குழந்தைகளுக்காக கண்ணம்மாவின் முடிவு..புது ஊரில் உருவான வில்லன்.. கடைசியில் பாரதிக்கு கிடைத்த ஃக்ளூ
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணமாவை தேடிக்கொண்டிருக்கும் பாரதிக்கு தெரியாத நம்பரில் இருந்து லைவ் லொகேஷன் வரவே அந்த இடத்தில் தான் கண்ணம்மா குடும்பத்தோடு இருக்கிறார் என்று புரிந்து கொண்டு பாரதி கிளம்புகிறார்.
கண்ணம்மா இருக்கும் கிராமத்தில் ஒரு ரவுடி கண்ணம்மாவை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்.

பாரதிக்கு கிடைக்க ஏமாற்றம்
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் கண்ணம்மா ஏற்கனவே இருந்த ஊரில் பாரதியும் கணபதியும் கண்ணமாவையும், குழந்தைகளையும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்த ஊரில் இருந்தவர்கள் ஏற்கனவே கண்ணமாவை நன்றாக தெரியும் அது போல பாரதியும் தெரியும் என்பதால் கண்ணம்மா இங்கே வரவில்லை என்று கூறி அருகில் இருக்கும் ஊர்களில் விசாரித்து வருகின்றனர். ஆனால் அங்கேயும் கண்ணம்மா வரவில்லை என்று பாரதியிடம் சொல்ல பாரதி தவித்து போய் குழப்பத்தோடு தனியாக அமர்ந்து இருக்கிறார்.

சௌந்தர்யாவின் புலம்பல்கள்
அதே நேரத்தில் சௌந்தர்யா பாரதிக்கு போன் செய்ய பாரதி இருக்கும் ஊரை பற்றி சொன்னதும் சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். எதற்காக அவ்வளவு தூரம் சென்றாய். நாம் போலீசில் கம்பளைண்ட் கொடுத்திருப்பதால் அவர்கள் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள். அதுவரைக்கும் நீ வீட்டிலேயே இருக்கலாம் அதை விட்டுவிட்டு இப்படி அங்கே இங்கே தேடிக் கொண்டிருந்தால் எப்படி என்று கேட்க, பாரதியின் அப்பா வேண்டாம் விட்டுவிடு அவனே எல்லா இடங்களுக்கும் தேடி கடைசியில் கண்ணம்மாவை கண்டுபிடித்தால்தான் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் அதனால் அவன் இஷ்ட படியே விட்டுவிடு என்று கூறுகிறார். பாரதி கண்ணம்மாவுக்காக தெருவில் அலைந்து கொண்டிருப்பதை பார்த்து சௌந்தர்யா வருத்தத்தோடு புலம்பி கொண்டிருக்கிறார்.

புது பள்ளியில் சேர்ந்த குழந்தைகள்
அடுத்ததாக கண்ணம்மா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக வந்திருக்கிறார். அப்போது ஸ்கூலில் தலைமை ஆசிரியர் ஹேமா மற்றும் லட்சுமி இருவரிடமும் தனித்தனியாக அப்ளிகேஷன் ஃபார்ம் கொடுத்து நீங்களே ஃபில் பண்ணுங்கள் என்று கூறுகிறார். குழந்தைகள் இப்பவே இருந்து அப்ளிகேஷன் எல்லாம் ஃபில் பண்ண தொடங்கினால் தான் அவர்களுக்குள் கான்ஃபிடன்ட் அதிகரிக்கும் என்று கூற, கண்ணமாவும் ஊர் காரர்களும் சரி என்று சிரித்துக்கொண்டிருக்கின்றனர். அப்போது அப்பாவுடைய பெயரிலும் அம்மாவுடைய பெயரிலும் கண்ணம்மாவின் பெயரை லட்சுமியும் ஹேமாவும் எழுதி இருப்பதால் தலைமை ஆசிரியர் நீங்கள் இருவரும் ஒரே தப்பே செஞ்சி விட்டீங்க, என சொல்ல எங்களுக்கு அப்பாவும் அம்மாவும் கண்ணம்மா தான் என்று குழந்தைகள் இருவரும் கூறுகின்றனர். பின்பு இவர்கள் இருவரும் கண்ணம்மா மீது வைத்திருக்கும் பாசத்தை குறித்து அனைவரும் மெச்சிக் கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் இந்த அளவிற்கு முடிவு எடுக்க வேண்டும் என்றால் அப்போது அந்த டாக்டர் எப்படி நடந்து இருப்பார் என்று அனைவரும் கூறுகிறார்கள்.

புது ரவுடி
அடுத்ததாக புதியதாக ஒரு நபர் காரில் முன் பகுதியில் அமர்ந்தபடி கெத்தாக வருகிறார். அங்கே சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு நபரை தனது தன்னுடைய அடியாள்களை வைத்து பிடித்து அடித்து உதைக்கிறார். அவர் நான் பணத்தை கண்டிப்பாக தந்து விடுவேன் என்று கெஞ்சி கொண்டிருக்கிறார். பணத்தை தருவேன் என்று நினைப்பு இருக்கிறவன் எதற்காக போனை சுவிட்ச் ஆப் செய்தாய் என்று அடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கே கண்ணம்மா ரோட்டில் நடந்து செல்கிறார். கண்ணம்மாவை பார்த்து ரசித்தபடியே இது யார் என்று தன்னுடைய அடியாள்களிடம் அந்த ரவுடி கேட்க இது சென்னையிலிருந்து வந்த பெண், கணவரை பிரிந்து தனியாகத்தான் இருக்கிறார். இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும் அவள் உனக்கு முறை பொண்ணு தான் என்று சொன்ன அந்த ரவுடி கண்ணம்மாவே பார்த்து ரசித்தப்படியே கணவன் இல்லாமல் தனியாக இருக்கும் பெண்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

ஒரு வழியா கிட்ட நெருங்கிட்டாங்க
அடுத்ததாக பாரதியும், கணபதியும் இளநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது பாரதியிடம் கணபதி இந்த நான்கு விரலில் ஒரு விரலை தொடுங்கள் இது நாலு திசையை குறித்து நினைத்து வைத்திருக்கிறேன். இதில் எந்த வாரலை தொடுகிறீர்களோ அந்த திசையை நோக்கி கண்ணம்மா சென்றிருப்பார் என சொல்ல, ஒரு விரலை பாரதி தொட்டதும், இது தெற்கு நோக்கி அப்போ தெற்கே இருக்கும் ஊரில் எந்த ஊரில் என ஒவ்வொரு ஊராக சொல்லிக் கொண்டிருக்கிறார். கடைசியாக அவருக்கு மதுரை நினைவிற்கு வருகிறது. மதுரையின் பக்கத்தில் தான் உன்னுடைய மாமனாரின் சொந்த ஊர் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது, பாரதிக்கு தெரியாத ஒரு நம்பரில் இருந்து லைவ் லொகேஷன் வருகிறது. அது எந்த ஊர் என்று பார்க்கும்போது கடைசியாக சிங்கம்புணரி எனும் ஊரை காட்ட அதுதான் கண்ணம்மா இருக்கும் ஊர் வாங்க அங்க போகலாம் என இருவரும் நடக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications