வெண்பாவின் ப்ளான், டிஎன்ஏ டெஸ்ட்டில் மீண்டும் மாற்றம்!பாரதி எடுத்த முடிவு,இப்படி முடிச்சிட்டாங்களே!
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கடைசி எபிசோடு கிட்டத்தட்ட வந்துவிட்டது.
பாரதி மற்றும் வெண்பாவின் திருமணம் நடைபெறுமா? அல்லது பாரதி கண்ணம்மாவோடு சேர்ந்து விடுவாரா? என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் இல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
பாரதியை திருமணம் செய்ய வேண்டும் என்று வெண்பா மண்டபத்தை விட்டு வெளியேறி கோவிலுக்கு சென்று கொண்டிருக்கும்போது டெஸ்ட் ரிசல்ட் பார்த்து விட்டு தான் நான் அங்கே போவேன் என்று விடாப்பிடியாக இருந்த பாரதிக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ரிசல்ட் அமைந்திருக்கிறது.

திருமணத்திற்கு வந்த கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசொட்டில் ஆரம்பமாகும் போது கண்ணம்மா திருமண மண்டபத்திற்கு லட்சுமியோடு வந்து அமர்ந்திருக்கிறார். முதல் வரிசையில் கண்ணம்மா அமர்ந்திருப்பதை பார்த்து சர்மிளாவிற்கு சந்தோஷமாக இருந்தாலும், வெண்பா கண்ணம்மாவை நக்கலாக பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார். கண்ணம்மாவும் மனதிற்குள் ஏதையோ யோசிக்கப்படியே வெண்பாவின் செயல்கள் வித்தியாசமாக இருப்பதை கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்போது பாரதியின் அம்மா, அப்பா, தம்பி, ஹேமா அனைவரும் திருமணத்திற்கு வருகிறார்கள். திருமணத்தை மண்டபத்திற்குள் வந்த பாரதியின் குடும்பத்தை ஷர்மிலா வாசலில் சென்று வரவேற்கிறார்.

கண்ணம்மாவின் வில்லிக்கு திருமணமாம்
பாரதியின் அம்மாவிடம் பாரதி வரவில்லையா? என்று ஷர்மிளா விசாரிக்கவும், பாரதியின் தம்பி பாரதி இல்லாமல் கூட திருமணம் நடக்கும். ரோகித் இல்லாமல் தான் திருமணம் நடக்காது ,பாரதி எப்படியும் வந்துவிடுவார். அண்ணனுக்கு ஒரு மீட்டிங் இருக்கிறது. அதை முடித்துவிட்டு வந்து விடுவேன் என்று கூறி இருக்கிறார் என்று கூறுகிறார். அதற்கு அனைவரும் சிரித்தபடியே ஷர்மிளா, கண்ணம்மா ஏற்கனவே வந்துவிட்டார் .முதல் வரிசையில் இருக்கிறார் போய் பாருங்கள் என்று அனுப்பி வைக்கிறார். அங்கே வந்து கண்ணம்மாவிடம் பாரதியின் அம்மா பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது உனக்கு இவ்வளவு நாட்களாக பிரச்சனை கொடுத்துக் கொண்டிருந்த வில்லிக்கு இன்று திருமணம் இப்போது உனக்கு மனதில் இந்த நாளை மறக்கவே முடியாது என்று கூறுகிறார்.

கல்யாண பொண்ணை காணோம்
அதற்கு பொறுத்திருந்து பார்ப்போம் என்று சிரித்தபடியே உங்க பையன் வரவில்லையா? என்று கண்ணம்மா கேட்கிறார் அதற்கு அதற்கு கண்ணம்மாவின் மாமியார் அவன் வருவான் ஒரு கான்பிரன்ஸ் கால் மீட்டிங் இருக்கிறது. அதை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறார் என்று சொல்லவும் கண்ணம்மா பலமாக சிந்திக்கிறார். ஏற்கனவே அவரிடம் வெண்பா பேசியதையும் இன்று பாரதி திருமணத்திற்கு வராததையும் வைத்து யோசித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மணமேடையில் அமர்ந்திருந்த ரோகித் இடம் வேஸ்டி சட்டையை அணிந்து வர சொல்லி அனுப்பி வைக்கிறார்கள். அதுபோல வெண்பாவிடமும் கல்யாண புடவையை அணிந்து வரச் சொல்லி அனுப்பி வைக்கின்றனர். கல்யாண புடவை கட்ட வேண்டும் அதனால் எல்லோரும் வெளியே இருங்கள் என்று வெண்பா அனைவரையும் வெளியேற்றிவிட்டு உள்ளே லாக் செய்து விடுகிறார். ஐயர் பொன்னை அழைத்து வர சொன்னதும் வெண்பாவை போய் அழைத்து வர ஷர்மிளா செல்கிறார்.

மீண்டும் டெஸ்ட் ரிசல்ட் மாற்றம்
ரொம்ப நேரமாக கதவைத் தட்டி திறக்காததால் அனைவரும் கதவை உடைத்து உள்ளே செல்கின்றனர். அங்கு வெண்பா இல்லை ஜன்னல் வழியாக புடவையை தொங்கவிட்டபடி அங்கிருந்து வெளியேறி விட்டார். ஏற்கனவே திருமணம் நடக்காது என்று கண்ணம்மா கூறிக் கொண்டிருந்தார் அதுபோலவே நடந்து விட்டது. நான் சொன்னேன் அல்லவா, வெண்பா இங்கிருக்க மாட்டாள் ஓடிவிடுவாள் என்று என கண்ணம்மா சொல்கிறார். எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த பக்கம் காரில் ஹாயாக வெண்பா சென்று கொண்டிருக்கிறார். பாரதியிடம் போன் செய்து பாரதி நான் மண்டபத்தை விட்டு வெளியே வந்து விட்டேன், நீ கோவிலுக்கு நேராக வந்துவிடு என்று கூறுகிறார். அதே நேரத்தில் டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட்க்கு போன் செய்த பாரதி அவருக்கு டெஸ்ட் ரிசல்ட் இரண்டு மணிக்கு தான் கிடைத்து விடும் என்று சொல்லிவிட்டார்கள். திருமணம் 11 மணிக்கு இருக்கும்போது டெஸ்ட் ரிசல்ட்டில் தாமதம் இருப்பதால் இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் பாரதி என்று விருவிருப்பான திருப்பத்தோடு இன்றைய எபிசோடு முடிவடைந்து விட்டது.












Click it and Unblock the Notifications