சூரியவம்சம் படத்தை தவறவிட்ட நடிகர்.. அதுவும் சூட்டிங் ஸ்பாட்டில் பேசிய அந்த வார்த்தை தான் காரணமாம்
சென்னை: நடிகர் சரத்குமார் நடிப்பில் பெரிய அளவில் வெற்றி பெற்ற சூரிய வம்சம் திரைப்படத்தில் சரத்குமாரின் பேரன் கேரக்டரில் ஆரம்பத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நடிக்க இருந்த நிலையில் அவர் சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்காமல் போயிருக்கிறார். அது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பாவா லட்சுமணன் பேசி இருக்கிறார். அது இப்போது இணையத்தில் பலருடைய கருத்தை பெற்று வருகிறது.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அந்த நேரத்தில் கொடிகட்டி பறந்தவர்களில் ஒரு சிலர்தான் கதாநாயகி, கதாநாயகனாகவும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, மீனா உட்பட ஒரு சிலரை சொல்லலாம். அந்த வரிசையில் வருவதற்காக நடிகர் மாஸ்டர் மகேந்திரன் போராடிக் கொண்டிருக்கிறார்.

மாஸ்டர் மகேந்திரன் நாட்டாமை திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் பிரபலமாகி இருந்தாலும் அந்த நேரத்தில் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். அதிலும் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய ஏழு படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். கலகலப்பான ஜாலியான கேரக்டர் என்றாலே அங்கு மாஸ்டர் மகேந்திரன் தான் அந்த நேரத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தான் அவருக்கு சூரியவம்சம் திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சூரிய வம்சம் திரைப்படம் பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்த படத்தில் நடிகர் சரத்குமார், தேவயானி, ராதிகா உட்பட பலர் நடித்திருப்பார்கள். அதுபோல சரத்குமார் வெற்றி பெற படங்களில் முதல் இடத்தில் இந்த திரைப்படம் தான் இருக்கும். இப்ப வரைக்கும் பல காதலர்களின் ரோல் மாடல் இந்த திரைப்படமாக இருந்து வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் வந்த வசனங்கள் இப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
அதிலும் தாத்தா சரத்குமாருக்கு பேரன் பாயாசம் கொடுக்கிற காட்சிகள் பெரிய அளவில் பெயர் வாங்கியது. இப்போது பல காமெடி நிகழ்ச்சிகளில் கூட அந்த காட்சிகள் ரீகிரியேட் செய்யப்படுகிறது. அதுபோல "வேணும்னு யாராவது மை கொட்டுவாங்களா பிரண்ட்" என்று பேரன் கேட்கும் கேள்விகளும் அருமையாக இருக்கும். அந்த கேரக்டரில் நடிகை ஹேமா நடித்திருந்தார். ஹேமா பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
ஆனாலும் அவருக்கு கனாக்காணும் காலங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்ததுதான் இப்ப வரைக்கும் அடையாளமாக இருந்து வருகிறது. ஆனால் சூரியவம்சம் திரைப்படத்தில் முதலில் நடிக்க தேர்வாகி இருந்தது மாஸ்டர் மகேந்திரன்தானாம். ஆனால் அவர் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த பிறகு, என்ன டயலாக்.. எத்தனை ஷாட்.. என்ன கேமரா ஆங்கிள்னு கேட்டுக்கொண்டே இருந்தாராம். இதை பார்த்து கோபமான விக்ரமன் அந்த பையனை வெளியே அனுப்பிடுங்கன்னு சொல்லிவிட்டார்.. என்று நடிகர் பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications