Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக்பாஸில் ஸ்ருதிஹா அர்த்தம் தெரியாம அந்த வார்த்தை! நான் அப்படிப்பட்ட ஆளா? அர்ஜுன் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் ஹிந்தி 18 வது சீசனில் நடிகை ஸ்ருதிஹா கலந்து கொண்டிருக்கிறார். அவர் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் "சும்மா" பேசிட்டு இருக்கிறோம் என்ற வார்த்தையை பேசியது இணையத்தில் அதிகமான விமர்சனங்களை சந்திக்கிறது. அது குறித்து அவருடைய கணவர் அர்ஜுன் பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிஹா ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். ஸ்ருதிஹா இந்த நிகழ்ச்சியில் புது சாதனையை செய்திருக்கிறார். அதாவது ஹிந்தியில் முதல் முதலாக கலந்து கொண்ட தமிழ் நடிகை இவர்தான் என்ற சாதனையை செய்து ஹிந்தி ரசிகர்களையும் பாராட்ட வைத்துக் கொண்டிருக்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

ஸ்ருதிஹாவை ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு தெரியும். சினிமாவில் ஸ்ரீ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தாலும் அந்த நேரத்தில் பெரிய அளவில் இவருடைய திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் சினிமாவை விட்டு விலகிய ஸ்ருதிஹா திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்த பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் ஜாலியாக கலகலவென பேசிக் கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனாலேயே இவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஒரு விதத்தில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளாததும் நல்லது தான்.

காரணம் இந்த சீசனில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் இவரும் கலந்து கொண்டால் பத்தோடு பதினொன்றாக இருந்திருப்பார். ஆனால் ஹிந்தி சீசனில் இவர் கலந்து கொண்ட போது முதல் நாளே சல்மான்கானை தமிழில் "வணக்கம்" சொல்ல வைத்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு ஸ்ருதியுடைய நடவடிக்கையை பார்த்து முதல் நாள் ப்ரோமோவுக்கு கீழே அவரை அதிகமான ஹிந்தி ரசிகர்கள் திட்டி வந்தனர்.

ஆனால் நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களை கடந்துவிட்ட நிலையில் அவருடைய நடவடிக்கை இப்போது ஹிந்தி ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக போவதற்கு ஸ்ருதிஹா தான் காரணம் என்று பலர் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் ஸ்ருதிஹா அங்குள்ள போட்டியாளர்களிடம் தன்னுடைய காதல் கணவர் அர்ஜுன் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்.

அதை கேட்டு எல்லா போட்டியாளர்களும் சிரித்துக்கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு போட்டியாளர் நீங்க இங்க வந்துட்டீங்க இப்போ உங்க கணவர் பாலிக்கு சென்றிருப்பார் என்று சொன்னதும், ஸ்ருதிஹா அதிர்ச்சியாகி இருக்கிறார். காரணம் பாலி என்பது பெண்களோடு டேட்டிங் போகும் இடம் என்று அங்கு உள்ளவர்கள் கிண்டல் செய்ததால் ஸ்ருதிகா ஒருவேளை உண்மையில் போய் இருப்பாரோ என்று அதிர்ச்சி ஆகி கேட்கிறார்.

இது அங்கு இணையத்தில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது. அதுபோல நேற்று ஸ்ருதிஹா தன்னுடைய போட்டியாளர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இவர் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் பிக் பாஸ் என்ன ஸ்ருதிகா பேசிக்கிட்டு இருக்கீங்க என்று ஹிந்தியில் கேட்க, அதற்கு ஸ்ருதிகா டக் என்று "சும்மா" பிக் பாஸ் என்று சொல்லிவிடுகிறார். அதற்கு பிக் பாஸ் என்ன சும்மா என்று கேட்க, அதற்கு சும்மா என்றால் ஒன்றும் இல்லை என்று அர்த்தம் என ஸ்ருதிஹா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

இது பற்றி ஸ்ருதிஹாவின் கணவர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் ஸ்ருதிஹா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன பிறகு நான் தான் ரொம்பவும் கஷ்டப்படுகிறேன். ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்ருதிஹா கலந்து கொண்ட போது புகழ் உன் புருஷன் இன்னொரு வீடு வச்சிருக்கிறாரா? என்று என்னைப் பற்றி கிண்டல் செய்தார். அதுபோல இப்போ பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்க புருஷன் பாலிக்கு போயிருப்பார் என்று கிண்டல் செய்கிறார்கள். என்னை பார்த்தா அப்படியா தெரிகிறது?

ஸ்ருதிஹா வீட்டில் இல்லாதது எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது. அவள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பாள். ஆனால் இப்போ வீடே அமைதியாக இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அன்னைக்கு ஸ்ருதிகா நிகழ்ச்சியில் சும்மா என்று பேசியது ஹிந்தியில் முத்தம் என்று அர்த்தமாம். இது உண்மையில் ஸ்ருதிஹாவிற்கு இப்ப வரைக்கும் தெரிந்திருக்காது. அதனால்தான் பிக் பாஸ் மீண்டும் வாட் சும்மா என்று கேட்டிருக்கிறார். இது புரியாமல் ஸ்ருதிஹா விளக்கம் கொடுத்திருக்கிறார். இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ தெரியலையே.. என்று ஸ்ருதிஹாவின் கணவர் அர்ஜுன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+