அசீம் உள்ளே இருப்பதற்கு இதுதான் காரணம்... டைட்டில் ஜெயிக்க போகும் நபர்!? ஆயிஷா கூறிய ரகசியங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஆயிஷா ஏற்கனவே அசீமோடு ஏற்பட்ட பிரச்சனை பற்றியும் அசீம் பற்றியும் பல தகவல்களை கூறியிருக்கிறார்.

இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்கப் போவது பற்றி பலரும் எதிர்பார்த்த ஒரு போட்டியாளரின் பெயரை கூறியிருக்கிறார்.

பெரிய சண்டைக்கான விளக்கம்

பெரிய சண்டைக்கான விளக்கம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரம் வெளியேறிய ஆயிஷா பல்வேறு தகவல்களை ரசிகர்களின் கேள்விகளுக்கு கூறியிருக்கிறார். அந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே அசீமுக்கும், ஆயிஷாவுக்கும் பெரிய அளவில் சண்டை வெடித்தது. இந்த பிரச்சனைதான் இப்ப வரைக்கும் இந்த சீசனில் நடந்த பெரிய பிரச்சினையாகவும் யாரும் எதிர்பார்க்காத சண்டையாகவும் இருந்தது. இந்த சண்டையில் அசீம், ஆயிஷாவை வாடி போடி என அழைத்தது. அதே நேரத்தில் ஆயிஷா அசீமை பார்த்து செருப்பை கழட்டியது யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. இந்த நிலையில் அன்று என்ன நடந்தது என்பதைக் குறித்து ஆயிஷா பேசியிருக்கிறார்.

தவறும் அதற்கு மன்னிப்பும்

தவறும் அதற்கு மன்னிப்பும்

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு ஆயிஷாவிற்கு அசீமை தெரியுமாம். ஆனாலும் பெரிய அளவில் அசீமை பற்றி தெரியாவிட்டாலும், ஓரளவு அவரிடம் பழகி இருக்கிறாராம். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் உடன் எப்படியும் நமக்கு செட்டாகாது என்பது ஆரம்பத்திலேயே ஆயிஷாவுக்கு தெரியுமாம். இந்த நிலையில் அன்றைய டாஸ்க் நடந்த நேரத்தில் அசீம் திடீரென தன்னை தரைகுறைவாக பேசுவதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அப்படி கையில் செருப்பை எடுத்து விட்டேன். ஆனால் அப்படி செய்தது தவறு என்பது பிறகு எனக்கு புரிந்தது. நானும் அசீமிடம் மன்னிப்பு கேட்டேன். அதேபோல அசீம் என்னிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார் என்று கூறியிருக்கிறார்.

அசீம் சேவ் ஆக காரணம்

அசீம் சேவ் ஆக காரணம்

அது மட்டுமில்லாமல் என்னதான் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு அடுத்தவர்களை மட்டம் தட்டிக்கொண்டு பலமுறை கமல் இடம் திட்டம் வாங்கிக் கொண்டிருந்தாலும் அசீம் ஒவ்வொரு வாரமும் சேவ் ஆவதை குறித்து ஆயிஷா இதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் போல, பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பிக்ஸ் செய்து விட்டார்களாக இருக்கும். அதனால் தான் அசீம் என்னதான் செய்தாலும் அவர் ஒவ்வொரு முறையும் பாதுகாக்கப்படுகிறராக இருக்கும். சில நேரங்களில் அசீம் உண்மையாகவே இப்படி இருக்கிறாரே என்று கூட அவரை ரசிகர்கள் விரும்பலாம். அதனால் ரசிகர்கள் அவருக்காக ஆதரவு கொடுத்து வரலாம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்.

டைட்டில் வின்னர் இவர் தானாம்

டைட்டில் வின்னர் இவர் தானாம்

அதே நேரத்தில் இந்த சீசனில் அசீம் மற்றும் விக்ரமன் இருவரில் யாராவது ஒருவர் தான் டைட்டில் ஜெயிப்பார்கள் என்று அதிகமாக ரசிகர்கள் கருத்து கூறி வரும் நிலையில், ஆயிஷா கண்டிப்பாக ஷிவின் தான் பிக் பாஸ் டைட்டில் ஜெயிக்க வேண்டும். ஷிவின் தன்னுடைய விளையாட்டை ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய கருத்தில் சரியான முடிவுகளையும் எடுத்து வருகிறார். யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக ஷிவின்தான் அங்கே சரியான கருத்தை கூறுவார் என்று கூறி இருக்கிறார் .அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் வேறு யாரோடு என்னுடைய உறவு எப்படி இருக்கும் என்பதை சொல்ல முடியாது ஆனால் ஷிவினோடு என்னுடைய உறவு தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்று நெகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+