பிக் பாஸ் அக்சரா ரெட்டி வீட்டில் திடீர் மரணம்.. ஏற்கனவே அப்பாவும் இல்லை.. இப்போ இப்படியா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அக்சரா ரெட்டியின் அம்மா திடீரென்று மரணம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு தந்தையும் இறந்துவிட்டார் என்று அக்சரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவருடைய தாயாரும் இறந்த நிலையில் பலர் அவருக்கு ஆறுதல்கள் கூறி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். காரணம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விடலாம் என்பது பலருடைய நினைப்பாக இருக்கிறது. பல பேருக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் விடுகிறது.

அந்த வகையில் ஒருவர்தான் நடிகை அக்சரா ரெட்டி. இவர் ஒரு உலக அழகி பட்டத்தை பெற்றவராக இருந்தாலும், பல பேருக்கு தெரியாத முகமாகத்தான் இருந்து வந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து விட்டார். இவருடைய ஆட்டிட்யூட் பலரும் பார்த்து அதிர்ச்சியாகி இருந்தாலும் இவருடைய அழகை பார்த்து இளைஞர்கள் பட்டாளம் இவருக்கு அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ் தொடங்கி ஆதரவு கொடுத்து வந்தனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த அக்சரா இந்த நிகழ்ச்சியில் 80 நாட்கள் வரை உள்ளே இருந்தார். பிறகு வாக்குகளின் அடிப்படையில் திடீரென்று அக்சராவும் வருனும் ஒன்றாகவே வெளியேற்றப்பட்டனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்ற கிசுகிசுப்பு சமூக வலைதளத்தில் பரவி வரும் நிலையில் இவர்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று விளக்கமும் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் அக்சரா ரசிகர்கள் மத்தியில் ஆக்டிவாக இல்லை. இந்த நிலையில் அக்சராவின் அம்மா திடீரென்று உடல் நல குறைவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அக்சராவின் தந்தை சுதாகர் ரெட்டி மெட்ராஸ் ஐஐடியில் படித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளதொடு தொழில் அதிபராகவும் இருந்தார் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அக்சரா கூறி இருந்தார்.
தற்போது அவர் உயிரோடு இல்லை என்றும் அவருடைய மறைவு தன்னை பெரிய அளவில் காயப்படுத்தியது. நான் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தபோது என்னை என்னுடைய அண்ணனும் அம்மாவும் தான் அதிலிருந்து வெளியே கொண்டு வந்தார்கள். நான் என்ன கேட்டாலும் என்னுடைய அண்ணனும் அம்மாவும் எனக்கு மறுத்து சொன்னதே கிடையாது.
நான் எந்த விதத்திலும் கஷ்டப்படாமல் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு காரணம் என்னுடைய அண்ணனும் அம்மாவும் தான் என்று பல இடங்களில் அக்சரா கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது அக்சராவின் அம்மா உயிரிழந்த நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்சரா பதிவு வெளியிட்டிருக்கிறார்.
அதே நேரத்தில் சில நாட்களுக்கு முன்புதான் அக்சரா தன்னுடைய அம்மாவோடு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். கடந்த அக்டோபர் 11ம் தேதி அவருடைய அம்மாவின் பிறந்தநாளில் அக்சரா பிரம்மாண்டமாக பிறந்தநாள் விழாவை கொண்டாடி இருந்த நிலையில் இன்று அவர் உயிரோடு இல்லை என்பது பற்றி பலர் அட்சராவுக்கு ஆறுதல் கூறி அவர் இந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications