அசீம் வெளியே வந்து இருந்தா எனக்கு செருப்படி தான்.. மிரட்டல்களை பகிர்ந்த பிக் பாஸ் போட்டியாளர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீம் ஜெயிக்காமல் வெளியே வந்து இருந்தால் என்னுடைய தந்தை என்னை செருப்பால் அடித்து இருப்பார் என்று அசல்கோளார் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்க பட்டது பற்றி அசல் கோளாறு தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு நான் வெளியே வந்ததற்கு கூட என்னுடைய தந்தை கவலைப்படவில்லை என்று அசல் கூறி இருக்கிறார்.
ஆனால் அசீம் ஜெயிக்காமல் வெளியே வந்திருந்தால் உன்னை செருப்பாலே அடித்திருப்பேன் என்று என்னுடைய தந்தை என்னிடம் கூறினார் என்று அசல் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.\

முடிவடையாத பேச்சு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை பற்றிய பரபரப்பும், பேச்சுவார்த்தையும் இன்னும் முடிவடைந்த பாடு இல்லை. இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் ஒரு வாரம் மட்டுமே பேசப்படும், நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள் கூட அதற்குப் பிறகு குறைய தொடங்கி விடும் எல்லோரும் வழக்கமான வேலைகளை தொடங்கி விடுவார்கள். ஆனால் இந்த சீசனில் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது பலருடைய ஆதரவையும் எதிர்ப்பையும் சம்பாதித்து இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் பலர் அசீம் ஜெயிக்க கூடாது என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வந்தனர்.

ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பு
ஆனால் தனலட்சுமி, மணிகண்டன், அசல் போன்ற ஒரு சில ரசிகர்கள் அசீம் தான் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று தங்களுடைய கருத்தை முன்வைத்து வந்தனர். தங்களுடைய ஆதரவையும் கொடுத்து வந்தனர். அதன்படியே அசீம் டைட்டில் ஜெயித்த பிறகும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிக்காட்டி இருந்தனர். இந்த நிலையில் தற்போது அசீம் மற்றும் அசல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அசீம் பற்றிய பல்வேறு தகவல்களை அசல் கூறிக் கொண்டிருந்தார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள்யும் சரி, வெளியே வந்த பிறகும் சரி அசல் தான் என்னுடைய தம்பி அப்படியே என்னுடைய தம்பி போல இருக்கிறார் அவருடைய கேரக்டர் எனக்கு ரொம்பவே பிடிக்கும் என்றெல்லாம் அசீம் கூறிக் கொண்டே இருந்தார்.

அசல் அப்பா சொன்ன வார்த்தை
இந்த நிலையில் அசல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான் மூன்றாவது வாரத்தில் வீட்டிற்கு அனுப்பப்பட்டேன் என்று நினைக்கிறேன் ஆனால் நான் வீட்டிற்கு சென்றபோது என்னுடைய தந்தை பெரியதாக எதுவும் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை சரி என்று விட்டுவிட்டார். ஆனால் அவர் என்னிடம் சொன்ன ஒரே வார்த்தை நீ வெளியே வந்தது கூட எனக்கு பெருசா தெரியல, ஆனா அசீம் வெளியே வந்து இருந்தா, நான் உன்னை செருப்பால அடிச்சிருப்பேன். அவன் விளையாடுறது தான் சரி என்று என்னிடம் கூறினார். எங்கள் வீட்டில் அசீம் ஜெயித்ததை நான் ஜெயித்தது போல அவர்கள் கொண்டாடினார்கள் என்று கூறி இருக்கிறார்.

நெட்டிசன்கள் கேட்கும் கேள்வி
இந்த நிலையில் அசீம் ரசிகர்கள் பலர் அசல் கோளாறு பேசிய இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் அசல் ஆரம்பத்தில் அதிகமாக பெண்களோடு தொட்டு பேசி உரசிக்கொண்டு அவர்களோடு விளையாடிக் கொண்டிருப்பதாக மீம்ஸ் பரவி வந்த நிலையில் தற்போது அசீமிற்க்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால் அசீம் பக்கத்தில் இப்படி மாறி இருக்கிறாரா? என்று நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வருகிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அசீம் மற்றும் அசல் இருவருக்கும் ஒரு பாண்டிங் இருந்து அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால் தான் தனலட்சுமி உடன் அசல் சண்டையிடும் போது கூட அசீம் தலையிட்டு இருவரிடமும் உரிமையோடு பேசி இருந்தார்.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications