கெடு வைத்த பாரதி.. சவாலில் தோற்ற கண்ணம்மா.. செம ட்விஸ்ட்... எதிர்பார்க்காத சீரியலின் கடைசி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி ஒரு நாள் முழுக்க தன்னை நினைக்காமல் இருக்க வேண்டும் என்று கண்ணம்மாவிடம் சவால் விட்டு இருக்கிறார்.

கண்ணம்மாவிற்கு பார்க்கும் இடமெல்லாம் பாரதிக்கு நினைவாக தான் வந்து கொண்டிருக்கிறது.

கடைசியில் பாரதி வைத்த சவாலில் கண்ணம்மா தோற்றுவிட்டார்.

பாரதியின் நினைவு

பாரதியின் நினைவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசொட்டின் ஆரம்பத்தில் பாரதி ஒரு நாள் முழுக்க தன்னை நினைக்காமல் இருக்க வேண்டும் என கண்ணம்மாவுக்கு சவால் விட்ட நிலையில், கண்ணமாவுக்கு காலையில் எழுந்ததில் இருந்து அடிக்கடி பாரதியின் நினைவு வந்து கொண்டே இருக்கிறது. கிணற்றில் தண்ணீர் இறைக்கும் போது அங்கே அருகே ஒட்டப்பட்டு இருக்கும் வால்போஸ்டரில் பாரதியின் புகைப்படம் இருப்பது போல தோன்றுகிறது. அடுத்ததாக வீட்டில் தாமரையோடு சேர்ந்து காய்கறி கட் பண்ணிக் கொண்டிருக்கும்போது பாரதி கண்ணம்மா என்கிற பாடல் ஒலித்துக் கொண்டே இருக்க கண்ணம்மாவுக்கு பாரதியின் நினைவு வந்து கொண்டே இருக்கிறது.

பாண்டியோடு ஏற்படும் பிரச்சனை

பாண்டியோடு ஏற்படும் பிரச்சனை

அடுத்ததாக பாரதி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும்போது பாண்டி அங்கு வந்து இளநீர் கடைக்காரரிடம் கலந்து வட்டி கேட்டு தகராறு செய்ய பாரதி இது ரொம்ப தப்பு என பாண்டியிடம் பேச, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பாண்டி இப்படி தேவையில்லாமல் பேசிகிட்டு இருந்தா நடக்கிறது வேற என அறிவாளை தூக்கி காட்ட, பாரதி சவால் விடுகிறார். பாரதியை வெட்டாமல் விடமாட்டேன் என்று பாண்டி அருவாவை தூக்கும் போது அவருடைய நண்பர்கள் நிலைமை சரியில்லை போலீஸ் பிரச்சனையாகிவிடும் பாரதிக்கு இப்போது போலீஸ் ஆதரவு இருக்கிறது என அறிவுரை கூறியதும் பாண்டி அங்கிருந்து கோபத்தோடு கிளம்புகிறார்.

சவாலில் தோற்ற கண்ணம்மா

சவாலில் தோற்ற கண்ணம்மா

அடுத்ததாக மாலை நேரமானதும் பாரதி கண்ணம்மாவை வழிமறித்து பேச முயற்சி செய்ய, கண்ணம்மா விலகி அடுத்த தெருவில் சென்று கொண்டிருக்கிறார். பிறகு வழிமறித்த பாரதி நீ இன்னைக்கு முழுக்க என்னை நினைச்சுகிட்டு இருக்கா? என சொல்ல, நீங்க விட்டது ஒரு சவால்? இதுல நான் தோத்துட்டேன் என்று கண்ணம்மா பேச, பாரதி அப்போ நீ இன்னைக்கு என்ன உண்மையாகவே நினைத்து இருக்க, நான் உன்னையும் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டுதான் இந்த ஊரை விட்டு போவேன் என்று உறுதியாக பேசிக் கொண்டிருக்கிறார்.

இது கனவா பாரதி

இது கனவா பாரதி

அடுத்ததாக கண்ணம்மாவிடம் அவருடைய அப்பா உன்னால் எல்லாம் சமாளிக்க முடியுமா? என்று பேசிக் கொண்டிருக்க தனக்கு தற்போது மசாலா பொருள் அரைத்து கொடுக்கும் வேலையும் செய்து வருவது மட்டுமல்லாமல் நிறைய பேர் ஆர்டர் கொடுத்து வருகிறார்கள். என்னால் எல்லா ஊர்களுக்கும் சென்று கொடுக்க தான் முடியவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் காலையில் அப்பா ஒரு புது வண்டி புக் செய்து, வண்டிக்கு பூஜை போட பாரதி அதை பார்த்து கொண்டிருக்கிறார். அப்போது கணபதி பாரதியிடம் கண்ணம்மாவுக்கு பைக் ஓட்ட தெரியுமா? என கேட்க தெரியாது என சொல்லிக் கொண்டிருக்கும்போது பாரதிக்கு தான் அருகில் இருந்து பைக் ஓட்ட சொல்லிக் கொடுப்பது போல நினைத்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+