தற்கொலை முயற்சி செய்யும் ஹேமா.. காரணத்தைக் கேட்டு கதறி அழும் கண்ணம்மா.. எதிர்பார்க்காத திருப்பங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய ப்ரோமோவில் மயக்க நிலையில் இருந்த ஹேமா கண் முழித்து யாரும் எதிர்பார்க்காத வேலையில் தற்கொலை முயற்சி செய்து அனைவரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய அப்பா யார் என்பதை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஹேமா செய்த செயலால் கண்ணம்மா கதறி அழுது கொண்டிருக்கிறார்.

முடிவுக்கு வந்த டிஎன்ஏ பிரச்சனை

முடிவுக்கு வந்த டிஎன்ஏ பிரச்சனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த சீரியலில் அடுத்தடுத்த பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. பல வருடங்களாக வெளியே தெரியாத உண்மைகள் கூட இப்போது ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கிறது. பல வருடங்களாகவே பாரதி எப்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக இப்போதுதான் டி என் ஏ டெஸ்ட் எடுத்திருக்கிறார். டெஸ்ட் முடிவுக்காக காத்திருந்து ஒவ்வொரு மாதமும் கடந்து கொண்டிருந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாரதி தான் ஹேமா மற்றும் லட்சுமியின் அப்பா என்று உறுதியாக டாக்டர் கூறுகிறார்.

தீராத பிரச்சனைகள்

தீராத பிரச்சனைகள்

ஏற்கனவே ஒரு சில நாட்களாகவே ஹேமா வீட்டை விட்டு வெளியேறி ரவுடிகள் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த நிலையில், பல போராட்டங்களுக்குப் பிறகு கண்ணம்மா இப்போது தான் ஹேமாவை காப்பாற்றி கொண்டு வந்திருக்கிறார். தலையில் அடிபட்டு இருந்த காரணத்தால் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் தற்போது ஹேமாவுக்கு உடல் நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என டாக்டர்கள் கூறிய பிறகு குடும்பத்தினர் அனைவரும் நிம்மதி அடைந்திருந்தனர். ஆனால் பாரதி எங்கே சென்றார் என தெரியாமல் அனைவரும் தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாரதியின் மீது கண்ணம்மாவிற்கு சந்தேகம் வருகிறது.

முடிவது போல தெரியலையே

முடிவது போல தெரியலையே

அதே நேரத்தில் இத்தனை வருடங்களாக கண்ணம்மா தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று புலம்பி கொண்டிருந்த பாரதி தற்போது உண்மையை தெரிந்து கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்பதற்காக கதறி அழுது கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய அப்பா யார் என்று உண்மை தெரியாமல் இருந்த ஹேமா எடுக்கும் முடிவுகளால் இன்னும் ஒரு சில வாரங்கள் சீரியல் நகர்ந்துவிடம் போலையே என தற்போது வெளியான ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் நொந்து போய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

யாருன்னு தான் சொல்லுங்களேன்

யாருன்னு தான் சொல்லுங்களேன்

இன்றைய ப்ரோமோவில் ஹேமா மருத்துவமனையில் கண் விழித்து விடுகிறார். வெளியே சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் காவலுக்கு இருக்கின்றனர். அவர்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஹேமாவின் முகத்தில் மாட்டியிருக்கும் மாஸ்க்கை நர்ஸ் ஒருவர் எடுத்து விடுகிறார். பிறகு எப்படியாவது அப்பா யார் என்பதை கண்டுபிடித்து ஆக வேண்டும் என்று வெளியே வந்த ஹேமா, தாத்தா பாட்டி இருப்பதை பார்த்து அவர்களுக்கு தெரியாமலே லிப்டில் ஏறி மாடிக்கு சென்று அங்கே மாடிப்படிக்கு வரும் கதவை லாக் செய்துவிட்டு மொட்டை மாடியில் உச்சியில் நின்று கொண்டு இருக்க, அங்கே வந்த வாட்ச்மேன் பாப்பா கீழே இறங்கு என கத்துகிறார். அதே நேரத்தில் நர்ஸ் கண்ணம்மாவிடம் ஹேமா மொட்டை மாடியில் நின்று கொண்டு இறங்க மாட்டேன் என்று கொண்டு அடம் பிடிக்கிறாள் என்று சொல்ல, கண்ணம்மா வெளியே ஓடிவந்து ஹேமா கீழே இறங்கு என அழுதப்படியே கத்திக் கொண்டிருக்கிறார். நான் இறங்க மாட்டேன் என்னுடைய அப்பா யார் என்று சொன்னால் தான் நான் இறங்குவேன் என்று ஹேமா வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+