Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Grand Finale: நற்பணி மன்றத்திற்கு ஒரு லட்சம் தருவதாக கூறிய அமுதவாணன்.. கமல்ஹாசனின் எதிர்பாராத பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கிராண்ட் பினாலே மேடையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் கமல்ஹாசனிடம் அவருடைய வாழ்க்கை முறையில் இருந்து தாங்கள் பின்பற்ற நினைக்கும் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் முதல் முதலாக ரசிகர்கள் மன்றம் அனைவருக்கும் அமைக்கப்பட்ட நிலையில் ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றியதை குறித்து அமுதவாணன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கமல்ஹாசனின் நற்பணி மன்றத்திற்கு தான் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக அமுதவாணன் கூறியதற்கு கமல்ஹாசன் எதிர்பாராத பதிலை கூறியிருக்கிறார்.

பிக் பாஸை கலாய்த்த கமல்ஹாசன்

பிக் பாஸை கலாய்த்த கமல்ஹாசன்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த கிராண்ட் பினாலே ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி பல எதிர்பாராத திருப்பங்களும் சுவாரசியமான நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வழக்கம் போல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் கமல்ஹாசனிடம் முதல் முறையாக பிக் பாஸ் ஒரு வேண்டு கோள் வைத்திருக்கிறார். அதில் கமல் சார் என்னுடைய கமல் சார் என்ற உரிமையில் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும். கமல் வாழ்க்கையிலும் சரி கலைத்தொழிலிலும் சரி ஒரு ஜாம்பவான் என்பது பலருக்கும் தெரியும் என்று சொல்ல, அதற்கு கமல்ஹாசன் தனக்கே உரிய குறும்போடு அப்போ என்னை 'கரடி' என்று சொல்கிறீர்களா? என கேட்கிறார்.

பிக் பாஸ் வைத்த வேண்டுகோள்

பிக் பாஸ் வைத்த வேண்டுகோள்

பிறகு பிக் பாஸ்க்கு நன்றி கூறி உங்களுக்கு சாதனைகள் எல்லாம் கைவந்த கலை மாதிரி ரொம்ப எளிதாக எல்லாவற்றையும் நிகழ்த்தி காட்டி விடுகிறீர்கள். பல புரட்சிகரமான கருத்துக்களை கூட முன்வைத்து இருப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டி இருக்கிறீர்கள். அது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த வீட்டார்கள் ஆசைப்படுகிறார்கள். இந்த அடிப்படையில் மேடையில் இருக்கும் ஒவ்வொருத்தரும் உங்களுடைய பயணத்தைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள் என்று சொல்ல பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களும் இதில் அடங்குவார்களா? என கேட்க, உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே என்று பிக் பாஸ் கூறிவிடுகிறார்.

 கமல் கொடுத்த விளக்கம்

கமல் கொடுத்த விளக்கம்

பின்பு அகம் டிவி வழியாக அகத்திற்கு உள்ளே நுழைந்து வீட்டிற்குள் இருக்கும் மூன்று போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகிறார். அதில் பிக்பாஸிடம் பேசிக் கொண்டிருந்தேன் அவர் சில பாராட்டுகளை கூறினார். சில விஷயங்களை கேட்பதற்கு நெகிழ்ச்சியாக இருந்தது. சில சாதனைகள் உங்களுக்கு மிக எளிதாக கிடைத்துவிட்டது என்று கூறி இருக்கிறார். ஆனால் அது எனக்கு கைக்கு எப்படி வந்தது என்பது எனக்குத்தான் தெரியும் என்று கூறிவிட்டு, எனக்கு கைவந்த கலையாக மாறியதற்கு என்னுடைய வாத்தியார்கள் எனக்கு கற்றுக் கொடுத்தது தான் காரணமாக இருக்கும் என்று கூறுகிறார். அதில் வாழ்ந்து காட்டி இருக்கிறீர்கள் உங்களுடைய கருத்தை என்று பிக் பாஸ் கூறினார். அது என்னவென்றால் ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

அமுதவாணனின் விருப்பம்

அமுதவாணனின் விருப்பம்

இந்த நிலையில் நீங்கள் வாழ்க்கை குறித்த கேள்விகளை கேட்க இருக்கிறீர்கள் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார். இந்த உலகில் நானே ஒரு ஸ்டூடண்ட் தான். பரவாயில்லை, நீங்கள் கேளுங்கள் வாத்தியார் இல்லாத நேரத்தில் நான் பதில் சொல்கிறேன் என்று கமல்ஹாசன் கூற முதல் ஆளாக அமுதவாணன் கேள்வி கேட்கிறார். அதில் தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் மன்றம் எல்லாம் இருக்கிறது. ரசிகர்கள் மன்றம் என்றால் பால் அபிஷேகம் பண்ணுவார்கள் பேனர் கட்டுவார்கள் ஆனால் அதை ஃபர்ஸ்ட் முறை ரசிகர்கள் மன்றம் வேண்டாம் நற்பணி மன்றமாக மாற்றுவோம் என மாற்றியது நீங்கள் தான். இந்த பிக் பாஸ் மூலமாக நிறைய சேவைகளை செய்து இருக்கீங்க அது மூலமாக நாங்களும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதற்காக எனக்கு பிக்பாஸில் வந்த பேமண்டில் ஒரு லட்சம் ரூபாயை கொடுக்க விரும்புகிறேன் என்று கூறுகிறார்.

இந்த மனசு வேண்டும்

இந்த மனசு வேண்டும்

அதற்கு கமல்ஹாசன் நிறைய இருக்கிறது. இந்த மாதிரி லட்சம் லட்சங்கள் எனக்கு வேண்டும் என்று சொல்ல, அதற்கு அமுதவாணன் கண்டிப்பாக என்று சொல்ல, ஆனால் இந்த மனசு எனக்கு வேணும். ஆனால் இன்னும் ஒன்று பணமாக மட்டும் கொடுக்க வேண்டும் என்று அல்ல உங்களுடைய நேரத்தை உழைப்பாக கொடுத்தீர்கள் என்றால் அது லட்சத்திற்கு மேலாக கொண்டு போய்விடும். தேவைக்கு நிறைய பேர் காத்துக் கொண்டு இருக்காங்க சின்ன உதவி அது நிறைய பேருக்கு உதவும் என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+