பிக்பாஸ் 2 :நல்லா ஹாயா உட்கார்ந்து ஜாலியா புறணி பேசுங்க.. புதுப்புது திண்ணைகள் இருக்கு!

பிக்பாஸ் 2 வீட்டில் புதிய திண்ணைகள் நிறைய அமைக்கப்பட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிக்பாஸ் 2 செட்டில் பத்து நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன- வீடியோ

    சென்னை: பிக்பாஸ் சீசன் 2விற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வீட்டில், முந்தைய சீசனில் இருந்ததைவிட அதிக நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.

    பிக்பாஸ் வெற்றியைத் தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 2விற்கு தயாராகி விட்டது விஜய் டிவி. வரும் ஞாயிறு இரவு முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த சீசனைப் போலவே இதிலும் 15 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், போட்டியாளர்கள் 100 நாள் தங்கப் போகும் வீடு எப்படி இருக்கும் என்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதைப் பார்க்கும்போது வீடு முழுவதும் நாற்காலிகளால் நிரம்பி இருப்பது போன்ற தோற்றம் உள்ளது.

    எப்போதும் புறணி...

    எப்போதும் புறணி...

    கடந்த சீசனில் வீட்டின் வெளியே ஒரு சோபா மட்டுமே போடப்பட்டிருந்தது. பெரும்பாலான நேரம் அதில் யாராவது சிலர் அமர்ந்தே இருப்பர். வீட்டிற்குள் அவர்களுக்குத் தேவையான வேலைகளை அவர்களே செய்து கொள்ள வேண்டும் எனச் சொல்லப்பட்டாலும், எப்போது பார்த்தாலும் யாராவது யாரையாவது பற்றி புறணி பேசிக் கொண்டு, வெட்டியாகத் தான் அதில் அமர்ந்திருப்பர்.

     திண்ணைகள் ஏராளம்:

    திண்ணைகள் ஏராளம்:

    ஒரு சோபாவில் அமர்ந்தே ஓராயிரம் புறணி பேசினார்கள் கடந்த முறை. இந்நிலையில் இம்முறை வீட்டின் வெளியே பல இடங்களில் திண்ணை போன்ற அமைப்பில் சோபாக்கள் போடப்பட்டுள்ளன. அப்படியானால் திண்ணைக் கச்சேரியால் நிகழ்ச்சி களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரு சோபாவில் அமர்ந்தே ஓராயிரம் புறணி பேசினார்கள் கடந்த முறை. இந்நிலையில் இம்முறை வீட்டின் வெளியே பல இடங்களில் திண்ணை போன்ற அமைப்பில் சோபாக்கள் போடப்பட்டுள்ளன. அப்படியானால் திண்ணைக் கச்சேரியால் நிகழ்ச்சி களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பல குழுக்கள்:

    பல குழுக்கள்:

    நிகழ்ச்சிக்கான விளம்பரத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு பிரச்சினைக்குரிய நபர் ஒருவர் வரப்போவதாக கமல் சூசகமாகத் தெரிவித்துள்ளார். அதை வைத்து பார்க்கும்போது, கடந்த முறை போலவே இம்முறையும் வீட்டிற்குள் பல குழுக்கள் பிரிந்து ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வர் எனத் தெரிகிறது.

    இது தான் காரணம்:

    இது தான் காரணம்:

    மக்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடக்கிறது, அவர்கள் எப்படி புறணி பேசிக் கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்பதைத் தான் ஆர்வமாக இருப்பார்கள். எனவே, அவர்களை மேலும் குஷி படுத்தும் விதமாக பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே பல்வேறு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+