சமீபத்தில் திருமணம் செய்த பாரதி கண்ணம்மா அகிலன் பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் அகிலன் கேரக்டரில் நடிக்கும் சுகேஷ் தனது மனைவியோடு முதல் மாத திருமண கொண்டாட்டத்தை கொண்டாடி இருக்கிறார்.
எளிமையான முறையில் திருமணத்தை முடித்துக் கொண்ட சுகேஷ் தற்போது தன்னுடைய மனைவியோடு முதல் மாத கொண்டாட்டத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா அகிலன்
சின்னத்திரையில் அதிகமாக மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பிடித்த ஒரு சீரியலாக இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்து விட்டனர். அதுவும் தற்போது அகிலன் கேரக்டரில் நடித்து வரும் சுகேஷ் சந்திரசேகர் பாரதிக்கு இணையாகவே கேரக்டரில் நடித்து வருகிறார். ஒரு வருட காலம் அவை இந்த சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் சுகேஷ் கடந்த மாதம் தான் எளிமையான முறையில் திருமணத்தை செய்திருந்தார் .இதற்கு முன்பு இதே கேரக்டரில் வேற ஒரு நடிகர் நடித்துக் கொண்டிருந்தார். அவர் சீரியலை விட்டு விலகி திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக விலகியதும் சுகேஷ் இந்த சீரியலில் அறிமுகமானார். அறிமுகமான பிறகு இந்த சீரியலில் இவருடைய கதைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

விரைவில் முடிவு
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி வெண்பாவை திருமணம் செய்வதற்காக கோவிலுக்கு சென்ற போது குடும்பத்தினர் அனைவரும் ரவுண்டு கட்டி திட்டி தீர்த்தனர். அதிலும் அகிலனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வேற லெவல் என்று ரசிகர்கள் பலர் கூறி வந்தனர். அந்த அளவிற்கு ரசிகர்களை கவரும் விதமாக நடித்து வருகிறார். இன்னும் ஒரு சில நாட்களில் அந்த சீரியலில் முதல் பாகம் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களை ரசிகர்கள் மிஸ் பண்ணி வருவதாக கூறுகின்றனர்.அதில் ஒருவராக அகிலன் கேரக்டரில் நடிக்கும் சுகேஷும் இருந்து வருகிறார்.

முதல் மாத கொண்டாட்டம்
இன்றைய எபிசோட்டில் ஹேமாவை தேடி அலைந்து கொண்டிருக்கும் கண்ணம்மாவுக்கு உறுதுணையாக தன்னுடைய தவிப்புகளையும் கோபத்தையும் காட்டி கடைசியில் ஹேமாவை கண்டுபிடித்து அகிலன் இம்ப்ரஸ் பண்ணியிருக்கிறார். இந்த நிலையில் இவர் நடித்து வரும் சீரியல் விரைவில் முடிவடைய இருப்பதை நினைத்து வருத்தமாக இருந்தாலும் இவர் இன்று தன்னுடைய மனைவியோடு முதல் மாத திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகி இருக்கும் நிலையில் அதை பிரமாண்டமாக மனைவியோடு கொண்டாடி அதை புகைப்படங்களாக பதிவிட்டு சமூக வலை தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

குவியும் வாழ்த்துக்கள்
சுகேஷ் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்களுக்கு இவருடைய திருமணம் முடிந்ததே தெரியாமல் தான் இருந்த நிலையில் இவருக்கு எப்போது திருமணம் முடிந்து இருக்கிறது என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். சுகேஷ் க்கும் அவருடைய மனைவிக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி ஆசீர்வாதங்களை அனுப்பி வருகிறார்கள். மீண்டும் புது சீரியலில் வரவேண்டும் என்று அன்பு கட்டளைகளை விட்டு வருகிறார்கள்.ஆனால் ஒரு சில பெண் ரசிகைகள் இவருடைய திருமணமான செய்தியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ஏக்கத்தோடு பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications