அமிர்தா வீட்டுக்கு சென்று பிரச்சனை செய்த ஈஸ்வரி... பாக்கியாவிற்கு தெரியாமலே செய்யப்படும் சூழ்ச்சி
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அமிர்தாவை காதலிக்கும் விஷயத்தை தெரிந்து கொண்ட ஈஸ்வரி அமிர்தாவின் வீட்டிற்கே சென்று வீட்டில் உள்ளவர்களிடம் பிரச்சனை செய்திருக்கிறார்.
ஆர்டர் விஷயம் கை நழுவி போனாலும் நாங்கள் உனக்காக இருக்கிறோம் என்று பாக்யாவுக்கு அவருடன் வேலை செய்யும் சக பெண்கள் ஆதரவு கொடுத்து இருக்கின்றனர்.

எழிலின் வித்தியாசமான நடவடிக்கை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசொட்டில் ஆரம்பத்தில் அமிர்தாவுக்கு போன் போடும் எழில் அவர் எடுக்காத காரணத்தினால் முகம் சோகமாக சுருங்கி விடுகிறது. இதை பார்த்த ஈஸ்வரி யாருக்குடா போன் போடுற என கேட்க உங்களுக்கு தெரியாது என்னுடைய பிரண்டு பாட்டி என சமாளிக்கிறார். அதே நேரத்தில் இன்னொரு போன் வருகிறது. அதை எடுக்காமல் கட் செய்கிறார். அப்போ போன எடுக்க வேண்டியதுதானே என ஈஸ்வரி கேட்க வர்ஷினி போன் பண்ணுகிறார், இப்போ எடுக்க வேண்டாம் பிறகு நான் பேசிக் கொள்கிறேன் என்று சொல்கிறார். எழிலின் நடவடிக்கையை பார்த்து ஈஸ்வரி குழப்பத்தில் யோசிக்கிறார்.

அது மட்டும் நடக்காதாம்
பிறகு எழில் வெளியே சென்றதும் செழியன் இடம் நீ போய் போன் எடுத்து பாரு யாருக்கு போன் பண்ணி இருக்கான்னு என சொல்ல, செழியன் போனை எடுத்து பார்த்து அந்த அமிர்தாவுக்கு தான் போன் பண்ணி இருக்கிறான் என சொல்கிறார். மேலும் இவன் அமிர்தாவை சின்சியராக லவ் பண்ணுவதாகவும், அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என்கிட்ட சொன்னான் பாட்டி என்று போட்டுக் கொடுக்க, ஈஸ்வரி நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் அது நடக்காது என கோபப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் நாளைக்கு நாம் அமிர்தா வீட்டுக்கு போயிட்டு வரலாம் என இருவரும் முடிவு எடுக்கின்றனர்.

துணைக்கு வந்தால் மட்டும் போதும்
பிறகு எழில் பாக்கியா கிச்சனில் இருக்கும் போது அவரிடம் சென்று அம்மா நீ நல்லா இருக்கியா? என கேட்ட நான் நல்லா தான்டா இருக்கேன் என சொல்கிறார். நான் வேணும்னா உனக்கு நஷ்டமாக அந்த மூன்று லட்சம் பணத்தை ரெடி பண்ணட்டுமா? என கேட்க பாக்கியா அதெல்லாம் வேண்டாம் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நீ கூட நில்லு அது போதும் மீதியை நானே பார்த்துக்கொள்கிறேன். உன்னுடைய திரைப்படத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் என்னால் ஏதாவது செய்ய முடியுமா? அதுபோலத்தான் இதுவும் என்று கூறுகிறார்.

கிடைத்த புது நம்பிக்கை
பின்பு பாக்கியா தன்னுடன் சமைப்பவர்களை அழைத்து கேட்டரிங் ஆர்டர் கிடைக்காத விஷயத்தை சொல்கின்றார். ஆரம்பத்தில் அனைவரும் எப்போது கேட்டரிங் தொடங்கப் போகிறோம். நான் மார்னிங் சிப்டு பார்த்துக்கொள்கிறேன். இவர் இரவு ஷிப்ட் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொன்றாக பேசிக் கொண்டிருக்க, கடைசியில் பாக்யா கேன்சல் ஆனதை சொன்னதும் அனைவரும் அதிர்ச்சியாகி விடுகின்றனர். ஆனாலும் பிறகு சரி விடு பாக்கியா பார்த்துக் கொள்ளலாம் நாங்க இருக்கோம் என ஆறுதல் சொல்லி செல்கின்றனர். இவர்களுடைய நம்பிக்கையை பார்த்து ராதிகா இவர்களை நம்பி எவ்வளவு பெரிய ஆர்டர் கூட எடுக்கலாம் என செல்வியிடம் சொல்கிறார்.

ஜெனிக்கு தோன்றிய சந்தேகம்
பிறகு அடுத்த நாள் காலையில் ஈஸ்வரி காபி குடிக்கும் போது பாக்கியாவிடம் பேச்சு கொடுத்து அமிர்தா இப்போ இங்க வரவே இல்லையே? எங்கே இருக்கிறார் என்று கேட்டு, அமிர்தாவின் வீடு எங்கு இருக்கிறது என்ற விவரங்களையும் விசாரித்துக் கொள்கிறார். பின்பு செழியன் உடன் கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக சொல்லி அமிர்தா வீட்டுக்கு கிளம்பி செல்கிறார். இவர்கள் இருவரும் எங்கேயோ செல்கிறார்கள் என்று ஜெனிக்கு இவர்கள் மீது சந்தேகம் தோன்றுகிறது. இருந்தாலும் பாக்கியா அவங்க என்ன பண்ணப் போறாங்க ஏன சமாதானம் படுத்துகிறார் .

பிரச்சனையை தொடங்கிய ஈஸ்வரி
இருவரும் அமிர்தா வீட்டிற்கு வர அவருடைய பெற்றோர்கள் கல்யாண விஷயமாக பேச வந்திருப்பாதாக நினைத்து சந்தோஷத்துடன் ஈஸ்வரியை வரவேற்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி நல்லவிதமாக பேசுவது போல பேச்சு கொடுத்து விசாரிக்க, அமிர்தாவுக்கு நாங்கள் கல்யாணம் செய்து வைக்க எந்த முடிவும் யோசிக்கவே இல்லை. ஆனால் எழில்தான் கல்யாணம் பண்ணிப்பதாக சொன்னதாக சொல்கின்றனர் .இதை கேட்டு அதிர்ச்சியான ஈஸ்வரி செழியன் இடம் பாரு என்று சைகை காட்டுகிறார். பின்பு நான் அவன் அப்படி சொன்னதும் நீங்க அமிர்தாவை அவன் தலையில கட்டிடலாம் என்று பார்த்தீர்களா? என கேட்டு ஈஸ்வரி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications