பாரதிகண்ணம்மா 2: யாருன்னு தெரியாமல் அசிங்கப்படுத்திய கண்ணம்மா.. பாரதியின் எதிர்பாராத முடிவு

பொது இடத்தில் சிகரெட் பிடித்த பாரதியை கண்ணம்மா அனைவரின் முன்னிலையிலும் அசிங்கப்படுத்தி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் கண்ணம்மாவும் பாரதியும் முதல் முதலாக சந்தித்திருக்கின்றனர்.

இது பாரதி தான் என தெரியாமல் பொது இடத்தில் சிகரெட் பிடிப்பது தவறு என்று கண்ணம்மா பாரதியை திட்டி இருக்கிறார்.

தன்னை அவமானப்படுத்திய கண்ணம்மாவை பழி வாங்க வேண்டும் என்று கோபத்தில் பாரதி காத்திருக்கிறார்.

மீண்டும் டெஸ்ட் வைத்த மது

மீண்டும் டெஸ்ட் வைத்த மது

பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலின் இன்றைய எபிசொட்டின் ஆரம்பத்தில கண்ணம்மாவும் மதுவும் மீண்டும் ஒரு ஆற்றங்கரையை அருகே வருகின்றனர். ஆற்றங்கரைக்கு அழைத்து வந்த மது கண்ணம்மாவிடம் இங்கும் ஒரு மறக்க முடியாத விஷயம் நடந்தது அது என்னவென்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா என்று கேட்க கண்ணம்மா என்னவென்று தெரியவில்லையே என்று திரு திருவென முழித்துக் கொண்டிருக்கிறார். பிறகு மது கொடுத்த க்ளூவை வைத்து நீச்சல் தெரியாமல் என்று பேச போக மது, கரெக்டா சொல்லிட்ட நான் நீச்சல் தெரியாமல் தண்ணில அடிச்சிட்டு போனப்ப நீதான் என்ன காப்பாத்துன என்று கூறுகிறார்.

கண்ணம்மா பாரதியின் அறிமுகம்

கண்ணம்மா பாரதியின் அறிமுகம்

பிறகு எல்லா விஷயமும் அப்படியே ஞாபகத்தில் வெச்சிருக்கிற நீதான் என்னுடைய கண்ணம்மா நான் வச்ச எல்லா டெஸ்ட்லையும் நீ நூற்றுக்கு நூறு எடுத்து பாஸ் பண்ணிட்ட என்று மது கண்ணம்மாவை கட்டிக் பிடித்து கொள்கிறார். பிறகு கண்ணம்மாவும் மதுவும் பைக்கில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு மெடிக்கல் ஷாப்பில் கண்ணம்மாவை விட்டுவிட்டு மது பக்கத்து தெருவில் ஜாக்கெட் வாங்கி வருகிறேன் என்று சொல்லி கிளம்புகிறார். அதற்கிடையில் மழை வந்துவிட அப்போது அங்கு வரும் பாரதி பஸ் ஸ்டாப்பில் மழைக்கு ஒதுங்கி சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்திலே முட்டல் மோதல்

ஆரம்பத்திலே முட்டல் மோதல்

பாரதி போனில் பேசியபடியே சிகரெட் பிடித்துக் கொண்டிருக்க, அதே பஸ் ஸ்டாப்பில் பொதுமக்கள் பலரும் மழைக்கு ஒதுங்கி விடுகிறார்கள். அதை கவனிக்காத பாரதி போனில் தீவிரமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் கண்ணம்மா பப்ளிக் பிளேஸ்ல இப்படி சிகரெட் பிடிக்கிறீர்களே தப்பு என்று உங்களுக்கு தோணலையா? என பாரதியிடம் சண்டை இடுகிறார். நான் சிகரெட்டு பிடித்துக் கொண்டு இருக்கும் போது தனியாகத்தான் இருந்தேன். அப்போ யாரும் இங்கே இல்லை. நீங்கள் வந்ததையும் நான் கவனிக்கவில்லை என்று பாரதி கூறுகிறார் இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது.

அடிக்க கை ஓங்கிய பாரதி

அடிக்க கை ஓங்கிய பாரதி

அப்போது பாரதி புகைத்துக் கொண்டிருந்த சிகரட்டை பிடுங்கி கண்ணம்மா கீழே வீசுகிறார். பாரதி கடுப்பாகி மீண்டும் சிகரெட் பாக்ஸை எடுக்க மொத்தத்தையும் பிடுங்கி கண்ணம்மா வெளியே வீச, கண்ணம்மாவை அடிக்க பாரதி கை ஓங்குகிறார். அங்கிருந்த பெண்களில் ஒருவர் தப்பு நீங்க பண்ணிக்கிட்டு அந்த பொண்ணை அடிக்க வரியாப்பா என்று கேட்க, பாரதி அவமானப்பட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார். பிறகு மது அங்கே வர கண்ணம்மா நடந்த விஷயத்தை சொல்லி பணக்காரனாக இருந்தால் என்ன வேணாலும் பண்ணலாமா? என்று கோபத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார்.

பழிவாங்க துடிக்கும் பாரதி

பழிவாங்க துடிக்கும் பாரதி

அப்போது மது பாரதியும் பணக்காரன் தான் ஆனால் அவன் இப்படி கிடையாது என்று பாராட்டி பேசிக்கொண்டு வீட்டுக்கு கிளம்புகின்றனர். பிறகு பாரதி விஜயுடன் குடித்துக் கொண்டிருக்கும் போது அந்த பொண்ணை சும்மா விடக்கூடாது. என்னை அவ்வளவு பேர் முன்னாடி வச்சு அசிங்கப்படுத்திட்டா என கோபத்தோடு பேச, விஜய் 24 மணி நேரத்தில் அவ யாருன்னு கண்டுபிடிச்சு, நம்ம யாருன்னு அவளுக்கு காட்டலாம் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+