நடந்து முடிந்தது கோபியின் திருமணம்.. கடைசியில் ஈஸ்வரி அம்மா வைத்த செக்.. இப்பவாவது இதை செஞ்சீங்களே
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மற்றும் ராதிகாவின் திருமணம் முடிந்துள்ளது.
திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விடுவேன் என்று பதறி அடித்து வந்த ஈஸ்வரி அம்மாவுக்கு இது பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
கோபியின் திருமணத்தை பார்த்து கடைசியில் ஈஸ்வரி அம்மா வைத்த செக் தான் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

ப்ரோமோவை கலாய்க்கும் ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே கோபி மற்றும் ராதிகாவின் திருமணம் நடைபெற்று முடிந்து விட்டது.இதை எதிர்பார்க்காத ஒரு சில ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியான முடிவாக தான் இருந்து வருகிறது.பாக்கியாவை விவாகரத்து செய்திருந்த கோபி இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்ய மாட்டார் என்று நம்பி கொண்டிருந்தவர்களுக்கு கோபியின் இந்த செயல் அதிர்ச்சியை கொடுத்திருப்பதால் தற்போது வெளியான ப்ரோமோவை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

கோபியை போட்டுக் கொடுத்த அப்பா
கோபியின் இரண்டாவது திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விடுவேன் என்று ஈஸ்வரி அம்மா ஆரம்பத்தில் கூறியிருந்தார். அவருக்கு உறுதுணையாக அவருடைய கணவரான ராமமூர்த்தியும் ஈஸ்வரி அம்மாவிடம் சத்தியம் செய்திருந்தார். ஆனால் இவர்கள் எதிர்பார்த்தபடி எல்லாம் இல்லாமல் கடைசியில் கோபியின் திருமணம் முடிவடைந்து இருக்கிறது. கோபியின் திருமணம் இன்று நடைபெற இருப்பதாகவும் மணவறை வந்துவிட்ட திருமணத்தை நிறுத்துவதற்காக ராமமூர்த்தி முயற்சி செய்ததாகவும், ஆனால் கோபி அவரை திருமண மண்டபத்தை விட்டு வெளியேறும்படி திட்டி அனுப்பி விட்டார் என்று தன்னுடைய மனைவியான ஈஸ்வரியிடம் ராமமூர்த்தி கூறியிருந்தார்.

திருமணம் முடிந்து விட்டது
கோபியின் திருமணத்தை எப்படியும் நிறுத்தி விட வேண்டும் என்று ராம மூர்த்தி, ஈஸ்வரி, இனியா என மூவரும் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் கோபியின் திருமணத்தில் பாக்கியா சமையலை முடித்து விட்டாலும் வடையை மறந்துவிட்டு கடைசியாக வடையை போட்டுக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மணவறையில் கோபி ராதிகா அமர்ந்திருக்க இவர்கள் திருமணத்திற்கு அய்யர் தாலியை எடுத்துக் கொடுக்கிறார். கெட்டிமேளம் என்று சொன்னதும் கோபி ராதிகாவின் கழுத்தில் தாலியை கட்டி முடித்து விடுகிறார்.

ஈஸ்வரி அம்மாவின் முடிவு
வழக்கம்போல கிளைமாக்ஸில் வரும் போலீஸ் போல ராமமூர்த்தி, இனியா, ஈஸ்வரி மூவரும் வந்து சேர்ந்திருக்கின்றனர். கோபியின் திருமணத்தை பார்த்து அதிர்ச்சியான அவருடைய அம்மா, கோபி நீ இப்படி பண்ணுவேன்னு நான் கனவுல கூட நினைக்கல. படுபாவி! படுபாவி! என்று திட்டுகிறார். ராமமூர்த்தி தன்னுடைய பங்குக்கு நீ நல்லாவே இருக்க மாட்ட நாசமா போயிருவ என்று பூக்களை தூக்கி எறிகிறார். நீங்க என்ன சாபம் கொடுத்தாலும் நாங்க நல்லா இருப்போம் என்று கோபி அசால்டாக பேசுகிறார். இனி நீங்க எப்படி நல்லா இருப்பீங்க? என்று ஈஸ்வரி அம்மா கேட்டதற்கு கோபி, அம்மா என்று இடைமறிக்கிறார். அதற்கு ஈஸ்வரி அம்மா, என்னை நீ அம்மா என்று கூப்பிடாத. நான் உன்ன தலைமுழுகிட்டேன். என் மருமகளுக்கும் என் பேர பிள்ளைகளுக்கு நாங்க இருப்போம் என்று பாக்கியாவையும் இனியாவையும் அழைத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறுகிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications