
கண்ணம்மா கூறிய உண்மை.. வில்லியாக மாறிய சௌந்தர்யா.. கடைசியில் எதிர்பார்க்காத சீரியல் முடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு பாரதி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு வீட்டிற்கு வர சொல்லி கெஞ்சி கொண்டிருக்கிறார். ஆனால் கண்ணம்மா ஒரே வார்த்தையால் பாரதியை வாயை அடக்கி வைத்திருக்கிறார்.
இதுவரைக்கும் யாருக்கும் தெரியாமல் இருந்த பல உண்மைகளை கண்ணம்மா கூறியதை கேட்டு சௌந்தர்யா குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார்.
"ஜுரத்துக்காக ஹாஸ்பிடலுக்கு போயி கணவரின் உயிரை".. எதிர்நீச்சல் பட்டம்மாள் நிஜ வாழ்க்கை வேதனை

காலில் விழுந்த பாரதி
பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் பாரதி கதறி அழுது கொண்டு என் வாழ்க்கையில் ஏன் இப்படி நடக்கணும், இவ்வளவு நாளாக நான் பிரண்ட் என நம்பி என் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறேன் என்று கதறி அழுது கொண்டிருக்கிறார். பாரதி, கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வா நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி எல்லாரும் சேர்ந்து சந்தோஷமாக வாழலாம் என சௌந்தர்யா சொல்ல, பாரதி என்னை மன்னித்துவிடு கண்ணம்மா என காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அதற்கு கண்ணம்மா எந்த பதிலும் சொல்லாமல் சிலை போல நின்று கொண்டிருக்கிறார். சௌந்தர்யா பாரதியை தூக்கி விட பாரதி மீண்டும் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இனி அப்பா பாரதிதானாம்
அதுபோல தன்னுடைய குழந்தைகளை இத்தனை நாளும் நான் ஏற்றுக்கொள்ளாதது எவ்வளவு பெரிய முட்டாள்தனத்தை செய்து விட்டேன் என்று கதறி அழுது கொண்டிருக்கிறார். குழந்தைகளை கட்டிப்பிடித்தபடி கதறி அழுது கொண்டிருந்த பாரதி ஹேமாவிடம் நான்தான் உன்னுடைய அப்பா, லட்சுமி இனி நீ யார்கிட்ட வேணும்னாலும் டாக்டர் பாரதி தான் என்னுடைய அப்பா என தைரியமாக சொல்லு என கூறுகிறார். பிறகு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வாங்க வீட்டுக்கு போகலாம் இனி எல்லா பிரச்சனையும் முடிந்தது என கிளம்பி செல்ல கண்ணம்மா எதுவும் பேசாமல் அப்படியே நிற்கிறார். ஒரு நிமிடம் யோசித்து மீண்டும் பாரதி கண்ணம்மாவிடம் வந்து கெஞ்சுகிறார்.

சௌந்தர்யாவை போட்டுக் கொடுத்த கண்ணம்மா
கண்ணம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு என்னை மன்னிக்க மாட்டியா என அழ ஒரே வார்த்தையில் மன்னிப்பு கேட்டுட்டா எல்லாமே மறந்து போயிடுமா? நீங்க சொன்ன ஒரு வார்த்தை மன்னிப்புல என்னுடைய பத்து வருஷம் போராட்டம் இருக்கு, பத்து வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு பேப்பரை காட்டி தான் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினீங்க, வயிற்று குழந்தையோடு தங்குவதற்கு இடம் இல்லாமல் நான் எவ்வளவு அவஸ்தைப்பட்டேன் என்று உங்களுக்கு தெரியுமா? குழந்தை பிறக்கும் வரைக்கும் நான் எவ்வளவோ போராட்டங்களை அனுபவித்திருக்கிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அதில் ஒன்றை உங்க அம்மா தூக்கிக்கொண்டு வந்து வளர்த்தது அதற்குப் பிறகு அந்த குழந்தையை நான் என்னுடைய குழந்தை என்று தெரிவதற்காக எவ்வளவு பாடுபட்டேன் என கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்
ஹேமா அப்போ என்னை எதற்கு பாட்டி நீங்க தூக்கிக்கிட்டு வந்தீங்க? என கேட்க இரண்டு குழந்தைகளில் ஒன்றாவது உங்க அப்பாவிடம் வளரட்டும் என்று கொண்டு வந்தேன். அப்போ நீ கண்ணம்மா குழந்தை என்று சொல்லியிருந்தால் பாரதி உன்னை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டான். அதனால் தான் உண்மையை சொல்லவில்லை என்று சொல்கிறார். ஹேமா ஒரு வில்லியை பார்ப்பது போல சௌந்தர்யாவை பார்க்கிறார். பின்பு பாரதி நான் தான் உனக்கு பிரசவம் பார்த்தேன் உனக்கு தெரியுமா என கண்ணம்மாவிடம் கேட்க, தெரியும்! ஆனால் அந்த நேரத்தில் எனக்கு பிறந்த குழந்தையை அதோட முகத்தை கூட நீங்க பார்த்தீங்களா? ஏதோ கடமைக்கு தூக்கி தொட்டிலில் போட்டுவிட்டு போய்ட்டீங்களா? என்று கேட்க பாரதி பதில் பேசாமல் இருக்கிறார்.

பாரதியிடம் பதில் இல்லையே
லட்சுமியை கிராமத்தில் நான் வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? அதெல்லாம் போகட்டும் உங்க பையன் இன்னைக்கு ஒரு பேச்சு பேசுவார் நாளைக்கு ஒரு பேச்சு பேச மாட்டார் என்று என்ன நிச்சயம்? உங்க பையன் தான் வெள்ளந்தி ஆச்சே, யார் என்ன சொன்னாலும் நம்பிடுவாரு, வெண்பா மாதிரி இன்னொரு ஆள் அந்த இடத்துக்கு வர மாட்டார் என்று எப்படி சொல்ல முடியும் என்று சௌந்தர்யாவிடம் கண்ணம்மா கேட்க சௌந்தர்யா பதில் பேச முடியாமல் இருக்க, அது மட்டுமல்லாமல் போன வாரம் கூட எல்லாத்தையும் மறந்துட்டு ஒன்றாக சேர்ந்து வாழலாம் வீட்டுக்கு வாங்க என சொன்னேன். ஆனா முகத்துல அடிச்ச மாதிரி முடியாதுன்னு சொன்னாரு, ஏன் அப்படி சொன்னீங்க? என கேட்க, பாரதி பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.