"அந்த” ஒரு காட்சி தான்.. இப்படி ஆயிடுச்சு.. மனம் திறந்த பிக் பாஸ் மதுமிதா.. இனி இதுதான் முடிவாம்..!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை மதுமிதா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் ஒரு காட்சியில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
முதல் முறையாக சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுமிதா தொடர்ந்து சீரியலில் நடிப்பாரா என்ற கேள்விகள் ரசிகர்களிடம் இருக்கிறது.
இந்த நிலையில் தன்னுடைய மனநிலை என்ன என்பது பற்றியும், இனியா சீரியல் அனுபவம் குறித்தும் மதுமிதா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என ஒரு சில நடிகைகள் தான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கின்றனர். அதுவும் காமெடி நடிகைகளாக பலர் ஆரம்பத்தில் நல்ல நிலையில் வளர்ந்து கொண்டு இருந்தாலும் பின்பு திருமணத்திற்கு பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். அந்த வகையில் நடிகை மதுமிதாவும் ஒருவர்.
சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் காமெடியாக நடித்து பலருடைய மனதை கவர்ந்த மதுமிதா அதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக "ஒரு கல் ஒரு கண்ணாடி" திரைப்படத்தில் இவரைப் பார்த்து சந்தானம் சொல்லும் "அடை தேன் அடை காமெடி" இவருக்கு பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது.
அதுபோல "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" எனும் திரைப்படத்தில் இவருடைய காமெடி பெரிய அளவில் வெற்றி பெற்று, இவரை பற்றி பலரும் பேச வைத்தது. அந்த நேரத்தில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து இந்த நிகழ்ச்சியில் தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்று கூறி வெளியே வந்திருந்தார்.
அதற்குப் பிறகு அதிகமான சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த மதுமிதா சமீபத்தில் தான் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலின் மூலமாக சின்னதிரையில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
இது குறித்து சமீபத்தில் அவர் பேசுகையில் நான் இனியா சீரியலில் ஒரே ஒரு காட்சியில் தான் நடித்திருந்தேன். அந்த காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் எபிசோடாக ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த ஒரு காட்சியும் எனக்கு பெரிய அளவில் பிரபலத்தை வாங்கி கொடுத்தது. மீண்டும் என்னை பற்றி சின்னத்திரை வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இது போன்ற காமெடியான லீடு கேரக்டர் கிடைத்தால் மீண்டும் நான் சீரியலில் தொடர்வேன் என்று அவர் கூறியிருக்கிறார். அது குறித்து அதிகமான ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக காமெடி நடிகர்கள் பலர் வருட கணக்காக நடித்துக் கொண்டிருந்தாலும் காமெடி நடிகைகள் ஒரு சிலர் மட்டும்தான் தொடர முடிகிறது. இவரும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications