இவனுக்கெல்லாம் எதுக்கு சாப்பாடு.. வரிசையில் காத்திருந்த பிரதீப்பை அசிங்கப்படுத்திய “பிரபலம்”
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான பிரதீப் ஆண்டனி குறித்த சில தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பிரதீப் ஆண்டனி ரயில்வேயில் அரசு வேலை பார்த்து வந்திருந்த நிலையில் அதை வேண்டாம் என்று உதறித் தள்ளி விட்டு சினிமா ஆசையால் சினிமாவில் நடிக்க வந்திருந்த நிலையில் அங்கு தனக்கு நடந்த வேதனையான அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் தான் கதாநாயகனாக இல்லாமல் துணை கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த போது ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பாட்டுக்காக காத்திருந்தபோது ப்ரொடக்ஷன் மேனேஜர் தன்னை அவமானப்படுத்தியது குறித்து பிரதீப் பகிர்ந்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத அளவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதீப் வெளியேற்றம் நடைபெற்றது. அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற முத்திரையை குத்தி அவருக்கு ரெட் கார்டு கொடுத்து இருந்தனர். இதனால் இணையத்தில் பெரிய அளவில் கருத்து மோதல்கள் நடைபெற்றது.
பிக் பாஸ்க்குள் இதுதான் நடக்கும்.. விசித்ரா என் தொழிலை பற்றி சொன்ன வார்த்தை.. அன்ன பாரதி எமோஷனல்
பிரதீப்போடு அதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் நன்றாக பேசி பழகி வந்த அவருடைய சக நண்பர்களே அவருக்கு எதிராக செங்கொடி தூக்கி பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். இதனால் வெளியேற்றப்பட்ட பிரதீப் தன்னுடைய இயல்பு வாழ்க்கையில் எப்போதும் போல இருந்து வருகிறார். ஆனால் அவர் ஏற்கனவே பேசிய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதீப்பிற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் மட்டும் அவமானம் கிடைக்கவில்லை. அவர் நேசித்த சினிமா துறையிலும் பல அவமானங்கள் கிடைத்திருக்கிறது என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது பிரதீப் ஆண்டனி அருவி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்துதான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதை தொடர்ந்து வாள் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தன்னுடைய நண்பர் நடிகர் கவினின் டாடா படத்தில் கவின் உடைய நண்பராகவும் நடித்திருப்பார். திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு முதலில் பிரதீப்பிற்கு தான் வாய்ப்பு கிடைத்தது என்றும் அதை அவர் தன்னுடைய நண்பருக்காக விட்டுக் கொடுத்தார் என்றும் செய்திகள் வலம் வருகிறது.

இப்படியாக இருக்கும் நிலையில் தன்னுடைய முதல் படத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பிரதீப் பேசியிருக்கிறார். அதில் என்னுடைய முதல் படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு பசி வந்தால் நான் சாப்பிட சென்றேன். ப்ரொடக்ஷனில் சாப்பாடு போடுபவர் என்னை பார்த்தவுடன் வாங்க சார் என்று அழைத்தார்.
நான் அந்த படத்தில் ஹீரோ எல்லாம் கிடையாது. ஆனால் ஹீரோ என்று சொல்லிக் கொள்ளலாம் அந்த வகையில் தான் என்னுடைய கேரக்டர் இருந்தது. அப்போது சாப்பாடு போடுபவரை பொறுத்தவரையில் நானும் படத்தில் ஹீரோ. அவர் எனக்கு சாப்பாடு வைக்கும் போது திடீரென்று புரொடெக்ஷன் மேனேஜர் அங்கு வந்தார்.
அவர் டேய் இவனுக்கெல்லாம் எதுக்குடா சாப்பாடு போடுற என்று திட்டினார். அன்றில் இருந்து நான் அந்த செட்டில் சாப்பிடவே இல்லை என்று அந்த பேட்டியில் பிரதீப் ஆண்டனி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications