இனி யாரு முக்கியம்? மல்லுக்கட்டும் இனியா,ராதிகா.. இனி கோபி எடுக்கப் போகும் முடிவு இதுதானாம்..!!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா, கோபியிடம் இனி உங்களுக்கு நான் முக்கியமா? ராதிகா முக்கியமா சொல்லுங்கள் என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
நேற்று வரை இனியா தான் முக்கியம் என்று கூறி வந்த கோபி, குடும்பத்தினர் யாருமே வேண்டாம் எனக்கு ராதிகா தான் முக்கியம் என்று வெளியே வந்திருந்தாலும் இப்போது என்ன பதிலை சொல்லப் போகிறார் என்று ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.

அப்பா மீது இருக்கும் பாசம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் வீட்டில் இருந்து இனியா கோபியோடு வந்துவிட்டதை நினைத்து கோபி இதுவரைக்கும் மகிழ்ச்சியாக இருந்து வந்தார். இனியாவும் கோபியோடு சென்று விட்டதை வைத்து அக்கம் பக்கத்தினர் பாக்யாவிடம் சொல்லிக் காண்பித்துக் கொண்டிருந்துக்கும் போது, இன்று ராதிகாவிடம் தன்னுடைய சுய கேரக்டரை இனியா காட்டத் தொடங்கி இருக்கிறார். ராதிகா வீட்டிற்கு இனியா வந்திருந்தாலும் தன்னுடைய அப்பா என்கிற உரிமையோடு தான் இங்கே வந்து இருக்கும் இனியா, மயூ கோபியை அப்பா என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருந்து வருகிறார். அதை இன்றைய எபிசோடில் அனைவரின் முன் நிலையிலும் காட்டி இருக்கிறார். மயூ இனியாவிடம் ப்ராஜெக்ட் செய்ய கேட்டதற்கு முதலில் மறுத்த இனியா, தாத்தா சொன்ன ஒரே காரணத்தினால் பிராஜெக்ட் செய்து கொடுக்கிறார். அப்போது கோபி அங்கே வரவே கோபியை மையூவும் இனியாவை போல டாடி என்று அழைத்ததை கேட்டு இனியா அதிர்ச்சியாகி இருக்கிறார்.

ராதிகாவை திட்டிய இனியா
ஏற்கனவே ராதிகா இனியாவிடம் உனக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்டதற்கு பேசாமலே இருந்த இனியா, ஹெல்த் மிக்ஸ் சாப்பிடுவதற்கு அடம்பிடித்து எனக்கு இந்த சாப்பாடு வேண்டாம் என்று வீம்போடு கிளம்பி இருக்கிறார். அதைத்தொடர்ந்து இனியாவிற்கு காபி கொண்டு வந்து ராதிகா கொடுக்க அதை குடிக்காமலே வைத்திருக்கிறார். இனியா இந்த காப்பியை நீ குடிக்கவில்லையா? என கேட்க இனியா பேசாமலே இருக்க நான் உன்கிட்ட தான் கேட்கிறேன் இனியா என ராதிகா கேட்க உங்ககிட்ட பேசணும் என்றெல்லாம் எனக்கு ஒரு அவசியம் இல்லை என ராதிகாவின் முகத்துக்கு நேராக திட்டி அனுப்புகிறார்.

இனியாவால் தொடங்கிய புது பிரச்சனை
இனியா பேசியதும் அந்த இடத்தை விட்டு ராதிகா சென்று விட அதற்குப் பிறகு கோபி வீட்டிற்கு வருகிறார். என்ன ஆச்சு இனியா என கேட்க என்கிட்ட கொஸ்டின் பண்ண இவங்க யாரு? என இனியா கேட்க நீ என்ன அவளை கேட்டா? என கோபி ராதிகாவிடம் கேள்வி கேட்க, ஏன் காபி கொடுக்கவில்லை என கேட்டேன் என ராதிகா சொல்கிறார் அவளுக்கு தான் காபி பிடிக்காதுன்னு தெரியும்ல என கோபி சொல்ல அவளுக்கு காபி மட்டும் இல்ல என்னையும் பிடிக்காது என ராதிகா சொன்னதும், உடனே எழுந்த இனியா ஆமாம் பிடிக்கவில்லை. அதுக்கு என்ன இப்போ என சண்டை போடும் தோணியில் கேட்க கோபி இனியாவை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.

நடக்கப் போவது இதுதானாம்
அப்போது இவங்களுக்கு சப்போர்ட் பண்ணி என்னை திட்ட போறீங்களா? என இனியா கேள்வி கேட்க, இப்ப சொல்லுங்க எனக்கு உங்களுக்கு நான் முக்கியமா? இல்ல இவங்க முக்கியமா? என இனியா கேள்வி கேட்க கோபி அதிர்ச்சியோடு இருக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோபி இனி எனக்கு நீயும் முக்கியம் ஆனால் ராதிகா என்னை நம்பி வந்ததால் எனக்கு ராதிகாவும் முக்கியம் என சொல்ல கோபியிடமிருந்து கோபித்துக் கொண்டு மீண்டும் பாக்யாவிடம் இனியா செல்ல இருக்கிறாராம். அதே நேரத்தில் இனி உங்கள் வீட்டில் இருந்து யாரும் இங்கே வரக்கூடாது என்று ராதிகா சொல்ல இருக்கிறாரார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications