பாரதிக்கு ஷாக் கொடுக்க போகும் கண்ணம்மா.. கெஞ்சும் சௌந்தர்யா..எதிர்பாராத சீரியல் முடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு மேல் படிப்பு படிப்பதற்காக லெட்டர் ஒன்று வந்திருக்கிறது.
ஒரு வாரத்திற்குள் பாரதி பழைய நிலைக்கு வரவேண்டும் என சௌந்தர்யா கண்ணம்மாவிடம் கெஞ்சி வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
கண்ணம்மா பாரதிக்கு உதவி செய்ய புதிய முயற்சி எடுத்து இருக்கிறார்.

பாரதிக்கு வந்த லெட்டர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சௌந்தர்யா, அஞ்சலி, கணபதி அனைவரும் கோவிலில் இருக்கின்றனர். அப்போது அகிலன் ஒரு லெட்டரை கொண்டு வருகிறார். பாரதிக்கு வெளிநாட்டில் மிகப்பெரிய யூனிவர்சிட்டியில் ஹார்ட் ஜர்ஜனாக வேலை கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த யுனிவர்சிட்டியில் எந்த பணமும் கட்டாமல் உயர் படிப்பையும் படிக்கலாம் ஆனால் ஒரு வாரத்திற்குள் இதற்கு பாரதி பதில் அளிக்க வேண்டும் இல்லை என்றால் இது கேன்சல் ஆகிவிடும் என்று கூறுகிறார்.

சௌந்தர்யா கேட்கும் உதவி
லெட்டர் வந்ததும் அனைவரும் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கின்றனர் அப்போது இதற்கு நான் கண்ணம்மாவிடம் பேசுகிறேன் என்று சௌந்தர்யா கூறிக்கொண்டு கையில் லெட்டரை வாங்கிக் கொண்டு கண்ணம்மாவை சந்திக்க வருகிறார் கண்ணம்மாவிடம் நீ எப்படியாவது எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று பாரதிக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை பற்றி கூறி கண் கலங்குகிறார். பின்பு என்னுடைய பாரதி மீண்டும் பழைய நிலையில் வர வேண்டும் அது உன்னால் மட்டும் தான் முடியும் என்று கூறுகிறார்.

கணபதியின் அடுத்த பிளான்
அடுத்ததாக கணபதி அகிலனிடம் கண்ணம்மா தன்னை சந்தித்ததாகவும் அப்போது நான் கண்ணம்மாவுக்கு ஒரு ஐடியா சொல்லி இருக்கிறேன் அது படி நடந்தால் சீக்கிரமாக பாரதிக்கு நினைவு திரும்ப விடும் எனக் கூற என்னவென்று அகிலன் கேட்டதும் பிளானை கூறுகிறார். பிறகு இருவரும் பாரதியிடம் உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது கண்ணம்மா என்பவர்தான் உன்னுடைய மனைவி நீங்கள் இருவரும் பார்த்துக் கொள்ளாமலே காதலித்தீர்கள் என்று பல கதைகளை அடித்து விடுகிறார்கள் இவர்களது கதையை பாரதியும் நம்பிக் கொண்டிருக்கிறார்.

பாரதிக்கு போன் செய்யும் கண்ணம்மா
பிறகு பாரதிக்கு கண்ணம்மா போன் செய்து என்ன மறந்துட்டீங்களா என கேட்க, அதற்கு பாரதி இல்லை எனக்கு ஆக்சிடென்ட் ஆகி எல்லாவற்றையும் மறந்து விட்டேன் என கூறுகிறார். பிறகு கண்ணம்மா நாளைக்கு உங்களுக்கு பிறந்தநாள் உங்களை சந்திக்க தேவிப்பட்டணம் பீச்சுக்கு வரேன் நீங்களும் வந்துருங்க உங்ககிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணும் என சொல்கிறார். இதனால் பாரதி கண்ணம்மா என்ன விஷயம் சொல்லப் போகிறார் என்று சந்தோஷமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications