பிக் பாஸுக்குள் வரும் முன்பே இப்படி சொல்லி அனுப்புனாங்க! அதனால் தான் சண்டை போட்டேன்! நள்ளிரவில் கம்ருதீன் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, ஆரம்பம் முதலே சண்டை, சச்சரவுகள், மற்றும் வரம்பு மீறியச் செயல்களால் ரசிகர்களின் கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளாகி வருகிறது. குறிப்பாகப் போட்டியாளர்களான கம்ருதீன், பார்வதி, திவாகர் போன்றோரின் செயல்பாடுகளுக்குத்தான் சமூக வலைத்தளங்களில் அதிக எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், கம்ருதீன் தன் நெகட்டிவ் நடவடிக்கைகளுக்கான உண்மைக் காரணத்தை நேற்று இரவு வெளிப்படையாகப் பேசியிருப்பது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் திரைமறைவு 'ஃபார்முலா'வைக் கிளறிவிட்டுள்ளது.

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

கம்ருதீனின் ரகசியம்

நேற்று இரவு, ஆரோரா, காம்ருதீனிடம், "நீ இந்த மாதிரி இருக்காதே. உன்னுடைய நெகட்டிவ் மட்டுமே காட்டிட்டு இருந்தால் உன்னை யாருக்கும் பிடிக்காது. நீ வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்றால் ஃபன் பண்ண வேண்டும், விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்" என்று அட்வைஸ் கொடுத்தார். அப்போதுதான் கம்ருதீன், தான் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு சிலர் தனக்குக் கொடுத்த ரகசிய அட்வைஸை உடைத்தார். அதாவது, "இதற்கு முந்தைய சீசன்களில் அசீம், பாலாஜி முருகதாஸ் போன்றோரின் விளையாட்டைப் பார்த்து ரசித்து, அவர்களைப் போலவே விளையாடினால் தான் உனக்கு அதிகமான ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று சிலர் அட்வைஸ் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள்" என்றுத் தெரிவித்துள்ளார்.

விமர்சனம்

ஏற்கெனவே ஒரு இடத்தில், தான் பாலாஜி முருகதாஸ் போல விளையாடப் போகிறேன் என்று கம்ருதீன் சொல்லியிருந்தார். இப்போதுதான் அதற்கானக் காரணம் என்ன என்பது ரசிகர்களுக்குத் தெரிய வந்துள்ளது. "நெகட்டிவாக நடந்து கொண்டால் மட்டுமே ஜெயிக்க முடியுமா?" என்று ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபார்முலாவைக் கலாய்த்து வருகின்றனர்.

திடீர் மாற்றம்

இதுவரைக்கும் காம்ருதீனுக்குச் சப்போர்ட் செய்து, அவரை ஏற்றிவிட்டுகொண்டு இருந்த பார்வதி, நேற்று இவரை விட்டு விலகத் தொடங்கிவிட்டார். காரணம், போன வாரத்தில் விஜய் சேதுபதி கம்ருதீனைக் கடுமையாகத் திட்டியதைப் பார்த்த பார்வதி, "இனி இவருடன் சேரக் கூடாது" என்று புரிந்துவிட்டது போல. பார்வதி, "எனக்குப் பிடிக்கலை, உன்னுடைய ஆக்டிவிட்டி சரியில்லை" என்று குற்றம் சாட்ட, காம்ருதீனும் சுதாரித்துக் கொண்டு, "சரி இனி நாம் நல்ல நண்பர்களாக இருக்கலாம்" என்றுச் சொல்லி விலகிவிட்டார்.

ரசிகர்களை வியக்க வைத்த புதிய காம்ருதீன்

பார்வதியை விட்டு விலகிய பிறகு, கம்ருதீனின் நடவடிக்கை மொத்தமாக 'சேஞ்ச்' ஆகி இருக்கிறது. நேற்று இரவுவரை யாருடனும் செட் ஆகாமல் இருந்த கம்ருதீன், நேற்று ஆரோரா, ரம்யா, கெமி, சுமியுடன் ஜாலியாகப் பேசிக்கொண்டு, ஃபன் மூடில் இருந்தார். "காம்ருதீனுக்கும் இப்படி ஒரு கேரக்டர் இருக்கிறதா?" என்று பலரும் வியந்து கமெண்ட் கொடுத்து வருகின்றனர். எப்போதுமே சண்டை சச்சரவு என்று இருந்த நிகழ்ச்சியில், இப்போது இருக்கும் இந்த மாற்றம் நல்லா இருக்கு என்றும், மீண்டும் இவர் பார்வதி பக்கம் சேராமல் இதே போல ஜாலி மூடில் இருந்தால் இவருக்கும் அதிகமான ஓட்டு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்டுகளைப் போட்டு வருகின்றனர்.

தற்போது பார்வதியிடம் திவாகர் மட்டும்தான் சிக்கி இருக்கிறார். அவருக்குத்தான் இப்போது அதிகமான நெகட்டிவ் உருவாகிக் கொண்டிருக்கிறது. எது எப்படியோ, காம்ருதீனின் இந்தத் திடீர் 'கேரக்டர் சேஞ்ச்' பிக் பாஸ் 9-ன் போக்கையே மாற்றுகிறதா என்றுப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+