இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வந்தப்போ ஏன் வாய் திறக்கல? முதல்ல பேட் கேர்ள் வரட்டும்.. பிரபலம்
சென்னை: மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றோர் அவர்கள் பார்த்த சமுதாயத்தை சொல்லி வருகிறார்கள்.. வாழை படம் பார்க்கவே யதார்த்தமாக இருந்தது.. அதுபோல, பேட் கேர்ள் பட இயக்குனரும், தன்னுடைய கருத்தை சொல்வதில் தவறில்லை. புதுபுது விஷயங்களை பாலச்சந்தர் அந்த காலத்திலேயே சொல்லாத விஷயங்களா" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார்.
சர்ச்சைகளை ஏற்படுத்தி கொண்டிருக்கும் பேட் கேர்ள், பட இயக்குனர் வர்ஷா பரத் நெதர்லாந்து - ரோட்டர்டாம், சர்வதேச திரைப்பட விழா விழாவில் (IFFR) 2025 இல் NETPAC விருது கிடைத்துள்ளது.

நெட்பேக் விருது, ஆண்டுதோறும் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களிலிருந்து ஒரு தனித்துவமான திரைப்படத்திற்கு வழங்கப்படுகிறது. இது குறிப்பாக வளர்ந்து வரும் திறமையாளர்களை அங்கீகரிக்கும் விதத்தில் வழங்கப்படுகிறது. இயக்குனர்களின் முதல் மற்றும் இரண்டாவது படங்களை மட்டுமே ஊக்குவிக்கும் நோக்கத்தில் வழங்கப்படும் இந்த விருதை இப்போது வர்ஷா பரத் பெற்றுள்ளார்.
கமிட்டி விருது: இதுகுறித்து Media circle சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "அவார்டு என்றாலே நல்ல படமாகத்தானே இருக்கும்? கமிட்டி பார்த்த பிறகு தானே அவார்டுகள் தரப்படுகின்றன? ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துவதாக சொல்றீங்க? பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் அவா, இவா என்று பேசுவார்களா?
அந்த டீசரில் இளம்பெண், "என்னுடைய வாழ்க்கையை வாழவிடுங்கள், நான் நினைச்ச மாதிரி வாழணும்" என்று கேட்கிறார்.. ஒரு படத்தில், பெஸ்ட் சீன், பெஸ்ட் வசனங்களைதான் டிரைலரில் வைப்பாங்க.. அப்படித்தான், இந்த டீசரும் இருக்கு.. ஆனால், பார்க்கிறதுக்கு ஒரு மாதிரியாத்தான் இருக்கு.. அந்த பெண் பேசுவதை பார்த்தால், எல்லாருக்குமே அப்படித்தான் தோன்றும். ஆனா அதை மட்டுமே வைத்து, ஜட்ஜ் செய்ய முடியாது
மனநல பாதிப்பு : அந்த டீசரில் ஹீரோயின் பேசும்போது, "நான் தற்கொலை பண்ணிப்பேன்" என்று தன்னுடைய அம்மாவிடம் சொல்கிறார் என்றால், அதுபோன்ற மனநிலையில் அந்த பெண் இருக்கிறாள்.. இதுபோன்ற பெண்ணுக்கு, என்ன நடந்திருக்கும்? என்பதைகூட படத்தின் முடிவில் சொல்லி இருக்கலாம்? இதுபோன்ற பேசிய பெண்ணுக்கு நல்லது நடந்ததா? கெட்டது நடந்ததா? என எப்படி படத்தை முடித்திருப்பார்கள் என்பதை சொல்ல முடியாது.
இருட்டு அறையில் முரட்டு குத்து வந்தபோது, அந்த பட டைட்டிலை எப்படி அனுமதிச்சீங்க? ஒரு உப்புமா கம்பெனி அந்த படத்தை தயாரிக்கவில்லை, பருத்தி வீரன் போன்ற பல வெற்றி படங்கள் எடுத்த நிறுவனம் எடுத்த படம் அது. அதற்கு ஏன் யாரும் எதிர்ப்பு காட்டல?
தேவர் மகன்: சில நாட்களுக்கு முன்பு மிஷ்கின் பேசும்போது, அந்த அரங்கத்தில் இருந்தவர்கள், மேடையில் இருந்தவர்கள், அங்கிருந்த ஊடகவியலாளர்கள் என எல்லாரும் கை தட்டி ரசித்தார்கள்.. ஆனால், ஊடகங்களில் அவர் பேசியது வெளிவந்ததும் அது சர்ச்சையாகிறது? அப்படியிருக்கும்போது மக்களின் மனநிலைமையை நாம் எப்படி முடிவு செய்வது? தேவர் மகன் படம் வந்தபோது, அன்று கொண்டாடினார்கள்.. இன்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்..
அப்படித்தான் பேட் கேர்ள் படமும்.. அந்த படத்தின் டைரக்டர், அட்வான்ஸாக நினைப்பது தப்பில்லை.. மேடையில் அவர் பேசும்போது, பெண்களுக்கு தாய்மை, கற்பு போன்ற சுமைகள் இருப்பதாக சொன்னார், உடனே கைதட்டி, விசில் அடித்து பலர் பாராட்டியிருக்கிறார்கள்.. அந்தவகையில், சமுதாயத்தில் பல மாற்றம் வந்துவிட்டன. அதற்காக அந்த படத்தை நான் ஆதரித்து பேசவில்லை.. ஆனால், எதற்குமே ஒரு லிமிட் இருக்கு.. அந்த எல்லை மீறாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
வாழை யதார்த்தம்: மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றோர் அவர்கள் பார்த்த சமுதாயத்தை சொல்லி வருகிறார்கள்.. வாழை படம் பார்க்கவே யதார்த்தமாக இருந்தது.. அதுபோல, பேட் கேர்ள் பட இயக்குனரும், தன்னுடைய கருத்தை சொல்வதில் தவறில்லை. புதுபுது விஷயங்களை பாலச்சந்தர் அந்த காலத்திலேயே சொல்லாத விஷயங்களா?
இந்திய சமுதாயம் ஏற்க முடியாத விஷயமாக இருந்தால், பங்கம் விளைவிக்கக்கூடியதாக இருந்தால், மோசமான கன்டென்ட் என்றால் அது கண்டிக்கப்பட வேண்டியது.. எதிர்ப்பு கண்டிப்பாக தெரிவித்தாக வேண்டும்.
குட் கேர்ள்: ஆனால், இந்த பேட் கேர்ள் படத்தில் என்ன சொல்ல வர்றாங்கன்னே முழுசா தெரியல. படத்துக்கே பேட் கேர்ள் என்றுதான் வைத்திருக்கிறார்கள். குட் கேர்ள் என்று வைக்கவில்லையே.. இப்படிப்பட்ட பெண்ணின் நிலைமை கடைசியில் என்ன ஆனது? என்பதைதான் அந்த படத்தின் முடிவில் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். எனவே படம் வந்தபிறகு விமர்சிப்பதே சரி என்று கூறியிருக்கிறார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications