கொள்கையை மீறி தாலி கட்டியது இதனால் தான்! காரணம் பகுத்தறிவு இல்லை! விக்ரமன் விளக்கம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த விக்ரமன் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி பிரீத்தியோடு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தான் பகுத்தறிவு பேசும் நபராக இருந்து கொண்டு தாலி கட்டியது எதற்காக என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் ரன்னராக தேர்வான விக்ரமன் 2016ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த சீரியல் முழுமையாக காதல் கதையை மையமாகக் கொண்டு இருந்தாலும் பெரிய அளவில் அந்த சீரியல் பிரபலமாகவில்லை.

அதற்கு பிறகு விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருந்தார். அதன் மூலமாகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் மூலமாக பெரிய அளவில் பிரபலமடைந்தார் இதற்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக இருக்கும் பிரீத்தி என்பவரை தான் விக்ரமன் திருமணம் செய்து இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் மீது கிருபா முனுசாமி என்பவர் புகார் கொடுத்து இருந்தார். அதில் தன்னை காதலிப்பதாக சொல்லி லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி விட்டார் என்று அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தன் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விக்ரமன் விளக்கம் கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு சில மாதங்களாக இந்த பிரச்சனை அமைதியாக இருந்த நிலையில் தான் விக்ரமன் எளிமையாக சென்னையில் திருமணத்தை செய்திருக்கிறார். இந்த திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து இணையத்தில் அதிகமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. விக்ரமன் பகுத்தறிவு பேசுபவர் ஆனால் அவர் எப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளலாம் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு அந்த பேட்டியில் விக்ரமன் பதில் கொடுத்து இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் கொள்கையை மீறி நான் தாலி கட்டி விட்டேன் என்று பலர் பேசுகிறார்கள். ஆனால் தாலி கட்டிக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய மனைவியோடு ஆசை. ஆனால் நான் இந்த ஒரு விஷயத்தை மட்டும் வேண்டாம் என்று சொன்னேன், தாலி என்பது பெண்ணை அடிமைப்படுத்தும் ஒரு விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.
ஆனாலும் அவங்க ஆசையை நிறைவேற்ற தான் நான் தாலி கட்டினேன். ஒரு பெண் ஆசைப்பட்ட விஷயத்தை நிறைவேற்றாததற்கு பெயர் பகுத்தறிவு இல்லை. அதற்கு பெயர் சுயநலம் என்று அந்த பேட்டியில் விக்ரமன் பேசியிருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications