பிக்பாஸுக்குள் நடந்தது இதுதான், சத்தியமா சொல்லுறேன்! மன்னிச்சிருங்க, கானா வினோத் வெளியிட்ட முதல் வீடியோ
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டும்தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போது நான்கு போட்டியாளர்கள் மட்டும்தான் பைனலுக்கு போய் இருக்கின்றனர். இதில் கடந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க்கில் பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிய கானா இந்த நிகழ்ச்சி பற்றியும், தான் செய்த செயல் குறித்தும் முதல் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த சம்பவம் யாரும் எதிர்பார்க்காததுதான். ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

அதற்குப் பிறகு யார் இந்த சீசன் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. அதிலும் இருப்பதிலேயே கானா வினோத் ஓரளவுக்கு பெஸ்ட் அதனால அவரே வரட்டும் என்று பலரும் கூறி வந்தனர். காரணம் அவர் 15 வருடங்களாக கானா பாடி கொண்டு இருக்கிறார். அடிமட்டத்தில் இருந்து எப்படியாவது ஒரு ஏற்றம் வந்து விடாதா என்று ஆசையோடு காத்திருக்கும் கானா வினோத் இந்த பட்டத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று பலரும் கூறி வந்தனர்.
ஆனால் பணப்பெட்டி டாஸ்க்கில் இருந்த 18 லட்சம் பெட்டியை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டாரே என்று புலம்பி வருகின்றனர். அதோடு வினோத் இந்த பணப்பெட்டியை தூக்குவதற்கு காரணம் ஆரோரா தான்.. அவர்தான் வினோத் மனதை மாற்றிவிட்டார் என்ற விமர்சனங்களும் எழுந்து வந்தது. இதற்கு சனிக்கிழமை எபிசோட்டில் கானா வினோத் பதில் கொடுத்திருந்தார்.
ஆனாலும் தொடர்ந்து அரோராவை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படி இருக்க வெளிய வந்த கானா வினோத்துக்கு அவருடைய நண்பர்கள் பெரிய வரவேற்பு கொடுத்திருந்தனர். வானவேடிக்கையுடன் ஆட்டம் பாட்டம் வைத்து வரவேற்று இருந்தனர். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தனக்கு இத்தனை நாட்களாக ஓட்டு போட்ட ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி இருந்தார். பிறகு எனக்கு இவ்வளவு ரசிகர்கள் அன்பு கிடைக்கும் என்று நான் நம்பவே இல்லை. வெளியே இந்த மாதிரி ஒரு சூழ்நிலை இருப்பதும் எனக்கு தெரியாது. எல்லோரும் என்னை அவங்க வீட்டுப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டார்கள். அதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை.
அதோடு எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் இப்படி செய்திருக்கக் கூடாது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரிகிறது. ஆனால் என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான் நான் இந்த முடிவை எடுத்தேன். அதோடு நான் இந்த பணப்பெட்டியை எடுப்பதற்கு காரணம் வேறு யாரும் இல்லை.
சிலர் என்னுடைய சக போட்டியாளரை திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அதையெல்லாம் வேண்டாம் எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவால் இனி வரும் வாய்ப்புகளை வைத்து என்னால் முடிந்த அளவிற்கு நான் எல்லோருக்கும் உதவி செய்வேன் என்று அந்த வீடியோவில் கானா வினோத் பேசியிருக்கிறார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications