பிக் பாஸ்7: கமல் தரத்தை பற்றி பேசலாமா? அப்போ இதெல்லாம் என்ன? ஆதாரத்தை வெளியிட்ட நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி ஒன்பதாவது வாரத்தை கடந்து இருக்கிறது. இதில் நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் இந்த வீட்டின் தரம் எப்படி இருக்கணும் என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்று பேசி இருந்தார்.

அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே நடந்த பிரச்சனைகளை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டு கமல்ஹாசனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் இருந்து மாயா, பூர்ணிமா, நிக்சன் போன்றோர் கெட்ட வார்த்தைகள் பேசி கமல்ஹாசனை கூட பல நேரங்களில் கலாய்த்து இருந்தனர். ஆனால் அதையெல்லாம் கேள்வி கேட்காமல் இப்போது வீட்டின் தரத்தை நான் தான் முடிவு செய்வேன் என்று சொல்லி இருப்பது அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

bigg boss tamil 7 Kamal Haasan had said that I will decide the quality of this house so netizens slam he

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒவ்வொரு வாரமும் ஒரு பஞ்சாயத்து வந்து விடுவது தான் அதன் சிறப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகள் இருந்தால் தான் அந்த நிகழ்ச்சி பற்றி ரசிகர்களின் மத்தியில் பேச்சு இருந்து வருகிறது. அதனாலையே பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுக்குள் சண்டையை ஏற்படுத்தும் விதமாகவே புதியதாக டாஸ்க் வைத்து வருகிறார்கள்.

ஆனால் போட்டியாளர்களுக்குள் வரும் வாக்குவாதத்தை வைத்து கமல்ஹாசன் வார இறுதியில் பஞ்சாயத்தை கூட்டுவதும் வழக்கமாக இருக்கிறது. அந்த மாதிரி தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அர்ச்சனா மற்றும் நிக்சன் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தது. அப்போது நிக்சன் அர்ச்சனாவை வாடி, போடி, கருமம், மூஞ்ச பாரு என படு கேவலமாக பேசி இருந்தார்.

அதோடு வினுஷாவை பற்றி இனி யாராவது பேசினால் சொருகிடுவேன் என்றும் மிரட்டியும் இருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் நிக்சனை கடுமையாக கண்டிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சனிக்கிழமை எபிசோடில் நிக்சனை கண்டித்து இருந்தார். ஆனால் கடுமையாக அல்ல அவருக்கு மஞ்சள் அட்டையும் கொடுத்திருக்கப்பட்டது.

பிறகு ஆட்டிகிட்டு, தௌலத் போன்ற வார்த்தைகளை பேசிய தினேஷை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதிலும் நார்த மெட்ராஸில் இப்படித்தான் பேசுவார்கள் என்று சொல்ல நீங்கள் யாரு? அவர்கள் இப்படிதான் என்று பிராண்ட் செய்யாதீர்கள் என்றெல்லாம் கமல்ஹாசன் பேசியிருந்தார். அதோடு இனி அப்படி செய்யாதீங்க நிக்சன் இல்லை என்றால் உங்களை இப்படித்தான் பிராண்ட் செய்வார்கள் என்று நிக்சனுக்கு ஆதரவாக பேசி இருந்தார்.

அதுபோல பூர்ணிமாவை ஆட்டிகிட்டு பொறுமையா வாங்க என்று தினேஷ் சொன்னதற்கு மன்னிப்பும் கேட்க வைத்திருந்தார். ஆனால் இதே வார்த்தையை சில தினங்களுக்கு முன்பு பூர்ணிமா பேசி இருந்தார். ஆனால் அது குறித்து கமல்ஹாசன் இதுவரை கேட்கவில்லை. அது மட்டும் அல்லாமல் இந்த நிகழ்ச்சியை தொடங்கிய முதலில் இருந்து மாயா மற்றும் பூர்ணிமா பல கெட்ட வார்த்தைகளை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக லூசு குயில், கேண்டில் ஆயில், குடிகார அங்கிள் போன்ற வார்த்தைகளை பேசி இருக்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் கமல் ஒருமுறை கூட கேட்கவில்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த வீட்டில் தரம் எனக்கு முக்கியம் என்று கமல் பேசியதை ரசிகர்கள் கேலி செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+