ஹேமாவிடம் மொத்த உண்மையையும் கூறிய கண்ணம்மா.. மனம் மாறிய பாரதி... இணையத்தில் லீக் ஆன கடைசி முடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த கட்டம் நடைபெறுவது என்ன என்பது பற்றிய வீடியோ வெளியாகி இருக்கிறது.
இதுவரைக்கும் ஹேமா தான் அனாதை என்று நினைத்துக் கொண்டு இருந்த நிலையில் தற்போது நான் தான் உன்னுடைய அம்மா என்று கண்ணம்மா உண்மையை கூறியிருக்கிறார்.
டி என்ஏ டெஸ்ட் ரிசல்ட்க்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாரதிக்கு கடைசி நேரத்தில் ஷாக்காக ஆகின்ற மாதிரி ரிசல்ட் கிடைத்து இருக்கிறது.

தீராத டிஎன்ஏ டெஸ்ட் பிரச்சனை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் முதல் பாகம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கின்றது .இதனை தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் முதல் பாகத்தின் கடைசி முடிவு என்ன என்பது ரசிகர்களின் மத்தியில் ஆர்வமாக எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்த பாரதிக்கு வெண்பாவால் ஏமாற்றம்தான் கிடைத்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் வெண்பா டெஸ்டில் ஏமாற்றம் செய்து வந்தார். ஆனால் இது தெரியாம பாரதி கண்ணம்மாவை தவறாக நினைத்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக பாரதி டெஸ்ட் எடுத்திருக்கிறார்.

அம்மாவைப் போல பெட்டியை கையில் எடுத்த மகள்
டெஸ்ட் ரிசல்ட் வருவதற்கு முன்பு வெண்பாவின் கழுத்தில் தாலி கட்டக் கூடாது என்று வைராக்கியத்தோடு இருந்த நிலையில் வெண்பாவின பிளானால் குடும்பத்தினர் அனைவரின் முன்பும் பாரதி அவமானப்பட்டு இருக்கிறார். தற்போது அவரை அனைவரும் வெறுத்து ஒதுக்கி இருக்கும் நிலையில் ,இந்த வீட்டில் இனி நான் இருக்க மாட்டேன் என்னை அனாதை ஆசிரமத்தில் கொண்டு விட்டு விடுங்கள் என்று கையில் பெட்டியை தூக்கிக்கொண்டு ஹேமா கிளம்பி விடுகிறார் .

பெற்றெடுத்த மகள்
ஹேமாவை ஒவ்வொரு முறையும் அழ வைக்கக்கூடாது என்று கண்ணம்மாவும் நீ அனாதை கிடையாது என்று சொல்லும் போது வழக்கம் போல சௌந்தர்யா கண்ணம்மா வேண்டாம் என்று தடுக்கிறார் .ஆனால் இந்த முறை உங்கள் பேச்சை நான் கேட்க மாட்டேன் என்று கண்ணம்மா ஹேமாவிடம் நீதான் நான் பெற்றெடுத்த மகள் என்ற உண்மையை கூறுகிறார். பாரதி ஒரு பக்கம் டெஸ்ட் ரிசல்ட் காக காத்துக் கொண்டிருக்கும் போது ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்பதை ஹேமா உணர்ந்துவிட்டார்.

தொடரப்போகும் பகை
இதனால் இனி ஹேமா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு கூடியிருக்கும் நிலையில் டெஸ்ட் ரிசல்ட்டில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் பாரதியின் குழந்தைகள் என்று ரிசல்ட் வர இருக்கிறதாம். இதனால் கண்ணம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு பாரதி கண்ணம்மாவோடு சேர்ந்து வாழ இருக்கிறாராம். அதோடு குழந்தைகள் இருவரும் ஆரம்பத்தில் பாரதி மீது வெறுப்பை காட்டினாலும், குடும்பத்தினர் அனைவரும் புரிய வைத்த பிறகு பாரதியை ஏற்றுக்கொள்ள இருக்கிறார்களாம். வெண்பா பாரதிக்காக தனது வயிற்றில் வளர்ந்த குழந்தையை அபார்ஷன் செய்து விட்டார் ஆனால் பாரதி மீண்டும் கண்ணம்மாவோடு சேர்ந்து வாழ்வதை தாங்கிக்கொள்ள முடியாமல் பாரதியை பழிவாங்க அடுத்த சீசனில் தொடங்கப் போகிறாராம்.












Click it and Unblock the Notifications