வளர்த்தவங்களை கல்யாணத்துக்கு கூப்பிடாத காரணம்? வெளிப்படையாக பேசிய அமீர்! வதந்திகளுக்கு பதிலடி
சென்னை: பிக் பாஸ் பிரபலங்களான அமீர் மற்றும் பாவனியின் திருமணம் இரண்டு நாட்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆனால் அமீருக்கு பல உதவிகளை செய்த பிக் பாஸ் ஐஸ்சுவின் குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. இதற்கு அமீர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு காதல் ஜோடி உருவாகி விடுகிறார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்ததும் அவர்களுடைய காதல் கதையையும் முடித்து விடுகிறார்கள். வெளியே போன பிறகு நீ யாரோ நான் யாரோ என்பது போன்று நடந்து கொள்கிறார்கள். அதுபோல பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் உருவான காதல் ஜோடியான அமீர் மற்றும் பாவனி இப்படித்தான் இருப்பார்கள் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் இப்போது தங்களுடைய நான்கு வருட காதலை திருமண பந்தத்தில் எடுத்து வைத்திருக்கிறார்கள்.

காதல் திருமணம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபோல பாவனி சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது சின்ன தம்பி என்ற சீரியல் தான். அதுபோல அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு டான்ஸ் மாஸ்டராக இருந்தார்.
வளர்ப்பு குடும்பம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அமீருடன் சேர்ந்து அஜித் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதுபோல அமீருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 7வது நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்த ஐசுவின் குடும்பம் தான் வளர்ப்பு குடும்பம். ஆரம்பத்தில் அமீர் கஷ்டப்படும் போது ஐசுவின் அப்பா அஷ்ரப் மற்றும் அம்மா ஷைனி தான் அமீருக்கு டான்ஸ் ஸ்கூல் வைத்து கொடுத்தது.
விமர்சனங்கள்
தன்னுடைய வீட்டிலேயே தங்க வைத்து பல உதவிகளை செய்து இருக்கிறார்கள். ஆனால் பாவனி அமிருடைய வாழ்க்கையில் வந்து பிறகு ஐசு குடும்பத்தோடு அமீருக்கு கருத்து வேறுபாடு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான் இவர்களின் திருமணத்தில் ஐசுவின் குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிகமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

ஐசு தந்தை பதிவு
ஐசுவின் தந்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்த ஒரு ஸ்டோரியில் நீங்கள் தெருவில் நடந்து போகும்போது ஒரு நாய் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது என்றால் அந்த நாயை வீட்டில் கொண்டு வந்து விடுங்கள் அது உங்களுக்கு நன்றி உள்ளதாக இருக்கும். ஆனால் அதே இடத்தில் ஒரு மனிதன் இருந்தால் அந்த மனிதனை கண்டு கொள்ளாமல் போய்விடுங்கள். இல்லையென்றால் நீங்கள் தான் பிறகு வருத்தப்படுவீர்கள் இதற்கு நானே சாட்சி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அமீர் விளக்கம்
இதனால் இது அமீருக்கு ஆக போட்ட பதிவா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் இருந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமீர் பேசிய ஒரு வீடியோவும் வைரல் ஆகிறது. அதில் ஐசுவின் குடும்பத்தின் மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது. அவர்கள் தான் என்னை சோசியல் மீடியாவில் அன்பாலோ செய்து விட்டார்கள். நான் யாரையும் அன்பாலோ செய்யவில்லை என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications