எழில் செய்து கொடுத்த சத்தியம்.. கோபியால் பாக்யாவிற்கு அடுத்தடுத்து வரும் பிரச்சனை..திடீரென மாறிய கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா புதியதாக தொடங்கும் தொழிலுக்காக லோன் வாங்க செல்லும் இடங்களிலும் கோபியால் அடுத்தடுத்து பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது.

எழில் திருமணத்தில் பாட்டி எடுக்கும் புதிய அவதாரத்தால் மாட்டிக்கொண்டு முழிக்கும் எழில் மற்றும் குடும்பத்தினர்.

பாக்கியாவை கண்டிக்கும் மாமியார்

பாக்கியாவை கண்டிக்கும் மாமியார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் ஈஸ்வரி, அமிர்தாவும் நீயும் எப்போதும் ஃப்ரண்டாக இருக்கலாம். ஆனால் அதைத் தவிர்த்து வேறு எதுவும் இருக்கக் கூடாது. இது இந்த பாட்டி மேல சத்தியம் என சத்தியம் வாங்க, எழில் வேறு வழி இல்லாமல் சரி பாட்டி என கூற பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். அடுத்து பாக்யாவிடம் ஈஸ்வரி கோபப்படுகிறார். எல்லாத்துக்கும் காரணம் நீதான். நீ ஒரு அம்மாவாக நடந்து கொள். ஆரம்பத்தில் இப்படித்தான் ஜெனி வீட்டுக்கு வரும்போது நீ நல்லா பேசினா கடைசியாக செழியன் அவளை திருமணமே செய்துவிட்டான், ராதிகா விஷயத்திலும் நீ இப்படித்தான் இருந்த இப்போ எழில் விஷயத்தில் நீ இப்படி இருக்காத என்று கண்டிக்கிறார்.

இது செட் ஆகாது

இது செட் ஆகாது

அடுத்து பாக்யாவும் செல்வியும் வெளியே சென்று கொண்டிருக்கும்போது அங்கே ஏரியா செகரட்டரி பாக்யாவை பார்த்து ஏளனமாக பேசிக் கொண்டிருக்கிறார். நான் தேர்தலில் நிற்கவில்லை என பாக்யா சொன்னதும் மேலும் பாக்யாவை நக்கலாக கிண்டல் அடிக்கிறார். நீங்கள் வீட்டில் சமையல் செய்வதற்கு தான் ஆகும், இந்த மாதிரி கஷ்டமான பொறுப்பை எல்லாம் உங்களால் செய்து முடிக்க முடியாது என்று அவர் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து செல்வி பாக்யாவிடம் எதற்காக நிற்க மாட்டேன் என்று சொன்ன, நீ கண்டிப்பாக நில்லு என்று சொல்லிக் கொண்டிருக்க இதெல்லாம் எனக்கு செட் ஆகாது என பாக்யா சொல்லிக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறார்.

பேங்கில் புது பிரச்சனை

பேங்கில் புது பிரச்சனை

அடுத்ததாக பேங்கிற்கு டாக்குமெண்ட் எல்லாம் எடுத்துக்கொண்டு பாக்யா செல்ல அங்கே கோபியின் டாக்குமெண்ட் கேட்கின்றனர். கோபியின் பான் கார்டு வேண்டும் என்று கேட்டதும் பாக்யா நான் தான் பணம் கட்ட போகிறேன் என்னுடையது எது வேண்டுமோ கேளுங்கள் நான் கொண்டு வருகிறேன் என்று கூறினாலும், அவர் முடியாது. ஒரு சில நாட்கள் கழித்து பார்ப்போம் என்று சொல்லிவிடுகின்றனர். அங்கிருந்து வந்த பாக்கியா எழிலிடம் நடந்த விஷயங்களை சொல்ல, ஈஸ்வரி லோனும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் வீட்ல இருக்க வேலையை பாரு என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

செழியனுக்கு புத்தி சொன்ன ஜெனி

செழியனுக்கு புத்தி சொன்ன ஜெனி

அடுத்ததாக ஜெனி தூங்கிக் கொண்டிருக்கும்போது செழியன் ஜெனியின் காலை பிடித்து விடுகிறார், இதனால் முழித்து பார்த்த ஜெனி நன்றாகத் தான் இருக்கிறது இப்படியே செய் என்று சொல்லி மீண்டும் படுத்து இருக்கிறார். பிறகு செழியன் ஜெனி உனக்கு என்ன குழந்தை பிடிக்கும் என கேட்க நீ சொல் என ஜெனி கேட்க செழியன் உன்னை மாதிரி எனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என கேட்க ஜெனி எனக்கு உன்னை மாதிரி குழந்தை வேண்டாம் என்று சொன்னதும் அதிர்ச்சியாகிறார். செழியன் எதற்காக என்னை மாதிரி வேண்டாம் என்று சொன்ன நான் அழகாக இல்லையா? என கேட்க நீ அழகாகத்தான் இருக்கிறாய் ,ஆனால் கேரக்டர் சரி இல்லை என்ன சொல்ல நான் என்ன செய்தேன் என்று செழியன் கேட்கிறார். அதற்கு நீ எதற்கு எழில் பற்றி பாட்டியிடம் சொன்ன என்று கேட்க, எனக்கு அவன் பண்றது பிடிக்கல என்ன சொல்ல, நீ காதலிக்கும் போது எழில் ஏதாவது சொன்னானா? என கேட்க, அவன் எப்படி என்னோட விஷயத்தில் பேசலாம் என கேட்க, நீ மட்டும் அப்போ பேசலாமா? என ஜெனி சொன்னதும், செழியன் மன்னிப்பு கேட்டு நான் செய்தது தவறு என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+