பிக்பாஸ் பணம் கைக்குக் கிடைக்கவில்லை..கிடைத்ததும் தான் செய்யும் முதல் வேலை ..ராஜுவின் விளக்கம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக ஜெயித்து இருக்கும் ராஜுவுக்கு இன்னும் அந்த 50 லட்சம் கைக்கு கிடைக்க வில்லையாம்.
மொத்த பணமும் கையில் கிடைத்ததும் தான் செய்யும் முதல் வேலை இதுதான் என்று அவர் தன்னுடைய ஆசையை வெளியிட்டிருக்கிறார்.

50 லட்சம் பரிசு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் 5 சீசன் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக ராஜூ வந்துள்ளார். ஏற்கனவே இந்த சீசனில் டைட்டில் வின்னராக ஜெயிப்பவருக்கு 50 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் டைட்டில் ஜெயித்த ராஜூவுக்கு பரிசுத்தொகை கிடைத்திருக்கும் என்று ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி அந்த பணம் என்னும் ராஜுவின் கைகளுக்கு வந்து சேரவில்லையாம்.

எல்லாமே வதந்தி தானா? ?
தற்போது 5வது சீசன் முடிவடைந்து ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் ராஜூவிடம் அவருடைய நண்பர்கள் பலர் 50 லட்சம் வாங்கியதற்கு ட்ரீட் வைக்க சொல்லி கேட்டு வருகிறார்களாம். அதுமட்டுமல்லாமல் கைக்கு பணம் வந்துவிட்டதாகவும், அவர் முதன்முறையாக தன்னுடைய அம்மாவிற்கு சேலை வாங்கி கொடுத்து, ஆசிரமத்திற்கு நிதி உதவி செய்ததாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் தற்போது ராஜு பேசியது அமைந்துள்ளது.

ரசிகர்களை கவர்ந்த கத்தி, காயத்ரி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ராஜு நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துக்கொண்டிருந்தார். இவர்கள் இருவரின் ஜோடிப் பொருத்தம் சீரியலுக்கு சிறப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிவந்தனர். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டாலும், பின்பு நாட்கள் செல்ல செல்ல ஒருவர் மீது ஒருவர் காட்டும் பாசம், அன்பு ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது.

ராஜுவின் ஆசை
இவர்கள் இருவரின் நடிப்பு மற்றும் காதல் பார்த்து பலர் இவர்கள் இருவருக்கும் பேன்ஸ் பேஜ்களை சமூகவலைத்தளத்தில் தொடங்கியிருக்கின்றனர். ராஜுவிடம் காயத்ரி பேசிய வீடியோ கால் வைரலாக பரவி வருகிறது. அதில் காயத்ரி உனக்குதான் 50லட்சம் கிடைத்திருக்கிறதே.. எங்களுக்கு எப்போது ட்ரீட் வைக்க போகிறாய்?? என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அதற்கு ராஜு இன்னும் பணம் என் கைக்கு வரவில்லை. வந்ததும் மொத்தமாக வைத்து அதை ஒரு முறை என் கையால் தொட்டுப் பார்த்துவிட்டு... அதற்கு பிறகு ட்ரீட் வைக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ இன்னும் பணம் கிடைக்க வில்லையா என்று அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications