்த மாதிரி இருக்கப் போகிறது என்பது பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+