Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உண்மையாக அது நீங்கதான்” முன்னாள் மனைவியை பற்றி "அந்த குறை” சொன்ன அசீமை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரகடு பாயாக வலம் வந்து கொண்டிருக்கும் அசீமுக்கு ஆதரவு அதிகமாக இருந்தாலும், அவர் மனைவியை குறித்து பேசிய வார்த்தையை வைத்து இப்போது பலரும் கலாய்த்து வருகிறார்கள்.

அதிகமாக பிக் பாஸ் வீட்டிற்குள் ரசிகர்கள் பலர் விக்ரமனை பூமர் என்று கூறி வந்தனர். ஆனால் இப்பொழுது அசீம் தான் அந்த பதவிக்கு தகுதியானவர் என்று அவரை கலாய்த்து வருகிறார்கள்.

பெண் ரசிகைகளை கவர்ந்த போட்டியாளர்

பெண் ரசிகைகளை கவர்ந்த போட்டியாளர்

ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சிலர் டாப்பில் வலம் வந்து விடுகின்றனர். எதிர்பார்ப்பில் அதிகமாக இருந்தாலும் ஒரு சிலர் புஸ் என்று ரசிகர்களின் முன்பு பெயரை கெடுத்துக் கொண்டு வெளியே வந்து விடுகின்றனர். இது ஒவ்வொரு சீசனிலும் நடந்து கொண்டிருந்தாலும் தற்போதைய பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து சண்டை சச்சரவுகளில் நான் தான் கிங்க் என்று நினைத்துக் கொண்டு அடிக்கடி கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் அசீமுக்கு ஒரு பக்கம் ஆதரவு அதிகரித்துக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் நெகட்டிவ் கமெண்ட் களும் வருகிறது. பெண் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இடத்தை பிடித்திருப்பதை நேற்றைய எபிசோடில் கமல் முன்னிலையில் ரசிகர்கள் பலரும் நிரூபித்திருக்கின்றனர்.

உடையால் ஏற்பட்ட முதல் சண்டை

உடையால் ஏற்பட்ட முதல் சண்டை

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் இருக்கும்போது சக போட்டியாளர்களிடம் தன்னுடைய மனைவியை குறித்து குறை கூறி இருக்கிறார்." நான் என்னுடைய மனைவியை பிரிவதற்கு காரணம் அவள் எங்கே சென்றாலும் மாடன் உடை தான் அணிவேன் என்று சொல்வாள்,அது எனக்கு பிடிக்காது. ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் கூட நான் ஏன் ஸ்கர்ட் போட்டு வரக்கூடாது என்று கேட்பாள்" அதனால் தான் எங்களுக்குள் சண்டையே ஆரம்பித்தது முதல் முறை எங்களுக்குள் சண்டை வந்தது ஆடைக்கு தான் அதற்கு பிறகு தான் எங்களுக்கு பல கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

இதுவெல்லாம் என்ன அசீம்

இதுவெல்லாம் என்ன அசீம்

அசீம் ஏற்கனவே நான் என்ற கெத்தோடு சுத்தி வருகிறார். யார் முன்னிலையிலும் தன்னை யாராவது குறைத்து விட்டால் ஏற்றுக்கொள்ள முடியாதவர். ஆனால் அவர் அடுத்தவர்களை தரம் தாழ்த்தி நேருக்கு நேராகவே பேசி விடுவார் என்று இவர் மீது பல குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய சொந்த மனைவியை குறித்து இவருடைய மனநிலையை தெரிந்து கொண்ட நெட்டிசன்கள் இவர்தான் ஒரு அக்மார்க் பூமர் இந்த காலத்திலும் இப்படி எல்லாம் தடை விதித்தால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவர் இதுவரைக்கும் நான் மீடியாவில் இருப்பது தெரிந்தும் என்னுடைய மனைவி என்னை காதலித்து திருமணம் செய்துவிட்டு என்னோடு பிரச்சனை பண்ணிவிட்டு என்னை வேண்டாம் என்று விட்டு விட்டு சென்று விட்டார் என்று புலம்பி வந்த இவர் முதல் முறையாக இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி பேசியது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.

கேள்விகளும் ஆதரவும்

கேள்விகளும் ஆதரவும்

என்னதான் ரசிகர்கள் பலரும அசீமுக்கு ஆதரவாக ஓட்டு அளித்து அவரை பாதுகாத்து வந்தாலும், நெட்டிசன்கள் ஒரு சிலர் அவருடைய செயலை கலாய்த்து கொண்டு தான் வருகின்றனர். அந்த வகையில் தற்போது அசீம் மனைவியை குறித்து பேசி நெட்டிசன்களிடம் மாட்டி இருக்கிறார். ஏற்கனவே ரசிகர்கள் அசீமை கலாய்த்து கொண்டிருக்கும் போது, ரசிகர்கள் அசீமை கலாய்த்த ஒரு போஸ்ட்டை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த காஜோல் பகிர்ந்து இருக்கிறார். ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் ஆறுதல் சொல்லி தான் வருகின்றனர். எதிலும் சரியாக இருக்க வேண்டும் என்று அவர் நினைப்பதில் தவறு இல்லையே என்று கருத்து கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+