பிக் பாஸ் அர்ச்சனா ஏமாற்றி விட்டாரா? இதை கவனிச்சீங்களா? இது எப்படி சாத்தியம்? மீண்டும் சர்ச்சை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இந்த நிகழ்ச்சி பற்றிய சர்ச்சை மட்டும் இன்னும் முடிவடையவில்லை. இந்த சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் அர்ச்சனா பி ஆர் டீம் வைத்து தான் ஜெயித்தார் என்று ஒரு சிலர் இப்போ வரைக்கும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அர்ச்சனா ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார். அந்த வீடியோ வெளியானதும் அர்ச்சனாவின் நெகட்டிவ்வர்ட்ஸ் பல்வேறு கேள்விகளை கிளப்பி வருகிறார்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பமான முதல் நாளில் இருந்து உள்ளே சண்டைகளும் சச்சரவுகளும் அளவுக்கு அதிகமாக இருந்தது. அதிலும் A குரூப் மற்றும் B குரூப் என்று இரண்டு அணியாக பிரிந்து உள்ளே போட்டியாளர்கள் செய்த பிரச்சனைகள் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது. இந்த நிலையில் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது நடந்த நிகழ்வுகளும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்து வந்தது. முதல் நாளிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைகிற நாள் வரைக்கும் சண்டை சச்சரவுகள் அளவுக்கு அதிகமாக இருந்தது. அதிலும் பிரதீப்புடைய திடீர் வெளியேற்றம் இந்த சீசனில் அதிகமாக பேசப்பட்டது. அது போல வைல்டு கார்டில் உள்ளே வந்த அர்ச்சனா தினேஷ் போன்றவர்களை ஏற்கனவே இருந்த போட்டியாளர்கள் பிளான் பண்ணி டார்கெட் செய்து அடித்ததும் அதிகமாக பலரையும் எரிச்சல் அடைய வைத்தது .
அதற்கு பிறகு மாயா மற்றும் பூர்ணிமா கேங் சேர்ந்து கொண்டு சக போட்டியாளர்களை பிளான் பண்ணி வெளியே தூக்கியது எல்லாம் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் இந்த சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டது தவறு என்றும் அவருக்கு பிஆர் ஓட்டு அதிகமாக கிடைக்கத்தது அதனால் தான் அவர் வெற்றி பெற்றார் என்றும் பலர் கூறி வந்தனர்.
வைல்டு கார்டு என்ட்ரி ஆக வந்து அர்ச்சனா எப்படி டைட்டில் ஜெயிக்க முடியும் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இது குறித்து அர்ச்சனா தெளிவான விளக்கம் கொடுத்திருந்தார். அதாவது எனக்கு 19 கோடி ஓட்டு கிடைத்திருக்கிறது. அதில் நான் ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் என்று சொன்னால் கூட 19 கோடி கொடுக்க வேண்டும். எனக்கு அவ்வளவு பணம் எல்லாம் கிடையாது.
இந்த நிகழ்ச்சியில் நான் ஜெயித்த பணத்தை அப்படி பி ஆர் டீமிற்க்கு கொடுக்க வேண்டும் என்றால் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கவே வேண்டாம் என்றெல்லாம் விளக்கம் கொடுத்திருந்தார். இப்படியான நிலையில்தான் அர்ச்சனா இரண்டு தினங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டு இருக்கிறார். அதாவது அர்ச்சனா ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றிருக்கிறார்.
அந்த வீடியோ தான் இப்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதாவது அதில் அர்ச்சனா பக்கத்தில் ஒரு சில மக்கள் மட்டுமே இருக்கின்றனர். பொதுவாக ஒரு கடை திறப்பு விழாவிற்கு பிக் பாஸ் டைட்டில் வின்னர் வருகிறார் என்றால் அங்கே பல ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். ஆனால் அர்ச்சனா கடை திறப்பு விழாவிற்கு போயிருக்கிறார் என்று தெரிந்தும் அங்கு மிகவும் குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால் அர்ஜுனாவின் ஹேட்டர்கள் அர்ச்சனா சொன்னதெல்லாம் பொய்யா? எனக்கு ரசிகர்கள் ஓட்டு போட்டு நான் ஜெயித்தேன் என்று சொன்னதை நம்ப முடியவில்லை. ஏனென்றால் அர்ச்சனா வருகிறார் என்று தெரிந்தும் அந்த கடையில் ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள் என்றால் அவருக்கு ரசிகர்களே இல்லையா என்றெல்லாம் கேள்வி எழுப்பி விடுகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications