பசியால் துடித்த பாரதிக்கு கிடைத்த அதிர்ச்சி.. ஊர்க்காரர்களின் செயல்.. கோபத்தில் கண்ணம்மாவின் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதால் யாரும் சாப்பாடு பொருள்கள் கொடுக்காததால் பாரதி பசியால் தவித்துக் கொண்டிருக்கிறார்.

ஹேமா தான் தனக்கு இதுவரைக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருந்த பாரதிக்கு கடைசியில் எதிர்பாராத அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

பாரதிக்கு கிடைத்த மகிழ்ச்சி

பாரதிக்கு கிடைத்த மகிழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் பாரதியும், கணபதியும் பசியில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல் சௌந்தர்யாவிடம் பேசிக் நடித்துக் கொண்டு சௌந்தர்யாவை ஏமாற்றுகின்றனர். பின்பு சௌந்தர்யா போனை வைத்ததும் ஈர டவலை வயிற்றில் கட்டிக்கொண்டு இருவரும் படுத்து தூங்குகின்றனர். அப்போது திடீரென பாரதியின் காலை யாரோ தட்டுவது போல இருக்க கணபதியை எழுப்பி என்னை எதற்காக எழுப்பினீர்கள் என்று பாரதி கேட்க நான் எழுப்பவில்லை ஏதாவது மோகினி வந்து எழுப்பி இருக்குமோ என்று கணபதி சொல்ல பாரதி பயந்து விடுகிறார். பின்பு அருகில் இருக்கும் சாப்பாட்டு தட்டை பார்த்து மகிழ்ச்சி ஆகி சாப்பாட்டை சாப்பிடுகின்றனர். அப்போது இது கண்ணம்மாவின் கைப்பக்குவம் தான் இதை ஹேமாதான் இங்கே கொண்டுவந்து வைத்திருப்பாள் என்று பாரதி கூறுகிறார்.

ஐந்து ரூபாய் டாக்டர்

ஐந்து ரூபாய் டாக்டர்

பின்பு அடுத்த நாள் காலையில் பாரதி இங்கு ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கப்படும் என்று கணபதி மைக்கில் பேசியபடியே இருக்க அப்போது பாரதியும் மருத்துவ உபகரணங்களோடு தயாராக இருக்கிறார். ஆனால் ஊர்காரர்கள் யாரும் இவரிடம் மருத்துவம் பார்ப்பதற்கு தயாராக வரவில்லை. அதே நேரத்தில் அங்கே ஒரு நபருக்கு திடீரென பாம்பு கடித்து விடுகிறது. ஊர்காரர்கள் அனைவரும் அவரை தூக்கி கொண்டு வந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாரதி ஓடி சென்று என்ன ஆனது என விசாரிக்க நீ இங்கே வர வேண்டாம் உன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறது என்று ஊர் தலைவர் பாரதியை திட்டுகிறார்.

அடுத்த கடிதம்

அடுத்த கடிதம்

பாரதி இவரை அங்கே தூக்கிக் கொண்டு வாங்க நான் பார்க்கிறேன் என்று சொல்ல, இவர் செத்தாலும் பரவாயில்லை நாங்கள் உன்கிட்ட கொண்டு வர மாட்டோம் என்று ஊர்காரர்கள் சொல்கின்றனர். பின்பு அந்த நபரை வேறு ஊருக்கு வண்டியில் ஏற்றி விடுகிறார்கள். இதை பார்த்த பாரதி மற்றும் கணபதி இருவரும் பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். எப்போதுதான் இந்த ஊர்காரர்கள் நம்மை புரிந்து கொள்வார்களோ என இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கே கண்ணம்மாக்கு தலைவலியாக இருக்கிறது அதனால் மாத்திரை கொண்டு வந்து கொடுங்கள் என்று அதில் எழுதி இருக்கிறது அதை படித்து பாரதி பள்ளிக்கு வருகிறார்.

கடைசியில் தெரிந்த உண்மை

கடைசியில் தெரிந்த உண்மை

பாரதி ஸ்கூலில் வந்து கண்ணம்மாவிடம் மாத்திரையை கொடுக்க கண்ணம்மா கண்டபடி திட்டுகிறார். உங்களிடம் நான் கேட்கவில்லை எனக்கு நீங்கள் தர வேண்டாம் என்று கோபத்தோடு திட்டி கண்ணம்மா கிளம்பி செல்ல, பாரதி நடந்து வந்து கொண்டிருக்கும்போது அங்கே எதார்த்தமாக வரும் ஹேமாவை பார்க்கிறார். ஹேமாவை பார்த்து நீ என்னை புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப நன்றி, நீயாவது என்னை புரிஞ்சுகிட்டியே, எல்லாரும் என்ன வெறுக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கும்போது நீ என் பொண்ணு என் மேல இவ்வளவு பாசமா இருக்கான்னு தெரியும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்குன்னு தெரியுமா? என பேசிக்கொண்டு இருக்கும் போது ஹேமா நான் உங்ககிட்ட இன்னும் சமாதானம் ஆகவே இல்லையே! எனக்கு உங்க மேல கோபம் கொஞ்சம் கூட குறையல. எங்க அம்மாவை நீங்க எவ்வளவு எல்லாம் பேசி இருக்கீங்க? இங்க வந்து இப்படி சும்மா எதாவது பேசி என் மனதை மாற்றலாம் என்று பார்க்காதீங்க என்று கோபத்தோடு கிளம்பி செல்ல, பாரதி அப்போ யார் நம்மளுக்கு இதெல்லாம் செய்தது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கிருந்து லட்சுமி டாக்டரப்பா என்று கூப்பிடுகிறார். பாரதி லட்சுமியை திரும்பிப் பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+