பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பாலியல் தொல்லை.. அந்த பிரபலம் செய்த மோசம்.. பிராவோ எமோஷனல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் பிராவோ தனக்கு நடந்த கசப்பான சம்பவம் குறித்து பேசி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்.
இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு மட்டும் பாலியல் தொல்லை நடக்கவில்லை. ஆண்களுக்கும் நடக்கிறது என்று பிராவோ தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கதையை சொல்லி இருக்கிறார்.
என்னிடம் ஒரு ஆணே தப்பாக நடக்க முயன்ற பிறகு தான் எப்படி அதிலிருந்து மீண்டு வந்தேன் என்று பேசிய பிராவோவிற்கு பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்களாக இருக்கின்றனர். ஒரு சிலர் புது முகங்களாக இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் பிராவோ.. இவர் ஆர் ஜே வாக வேலை பார்த்து வரும் நிலையில் தன்னுடைய கடந்த காலத்தில் மோசமான நினைவுகள் குறித்து கதை சொல்லும் டாஸ்க்கில் தன் வலிகளை பகிர்ந்து இருக்கிறார்.
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் பூகம்பம் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கதை சொல்லும் டாஸ்க்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் பலர் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அதில் விசித்திரா தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது பற்றி பேசி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து பெண்களுக்கு மட்டும் இந்த கஷ்டம் நடக்கவில்லை ஆண்களுக்கும் நடக்கிறது என்று வி ஜே பிராவோவும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டமான விஷயம் குறித்து பேசி இருக்கிறார். அதில், என்னுடைய கண் முன்னாடியே எங்க அப்பாவோட உயிர் போனது. அப்பாவுக்கு நான் டிவில வரணும் என்று ரொம்ப ஆசை. எனக்கு பெருசா எதுவும் வரல என்று தான் சொல்லணும். ஆனா ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது நிகழ்ச்சிகளை நானே தொகுத்து வழங்குவேன்.
அதுபோல கல்யாண வீடு முதல் பல முக்கிய நிகழ்ச்சிகளையும் மேடைகளில் நானே பேசிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் எனக்கு ஒரு போன் வந்துச்சு. ஒரு ஷோ தயாரிப்பாளர் ஒருவர் போன் பண்ணி உன்ன வச்சு ஒரு விளம்பரம் பண்ணனும் நீ வா தம்பி என்று சொன்னார். நானும் அவரை நம்பி போனேன். அவர் யார் என்று தெரியாது, ஆனால் நான் ரூமில் இருக்கும் போது என்னிடம் வந்து சட்டை எல்லாம் கிழிக்க ஆரம்பிச்சுட்டாரு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.
யார் இந்த ஆர்.ஜே பிராவோ.. வால்பாறை பையன் துபாய் ரிட்டன்..அப்பாவின் இறப்பு..போன்காலில் மாறிய வாழ்க்கை
என்னுடைய கை எல்லாம் பிராண்டி வச்சிட்டாரு. அப்போ நான் ரொம்ப ஒல்லியா சின்ன பையனா இருந்தேன். அந்த நபர் ரொம்ப பலமான ஆளா என்ன விட பெரியவராக இருந்தார். அவரை என்னால் தடுக்கவோ, பிடித்து தள்ளவோ முடியவில்லை. பிறகு போராடி அந்த ரூமை விட்டு வெளியே வந்தேன். சட்டை இல்லாமல் ஜீன்ஸ் எல்லாம் கிழிஞ்சி எனக்கே என்னை பார்க்க அசிங்கமா இருந்துச்சு. இந்த கசப்பான அனுபவம் என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு.
நான் இதை பத்தி எங்க வீட்டுல கூட இதுவரைக்கும் சொன்னதே கிடையாது. அந்த நிமிடத்தை நினைக்க கூடாது என்று நினைக்கிறேன். பலர் சமுதாயத்தில் பெண்களுக்கு மட்டும் தான் பாலியல் தொல்லை நடக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே ஆண்களுக்கும் எந்த மாதிரி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கசப்பான நினைவுகளுக்குப் பிறகு என்னுடைய ஆண் நண்பர்கள் கூட என் பக்கத்தில் வந்தால் எனக்கு பயமாக இருக்கிறது.
நான் ஒரு பெட்டில் படுத்திருக்கும் போது என்னுடைய நண்பர்கள் என் பக்கத்தில் வந்தாலே எனக்கு உடம்பெல்லாம் நடுங்க தொடங்கி விடும். அந்த அளவிற்கு நான் மோசமான அனுபவத்தை அனுபவித்தேன். அதற்கு பிறகு தான் எனக்கு துபாயில் இருந்து ஒரு வாய்ப்பு வந்தது. அதனால் நான் அங்கு சென்று விட்டேன் என்று பிராவோ பேசி இருக்கிறார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இந்த மாதிரி சம்பவங்கள் செய்தி சேனல்களில் பேப்பர்களிலும் எங்கேயோ கேள்விப்பட்டிருப்போம் ஆனால் நமக்கு தெரிந்தவர்களுக்கு இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவரும் போது தான் பலருக்கும் பயத்தை ஏற்படுத்துகிறது. இனிவரும் சமுதாயத்தில் பெண்களை மட்டுமல்ல ஆண் குழந்தைகளையும் பாதுகாப்பாகத்தான் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
யாரையும் நம்ப முடியாத காலகட்டத்தில் தான் நாம் இருக்கிறோம். அதே நேரத்தில் இன்று ஒரு முக்கிய பிரபலமாக மாறி இருக்கும் பிராவோ தைரியமாக தனக்கு நடந்த அவலங்களை எடுத்துச் சொல்லி இருப்பது பலரையும் வியப்படைய வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications