பிக் பாஸுக்குள் எனக்கு அந்த விஷயம் தான் சவாலா இருந்தது! வெளிய வந்ததும் மனதுருகி சாச்சனா போட்ட போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் இருந்து நேற்று சாச்சனா எலிமினேஷன் செய்யப்பட்டார். அவர் வெளியே வந்த பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிக கருத்து பெற்று வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி முதல் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இருந்தனர். அதற்குப் பிறகு 6 வைல்டு கார்ட் போட்டியாளர்களும் வந்துவிட்டனர். இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

television bigg boss tamil 8 bigg boss 8

அதற்கு முக்கிய காரணம் இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் முதல் 24 மணி நேரத்தில் எலிமினேஷன் செய்யப்பட்டது தான். இது புதுமையாக இருக்கிறதே என்னதான் செய்யப் போகிறார்கள் என்று இந்த நிகழ்ச்சி பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது. அதில் முதல் முறையாக எலிமினேஷன் செய்யப்பட்டது சாச்சனா தான்.

சாச்சனா மகாராஜா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார். அந்த போல குழந்தை நட்சத்திரமாக பல சீரியல்களில் நடித்திருக்கிறார். மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, அவருடைய மகளாக நடித்த சாச்சனாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானதும் பெரிய அளவில் பேசப்பட்டது.

ஆனால் 24 மணி நேரத்தில் சாச்சனா வெளியேற்றபட்டத்திற்கு அதிகமானோர் இது தவறான முடிவு என்று கருத்து தெரிவித்து வந்த நிலையில் மூன்றாவது நாளே மீண்டும் இவர் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார். அதுபோல இவர் செய்யும் சில விமர்சனங்களையும் பெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இரண்டு எவிக்ஷன் நடைபெற்றது.

அதில் முதல் போட்டியாளராக ஆர்ஜே ஆனந்தி வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து சாச்சனா வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் வெளியே வந்த சாச்சனா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

அதில், பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் எனது பயணம் 24 மணி நேரம் எலிமினேஷனில் இருந்து மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் வந்து விளையாடுவது மிகவும் சவாலானது. இந்த பயணத்தில் இருந்து நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். மேலும் எனது குறைகளை சரி செய்து கொள்கிறேன். பிக் பாஸ் இல்லத்தில் நான் இருந்த காலம் முழுவதும் என்னை நம்பி எனக்கு ஆதரவளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

television bigg boss tamil 8 bigg boss 8

பிக் பாஸ் வீட்டில் 60 நாட்கள் இங்கு இருப்பது பணிகள், உணர்ச்சிகள் மற்றும் வளர்ச்சியின் ஒரு ரோலர் கோஸ்டர். உங்கள் ஆதரவினாலும் வாக்காலும் உள்ளே இருந்தேன். இன்றுவரை நீங்கள் என்னிடம் காட்டிய அன்பும், பாசமும் என்னை மிகவும் பாதித்துள்ளது. உங்களுடைய அன்பு இல்லை என்றால் இந்த அசாத்திய சாதனையை நிலைத்திருக்க முடிந்தது.

இந்த வாய்ப்புக்கு நன்றி என்று விஜய் டிவி மற்றும் தனக்கு வாய்ப்பு அளித்த விஜய் சேதுபதி எல்லோரையும் டேக் செய்திருக்கிறார். அதோடு உங்கள் ஆதரவு எனக்கு நிறைய அர்த்தம்... உங்கள் அன்பு மட்டுமே என் வாழ்க்கையில் வளர என்னை ஊக்குவிக்கும்.. உங்கள் எல்லோருக்கும் நான் நன்றி உள்ளவளாக இருப்பேன் என்று கூறி இருக்கிறார். இந்த பதிவுக்கு பலரும் அவருக்கு கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+