அப்பாவின் இழப்பு.. காவல்துறை பணியில் சேர இருக்கும் “பிக் பாஸ்” பிரபலம்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சீரியல் நடிகை அப்சரா மலையாள சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவருக்கு காவல்துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில் இனி தான் போலீசாக போவதாக கூறியிருக்கிறார். இவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு சில பிரபலங்கள் அரசு அலுவலர்களாக வேலை செய்துவிட்டு அதிலிருந்து விலகி தான் நடிக்க வேண்டும் என்று சினிமா அல்லது சீரியல் நோக்கி வந்திருக்கிறார்கள். இந்த காலத்தில் மட்டுமல்லாமல் அந்த காலத்திலும் இது நடந்திருக்கிறது. நடிகர் வினு சக்கரவர்த்தி பற்றி ஏற்கனவே பல ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும் அவர் சப் இன்ஸ்பெக்டர் ஆக வேலை செய்து இருந்த நிலையில் அதிலிருந்து விலகி சினிமா மீது தனக்கு இருந்த காதலால் நடிகர் மற்றும் இயக்குனராக மாறியிருந்தார்.

சமீபத்தில் கூட சீரியல் மற்றும் சினிமாக்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வித்யா பிரதீப் அமெரிக்காவில் டாக்டர் ஆகவும் இருக்கிறார். இப்படி பலர் உயர்ந்த பதவிகளில் இருக்கும் நிலையில் சினிமாக்களில் நடித்து வருகிறார்கள். ஆனால் நடிகை அப்சரா நடிகையாக இருந்து வரும் நிலையில் அவருக்கு இப்போது காவல்துறையில் வேலை கிடைத்திருக்கிறது. அதாவது அப்சரா கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மலையாள சீரியல் நடிகையான அப்சரா மலையாள பிக் பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இவருடைய அப்பா ரத்னாகரன் கேரளா காவல்துறையில் பணியாற்றி கொண்டிருக்கும் போது பணியில் இருந்த நிலையிலேயே சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி துரதிஷ்டவசமாக மரணமடைந்தார். பொதுவாக காவல்துறையில் பணியில் இருக்கும் போது ஒருவர் மரணம் அடைந்தால் அவருடைய வாரிசு ஒருவருக்கு அதே துறையில் வேலை வாய்ப்பு வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. அவர் உயிரிழந்த போது அப்சரா மூன்றாம் வகுப்பு தான் படித்துக் கொண்டு இருந்தாராம்.

எனவே இப்போது அவருக்கு 30 வயதான நிலையில் அவருக்கு காவல்துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது பற்றி அப்சரா நான் கலைத்துறையில் பயணிப்பதால் காவல்துறையில் சேர விருப்பமில்லாமல் இருந்தது. அரசு பணி என்பது நிரந்தர வேலை என்பதால் என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் இதில் சேர சொல்லி எனக்கு அறிவுரை கூறினார்கள்.
நான் பள்ளியில் படித்த போது தேசிய மாணவப் படையில் சேர்ந்து பயிற்சி பெற்று இருக்கிறேன். பள்ளி படிக்கும்போது ராணுவத்தில் வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் சீரியல்களில் நடிக்க தொடங்கியதும் ராணுவத்திற்கு போக வேண்டும் என்ற ஆசையை ஒதுக்கி வைத்து விட்டேன். ஆனால் இப்போது எனக்கு காவல்துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் என்னுடைய முழு அர்ப்பணிப்புடன் அந்த துறையில் சாதிப்பேன்.
வேலையில் சேர்வதற்கான அரசு ஆணையும் கிடைத்துவிட்டது. விரைவில் காவல்துறை பணியில் சேர்ந்து விடுவேன். ஒரு பக்கம் காவல்துறையில் பணியாற்றினாலும் முடிந்தவரை கலைத்துறையிலும் தொடர்ந்து பயணிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். இவருக்கு ரசிகர்களும் சின்னத்திரை நடிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications