அமீரின் மாஸ்டர் பிளான்... மாட்டிக்கொண்ட சிபி...இது வேற லெவல் மூவ் தான்
சென்னை: தன்னுடைய மனநிலையை கூறி அமீர் பேசியதை பார்த்து சிபியின் மனதில் இவ்வளவு மாற்றமா??
இதுதான் வேற லெவல் திறமை என்று அமீரின் முயற்சியைப் பார்த்து ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அமீரின் புது முயற்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் டாஸ்க் ஆக கேஸ் பெட்டி டாஸ்க் இருந்து வருகிறது. இந்த பெட்டியை தூக்கிக்கொண்டு நடக்க போவது யார் என்று ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கூடி இருக்கும் நிலையில் தற்போது ஒவ்வொரு போட்டியாளரும் செய்யும் செயல்கள் வேற லெவல் இருந்து வருகிறது என்று கூறி வருகின்றனர். பணத்தின் மீது தனக்கு இருக்கும் கண்ணை எடுக்க விடாமல் அடுத்தவர்களை அதை தூக்கி வைக்கும் முயற்சியில் அமீர் ஈடுபட்டுள்ளார்.

நிரூப்பின் எடுபடாத முயற்சி
கடந்த வாரத்தில் நடந்த டாஸ்க்கில் ஜெயித்து நேரடியாக பைனலுக்கு செல்லும் டிக்கெட்டை அமீர் பெற்றிருந்தாலும், இந்த வாரம் யார் பெட்டியை தூக்கிக் கொண்டு நடையைக் கட்ட போவது என்பது யாருக்கும் புரியாத புதிராக இருந்து வருகிறது. இதில் எப்படியும் தனக்கு போட்டியாக இருக்கும் போட்டியாளர்களை வெளியேற்றிவிட வேண்டும் என்று ஒவ்வொரு போட்டியாளர்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் நிரூப் ஆரம்பத்தில் அனைவரிடமும் மனமாற்றம் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அமீரின் அழுத்தமான கருத்து
நான் உண்மையா எடுத்துட்டு போலாம்னு பிளான் பண்ணியிருக்கிறேன். நான் டிக்கெட் ஃபினாலே ஜெயித்ததால் அடுத்த வாரம் பினாலே போயிருவேன் தெரியும். பிராக்டிகலா யோசிக்கும்போது வின் பண்ண வாய்ப்பேயிலலை என்று தெரிகிறது என்று கூறியிருக்கிறார். இதற்கு பிரியங்கா அவரை சமாதானம் செய்யும் விதமாக பணத்தை இன்னும் ஏற்றினால் என்ன செய்வா?? என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார். அதற்கு அமீர் பணத்தை ஏற்ற வில்லை என்றால் என்ன செய்ய?? இதோடு முடித்து விட்டால்!!! என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார். அதுவும் இல்லாமல் எதுவும் இல்லாமல் நான் நடுவில் நிற்பேனா?? யோசித்துப் பார்க்கும்போது இது தான் புத்திசாலித்தனம் என்று தோனுது என்று கூறியிருக்கிறார். அதற்கு சிபி கையை கொடுத்து கட்டித்தழுவி தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.

மாட்டிக்கொண்ட சிபி
அமீர் பேசிக்கொண்டிருக்கும்போது சிபி தோலில் தட்டி, கட்டிப்பிடித்து சூப்பர் என்று வாழ்த்துக் கூறிவிட்டு இந்தப் பணப் பெட்டியை தூக்கி விட்டு கிளம்பி விட்டார் என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் இதுதான் சிறப்பான முன்னேற்றம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பல ரசிகர்கள் நிரூப் இதை செய்தால் அவர் கோளை ஆனால் சிபி செய்தால் இது தைரியமான செயலா??என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆரம்பத்திலிருந்து நிரூப் தான் பயந்தாங்கோலி என்று கூறிக்கொண்டிருந்த சிபி தற்போது செய்திருக்கும் செயலும் அப்படித்தான் இருக்கிறது என்று கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் அமீர் தான் போகப் போவதாக கூறி அடுத்தவர்களை மனம் மாற்றி விட்டார் என்று கூறிவருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications