நகைச்சுவைக்காக செய்தது... விளக்கம் கொடுத்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராஜு
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராக நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருக்கும்போது தான் நகைச்சுவைக்காக பேசியதற்கு சமூக வலைதளத்தில் எழுந்த கண்டனங்களுக்கு தற்போது ராஜு விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை மற்றும் மதுரை மக்களை ராஜு இழிவாக பேசிவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிராக நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் ரன்வீர்க்கு சென்னை வட்டார வழக்கை நகைச்சுவையாக சொல்லிக் கொடுத்தேன், அதற்கு சென்னை மக்களை இழிவாக பேசியதாக விமர்சனங்கள் எழுதுவதை பார்த்தேன். நகைச்சுவைக்காக பேசியது தவறாக மாறிவிட்டது என்று ரசிகர்களிடம் ராஜு மன்னிப்பு கேட்டுள்ளார்.

காமெடி நடிகராக அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி கேரக்டர் மூலமாக சின்னத்திரை ரசிகர்கள் பலருக்கும் பரீட்சியமான ராஜு பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பலருடைய கவனத்தையும் ஈர்த்து விட்டார். தன்னுடைய திறமையை ரசிகர்களுக்கு காண்பிப்பதற்கு ஒரு மேடை கிடைக்காதா என்று ஆவலோடு காத்திருந்த ராஜுவிற்கு பிக் பாஸ் ஒரு வர பிரசாதமாக அமைந்திருந்தது. அவருடைய மிமிக்ரி திறமை ஸ்டண்ட் காமெடி என அனைத்தும் ரசிகர்களை அதிகமாக ரசிக்க வைத்திருந்தது. இதனாலே ராஜு ஐந்தாவது சீசனில் டைட்டில் வின்னரை வெற்றி பெற்றிருந்தார்.

எதார்த்தமாக பேசியது
சின்னத்திரை காமெடி நடிகராக அறிமுகமான ராஜு தற்போது திரைப்படங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் அவர் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அப்படி தொகுத்து வழங்கும் போதும் தான் அவர் எதார்த்தமாக பேசிய வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் குறிப்பாக மதுரை மற்றும் சென்னை சேர்ந்த மக்கள் இவர் மீது கோபத்தில் கமெண்டுகளை அனுப்பி வருகிறார்கள்.

சர்ச்சையான பேச்சு
விஜய் டிவியில் பிரியங்கா மற்றும் ராஜு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலமான ரன்வீர் கபூர் கலந்து கொண்டிருந்தாராம். அப்போது ரன்வீர் கபூருக்கு ராஜூ தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் பேசப்படும் வட்டார வழக்குகளை பேசிக்கொண்டு இருந்தார். அப்போது சென்னை ரொம்ப ஹாட்டான பிளேஸ் அதனால் இருட்டேட்டாகவே இருப்பார்கள் என்றும் மதுரை ஒரு ஹை பிளேஸ் போதையில் இருப்பார்கள் என்றும் அவர் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்களாம்.

தவறுக்கு மன்னிப்பு
ரசிகர்களின் ஆதரவினால் தான் ராஜு அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நாள் வரைக்கும் இருக்க முடிந்தது ஆனால் அவருக்கு அதிகமாக ரசிகர்கள் இருக்கும் தைரியத்தில் இப்படி எல்லாம் சென்னை, மதுரை மக்களை கலாய்த்து விட்டார் என்று சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றார்களாம். அதுமட்டுமல்லாமல் ஒரு சிலர் அப்படி என்றால் நீங்கள் சென்னையில் இருக்க வேண்டாம். சென்னையை விட்டு கிளம்புகள் என்றெல்லாம் இவருக்கு அதிகமான கமெண்டுகள் வந்து கொண்டிருந்ததாம். அதனால் தற்போது ராஜூ தன்னுடைய ரசிகர்களிடம் ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு போஸ்ட் போட்டிருக்கிறார். அதில், திரு.ரன்பீர் கபூர் அவர்களுக்கு சென்னை வட்டார வழக்கை நகைச்சுவையாக சொல்லிக் கொடுக்கும் காணொளிக்கு சென்னை மக்களை இழிவாக பேசினேன் என விமர்சனம் எழுதுவதை படித்தேன். நகைச்சுவைக்காக செய்தது தவறாக மாறியதற்காக வருந்துகிறேன்..மன்னிக்கவும்..என்று கூறியுள்ளார்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications