ராதிகா கீழே தள்ளியதால், அப்பாவிடம் மொக்கை வாங்கிய கோபி.. இனியாவின் கேள்வி..சந்தேகப்படும் ராமமூர்த்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவிடம் ரொமான்ஸ் செய்கிறேன் என்கிற பெயரில் கோபி செய்த செயலால் கடுப்பான ராதிகா கோபிக்கு சரியான பாடத்தை புகட்டி இருக்கிறார்.

எதிர்பாராத விதமாக கோபிக்கு கிடைத்த தாக்குதலால் இனியா மற்றும் ராமமூர்த்தியின் முன்பு கோபி அசிங்கப்படுகிறார்.

ராதிகாவுக்கு கிடைக்கும் ஏமாற்றங்கள்

ராதிகாவுக்கு கிடைக்கும் ஏமாற்றங்கள்

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை எப்படியாவது ராதிகாவிடமிருந்து பிரித்து தன்னுடைய வீட்டுக்கு சென்று கூட்டிக்கொண்டு சென்று விட வேண்டும் என்று இனியா கோபியோடு இருக்கிறார். இனியா விற்காக கோபியின் அப்பாவும் வீட்டில் இருக்க, ராதிகா இனியாவோடு சுமுகமாகவே நடந்து கொண்டிருக்கிறார். கோபமாக இருக்கும் குடும்பத்தை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று வேலைக்கு சென்று சீக்கிரமாக வந்து வீட்டில் பிரியாணி செய்து வைத்து அனைவரையும் மகிழ்வித்து விட வேண்டும் என்று வீடியோ பார்த்து கஷ்டப்பட்டு சமையல் செய்த ராதிகாவை யாருமே பாராட்டவில்லை என்று ஏக்கத்தோடு இருக்க, அதே நேரத்தில் கோபியின் அப்பா வந்து கோபியை பற்றி வத்தி வைத்து விட்டு கிளம்புகிறார்.

சமாளிக்கும் கோபி

சமாளிக்கும் கோபி

கோபியின் மீது கோபமாக இருக்கும் ராதிகாவை கோபி சமாதானம் செய்வதற்காக என்னென்னமோ பேசி மேலும் ராதிகாவை கோபம்தான் அடைய செய்கிறார். ராதிகா கஷ்டப்பட்டு செய்த சமையலில் இது ஹோட்டலில் இருந்து வாங்கியதா? என்று கேட்டு அவரை வெறுப்பேற்றியது பின்பு தெரிந்து கொண்ட கோபி, அதற்காக மன்னிப்பு கேட்டு ராதிகாவின் கையில் முத்தம் கொடுக்க, அதே நேரத்தில் அங்கே இனியா வந்து விடவும் நடித்த படியே அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுகிறார். அதிகமாக இனியாவின் மீது பாசமாக இருப்பதை ராதிகா பார்த்துக் கொண்டே இருந்தாலும் இப்ப வரைக்கும் எதுவும் சொல்லாமல் தான் இருந்து வருகிறார்.

பாக்கியாவுக்கு வரும் நெருக்கடிகள்

பாக்கியாவுக்கு வரும் நெருக்கடிகள்

ராதிகாவின் ஆபீஸில் கேண்டியனில் பாக்யாவுக்கு காண்ட்ராக்ட் கிடைக்குமா? இல்லையா? என்ற ஒரு நிலை இருக்கும்போது காண்ட்ராக்ட்க்கு ஓகே சொல்லாதே என கோபி சொன்னாலும், நான் அப்படி சொல்ல மாட்டேன் அவர்களுக்கு திறமை இருந்தால் நடத்தட்டும். நான் அதை தடுக்க மாட்டேன் என்று பாக்கியம் ராதிகா கூறியிருந்தார். இந்த நிலையில் ராதிகா பாக்கியா லோனுக்காக அலைந்து கொண்டிருக்கும்போது போகுமிடமெல்லாம் கோபியின் மனைவி தானே நீங்கள் என்று பாக்யாவிடம் ஏதாவது ஒரு ரூபத்தில் கோபியை பலரும் நினைவுக் படுத்திக் கொண்டே இருக்கின்றனர். விவாகரத்தான விஷயத்தை கூட பாக்கியம் யாரிடமும் சொல்லாமல் தான் அந்த இடத்தை விட்டு கடந்து கொண்டிருக்கிறார்.

கோபிக்கு அடுத்தடுத்த தொந்தரவுகள்

கோபிக்கு அடுத்தடுத்த தொந்தரவுகள்

இந்த நேரத்தில் இன்றைய பிரமோ வில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு என கோபி ராதிகாவின் கையைப் பிடித்தபடி காதல் மொழிகளை பேசிக்கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுக்கலாம் என அருகில் செல்ல, அங்கே இனியா தாத்தாவோடு வாசலில் வர, ராதிகா கோபியை பிடித்து கீழே தள்ளி விடுகிறார். கீழே விழுந்த கோபியை பார்த்து இனியா பதறி போய் டாடி என்னாச்சு என கேட்க, போன் கீழே விழுந்த மாதிரி இருக்கிறது என்று சொல்ல, போன் இங்கே இருக்கிறது என்று இனியா காட்டி கொடுக்க, மொக்கை வாங்கியதில் அசட்டுத்தனமாக சிரிக்கிறார். ராதிகா ஸ்லோ மோஷனில் கதவை பூட்ட அதை பார்த்து கோபி நெளிகிறார். இதை தாத்தா பார்த்துக்கொண்டு முறைத்துக் கொண்டிருக்கிறார். இந்த பிரமோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+